Saturday, July 16, 2016

இரத்ததின் மாபெரும் சக்திகள்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&

இரத்ததின் மாபெரும் சக்திகள் 

MOTIF -3 ( SECREATIONS ) விரைவில் ---------------------
மிக சக்தி வாய்ந்த தாந்திரீக பிரயோக முறைகள்
*********************************************
*********************************************
எச்சரிக்கை :
***************
இந்த தொடர் கட்டுரைகள் மிகவும் ஆபத்தான பிரயோக முறைகளை நோக்கி உங்களை இழுத்து செல்லும் . இதை சார்ந்த பதிவுகள் தாந்திரீக முறைகளில் மிகவும் இரகசியமாக பாதுகாத்து வந்து உள்ளது ஆகும் ; இதை சார்ந்த அறிவு உங்களுக்கு தேவை என்பதால் உங்களுக்கு இதில் சிலவற்றை எடுத்து உரைகிறேன் . இதை முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு பிரயோகம் செய்து பார்க்கவும்.
நமது இரத்தம் மாபெரும் சக்தி இயக்கம் கொண்ட ஒரு பொருள் இதன் இயக்கம் அபாரம் ஆனது.இந்த இரத்தத்தை நம் ஆசையை நிறைவேற்ற இரு முறைகளில் பயன்படுத்தலாம் 1,சூட்சும பிரயோகம் 2.ஸ்தூல பிரயோகம் இதை நாம் பார்க்கும் முன் இரத்தத்தை பற்றிய சில ஆய்வுகளை மேற்கொள்வோம்.
நம் இரத்ததில் ஒரு ஆணி செய்யும் அளவிற்கு இரும்பு சத்து நிறைந்து உள்ளது. காந்த சக்தியை வெளிபடுத்தும் திறன் கொண்டது. நம் இரத்தத்தில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து கொண்டே இருக்கும் ; இந்த கதிர்வீச்சுகள் ஆன்மாவில் இருந்து புறப்படும் கதிர்வீச்சுகளின் தன்மை போலவே அமைந்துள்ளது . இந்த கதிவீச்சுகள் மூலமாகதான் பொருள் உலகத்திற்கும் ( உடல் ) பொருளற்ற உலகத்திற்கும்(ஆன்மா ) ஒரு தொடர்பு ஏற்படுகின்றது . ஸ்தூலமாக இரத்த இயத்தில் மாற்றம் ஏற்பட்டால் நம் மனதையும் /உடலையும் பாதிகின்றது ; இதே போல் இரத்தின் சூட்சும கதிர்வீச்சுகளின் மாற்றம் நம் ஆன்மாவை பாதிக்கின்றது .
நம் இரத்தம் மன செயல்களின் வாகனமாக செயல்படுகின்றது ; இதன் வழியாக நமக்கும் பிரபஞ்சத்திற்கும் ஒரு தகவல் பரிமாற்றம் நடந்துகொண்டே இருகின்றது. இதற்கு சித்தர் நூல்களில் இருந்து பல உதாரணம் தரலாம் . சித்தர் நூல்களில் மனைவியோடு கலவியில் இடுப்படும்போது அங்கங்களை தீய சொற்கள் கொண்டு கூறி வர்ணித்து இந்த போகத்தால் குழந்தை பிறந்தால் அது திருநங்கையாக பிறக்கும் என்று குறிப்பு தருகிறார்கள் . இதில் சுக்கிலமும் சிரோநிதமும் பிரபஞ்சத்தோடு ஒரு தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்தி உள்ளது அதனால் தான் அந்த கரு ஒரு திருநங்கையாக விதைக்கப்பட்டு உள்ளது .
