Friday, July 1, 2016

அடிப்படை தாந்திரீக நீர் பிரயோக முறை

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

அடிப்படை தாந்திரீக பயிற்சி பாகம் -2
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம் ஆசைகளை நிறைவேற்றி கொள்ள அடிப்படை தாந்திரீக நீர் பிரயோக முறை
**************************************************************************
நீர் ஆனது கட்டளைகளை எடுத்து செல்லும் திறன் உள்ளது என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது , கட்டளைகளுக்கு ஏற்றாற் போல் நீரின் சூட்சும சரீரத்தின் வடிவம் மாற்றம் அடைகின்றது ; இந்த கட்டளைகள் நீரின் அணுவில் பதிவாகிறது ; இந்த நீரின் தன்மையை நாம் தாந்திரீக பிரயோக முறையில் பயன்படுத்தலாம்

தாந்திரீகர்கள் எந்த செயலையும் ஒரு ஆன்மீக கிரியையாக செய்து அதன் மூலமாக பயன் பெறுவார்கள் . ஒரு சாதாரணமான நீர் அருந்தும் செயலை கூட ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கிரியையாக செய்வார்கள்.
தாந்திரீகர்கள் நம் வாழ்வில் ஒளி விச , அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த பல தாந்திரீக கிரியைகளை நமக்கு தந்து உள்ளார்கள் . நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் ஒரு தாந்திரீக கிரியையாக மாற்றி அமைக்கலாம்.

இந்த தாந்திரீக நீர் அருந்தும் முறையை நீங்கள் நாள் முழுவதும் எல்லா முறையையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை , காலை பொழுதில் குடிக்கும் முதல் குவளை நீரை ; இந்த முறையை கொண்டு உச்சாடனம் செய்யுங்கள் , பின்பு இரவு படுக்க செல்லும் அருந்தும் கடைசி நீரை இந்த கிரியை கொண்டு உச்சாடனம் செய்யுங்கள் .
அடிப்படை தாந்திரீக நீர் பிரயோக முறை படிநிலைகள்

இந்த பயிற்சி முடியும் வரை அடிவயிறு மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்

1.இந்த பிரபஞ்சம் உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்க்காக இந்த நீரை உங்களுக்கு வழங்கியுள்ளதாக என்னி இந்த நீரை பார்த்து ஆன்மார்த்தமாக சிரியுங்கள்

2.நீங்கள் அருந்தும் நீர் சுத்திகரிக்கும் சக்தியின் ஸ்வரூபமாக இருக்கின்றது என்று உணருங்கள் ; இதனால் உங்கள் மனம் , உடம்பு முற்றும் சுற்றுசூழல் பரிசுத்தமாகும் என்ற தத்துவத்தை சிந்தியுங்கள் . நீரை எந்த பாத்திரத்தில் ஊற்றுகிறமோ அதன் வடிவத்தை இது எடுத்துக்கொள்ளும் அதை போல் இந்த நீர் உங்கள் ஆசைகளும் ஒரு ஸ்தூல வடிவம் அமைக்க உதவும் என்று எண்ணுங்கள்

3.நீங்கள் அருந்தும் நீர் சுத்திகரிக்கும் சக்தியின் ஸ்வரூபமாக இருக்கின்றது என்று உணருங்கள் ; இதனால் உங்கள் மனம் , உடம்பு முற்றும் சுற்றுசூழல் பரிசுத்தமாகும் என்ற தத்துவத்தை சிந்தியுங்கள்

4.நீரை நன்றாக உற்று கவனியுங்கள் , அதன் நிறமற்ற அழகை ரசியுங்கள் , அதை உங்கள் சிந்தனையினால் கட்டி அனைத்து அதன் பரிசுத்தத்தன்மையை சுவாசியுங்கள் , அதன் சுத்திகரிக்கும் தன்மையை பற்றி சற்று சிந்தியுங்கள்

5.நீங்கள் நீர் அருந்தும் முன் சற்று நேரம் உங்கள் மூச்சை நன்றாக அடி வயிறு வரை இழுத்து விடுங்கள் ( மூச்சு பயிற்சி- அடிப்படை தாந்திரீக பயிற்சி -1 )

6.நீங்கள் உங்கள் ஆசையை நன்றாக கற்பனை செய்யுங்கள் . இது காதல் , பணம் , திருமணம் , நோய் போன்ற எந்த விஷயமாகவும் இருக்கலாம் . அந்த விஷயம் நடந்து முடிந்தால் எப்படி இருக்குமோ அப்படி கற்பனை செய்யுங்கள்

7.உங்கள் ஆசையை / இச்சையை உங்கள் நினைவில் வைத்து கொண்டே , குவளையில் நீரை நிறப்புங்கள்

8.குவளை முழுவதும் நிரம்பிய உடன் , அந்த குவளையின் மேல் ஒரு முக்கோண வடிவில் உங்கள் இரு கைகளையும் படத்தில் காட்டியதை போல் வைக்கவும் .

9. இப்பொழுது நீங்கள் முக்கோண வடிவின் நடுவில் உள்ள நீரை முழு சிந்தனையுடன் பார்க்கவும் , இந்த நீர் உங்கள் ஆசையால் / இச்சையால் சக்தி ஊட்ட படுவதாக உணரவும் , உங்கள் ஆசை நீரின் அணுக்களிடம் வரை சென்று , அதனுடன் இணைத்து விட்டதாக கற்பனைசெய்யவும்

10.இப்பொழுது இந்த நீரை நீங்கள் மெதுவாய் அருந்துங்கள் , இந்த நீர் உங்கள் உடலையும் , உள்ளதையும் உங்கள் ஆசையினால் நிரப்புவதாக உணருங்கள் ; இந்த நீர் உங்கள் ( தேவைக்காக ) உடலில் எப்படி பல பரிணாமங்களில் மாற்றபடுகின்றதோ அதே போல் உங்கள் ஆசையும் பிரபஞ்சத்தினால் பல பரிணாமங்களுக்கு உட்படுத்தபடுகின்றதாக எண்ணுங்கள் .

11.பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவியுங்கள்

நீங்கள் காண்பது தாந்திரீக நீர் பிரயோக முறையில் சில முத்திரைகள்
இது வெறும் அடிப்படைதான் சக்திவாய்ந்த முத்திரைகள் , நிறம் , மந்திர ஜபம் , சந்திரனின் இயக்கம் , நீரின் குணம் , மூலிகைகள், குவளையில் தன்மை , நிறம் இவை அனைத்தையும் நாம் நம் இச்சைக்கு ஏற்றாற் போல் பிரயோகம் செய்தால் நாம் எண்ணிய காரியம் கண்டிப்பாக நம் காலடியில் வந்து விழும்
இதில் இன்னும் மேலே கூறபடாத அற்புத இரகசிய தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளன , இதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&