மேலும் இதை போல் நுற்று கணக்கான அறிவுரைகள் சித்தர்கள் நமக்கு கூறி உள்ளார்கள் . இதில் இருந்து நாம் பல இரகசிய கோட்பாடுளை வகுத்து எடுக்கலாம் .
பிராணன் இன்றி எந்த ஒரு மந்திர கிரியைகளும் பலன் தராது .அனைத்து விதமான மந்திர கிரியைகளுக்கும் இந்த பிராணன் தான் உயிர் நாடியாக செயல்படுகின்றது . இதை பிரதிஷ்டை செய்தால் தான் எந்த ஒரு தாந்திரீக பொருள்கள் , மூர்த்தங்கள் நமக்கு பலன் அளிக்கும் . நம் இரத்தம் இயற்கையாகவே பிராண பிரதிஷ்டை செய்யபட்டு உள்ளது ; இதில் அபார மந்திர ஆற்றல் நிரம்பி உள்ளது .உலகில் உள்ள அனைத்து தாந்திரீக பொருள்களில் இந்த இரத்தம் தான் மிகவும் சக்தி வாய்ந்தது , இதன் செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால் இதன் மகத்துவம் உங்களுக்கு புரியும் .
இரத்ததின் ஸ்தூல பிரயோகம் ஒரு உதாரணம் :
தவறான எண்ணம் கொண்ட பெண்களிடம் செல்லும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் , உங்களை வசியம் செய்து அவர்களில் அடிமையாக அவர்கள் ஒரு தாந்திரீக முறையை மேற்கொள்வார்கள் ;அவர்களின் மாதவிடாயோடு ( மாதவிடாய் காலங்களில் தினம்தோறும் பெண்களின் சூட்சும சரீரம் குறிப்பிட்ட ஒரு தேவதையால் ஆட்கொள்ளபடுகிறது ; பெண்கள் சூட்சும சரிரத்தில் சொல்லப்பட்ட தேவதையாக மாதவிடாய் காலங்களில் காட்சி அளிப்பார்கள் ; இந்த தேவதையின் தன்மைக்கு ஏற்றால் போல் அவர்கள் உடல் மற்றும் உள்ளத்தில் ஒரு சக்தி பிரவாகம் ஏற்படுகின்றது ) குங்குமபூ சேர்த்து அரைத்து நீங்கள் சாப்பிடும் உணவில் கலந்து விடுவார்கள் ; இதன் விளைவாக நீங்கள் அவர்களிடம் வசியம் ஆகி அவர்கள் சொல் பேச்சை கேட்கும் தலையாட்டி பொம்மையாய் ஆகி விடுவீர்கள் இதற்கு மந்திரமோ ; இல்லை யந்திரமோ தேவையில்லை ; அவர்கள் அந்த நாட்களில் ஒரு குறிப்பிட்ட நாளை தேவைக்கு ஏற்றாபோல் ( அந்த தேவதையின் சக்திக்கு ஏற்றால் போல் ) , தேர்வு செய்து பிரயோகம் செய்தார்கள் என்றால் அவர்கள் எண்ணிய வாரே காரியம் இனிதே நடக்கும்
இந்த ஸ்தூல பிரயோக முறையை சந்திரனின் ஓட்டத்தை கணக்கில் கொள்ளாமல் பிரயோகம் செய்தால் தோல்வியில் முடிய வாய்ப்பு உள்ளது இதன் காரணம் பின்வரும்மாறு . விண்ணில் சந்திரனின் நிலை பூமியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .இதனால் பூமியில் உள்ள நீர்களின்(கடல்,நதி ) குணத்தில் ஒரு மாற்றம் ஏற்ப்படுகிறது இதே போல் மனிதனின் உடலில் உள்ள நீரில் (இரத்தம்) பாதிப்பு ஏற்படுகிறது .இந்த சூட்சுமத்தை உணர்த்து கொண்டால் இரத்தத்தை கொண்டு பல சித்துகள் விளையாடலாம் .
இதன் சூட்சும பிரயோக முறையை அடுத்த பதிவில் காணலாம்
தொடரும் ....

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&