Sunday, July 24, 2016

நம் அனைத்து துயரத்தையும் போக்கும் பேரா ஸிம்போலஜி -பாகம் -1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

******************************************************************
நம் அனைத்து துயரத்தையும் போக்கும் பேரா ஸிம்போலஜி -பாகம் -1
*******************************************************************

பேரா ஸிம்போலஜி நம் அனைத்து துயரத்தை போக்கும் ; நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் ஒரு அற்புத பிரயோக முறை ஆகும். இந்த பிரயோக முறை சக்தி வாய்ந்த மெய்ஞான தத்துவங்களையும் ; நுட்பமான விங்ஞான கோட்பாடுகளையும் உள்ளடக்கி உள்ளது .

இந்த பதிவில் நாம் இந்த முறையில் அமைந்து உள்ள ஒரு சிறு பிரயோக முறையை பற்றி பார்ப்போம் .

குரு கிரகத்தின் பூர்ண அருள் கிட்ட
**************************************************

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுபகிரகம் என்ற அமைப்பையும் பெருமையையும் பெற்ற ஒரே கிரகம் பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் இரண்டு விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய "பணம்", இரண்டாவது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய "குழந்தைசெல்வம்". இந்த இரண்டையும் அளிக்கக்கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவிற்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம் கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால்தான் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

**********************************************************************************
இந்த பதிவில் நாம் குருவின் சூட்சும ( எண் ) யந்திரத்தை எப்படி பயன்படுத்தி அவர் அருளை பெறலாம் என்பதை பார்ப்போம்
***********************************************************************************
கீழே படத்தில் குருவின் எண் எந்திரம் கொடுக்கபட்டு உள்ளது , பொதுவாக ஜோதிடர்கள் இந்த யந்திரத்தை ஒரு உலோகத்தில் வரைந்து நம்மிடம் வைத்துக்கொள்ள சொல்வார்கள் இந்த யந்திரத்தை நாம் உலோக யந்திரங்களில் கீறி வைத்து கொண்டால் சொற்ப பலன்களே நமக்கு கிட்டும் ; மேலும் இந்த யாத்திரம் குருவின் பொதுவான எண் எந்திரம் தான் , மற்றும் படத்தில் இந்த யந்திரம் பக்கத்தில் மேலும் சில யந்திரங்கள் காட்டப்பட்டு உள்ளதை கவனிக்கவும் ; இந்த யந்திரம் குருவின் சூட்சும எண் யந்திரங்கள் ஆகும் ; இது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மிகுந்த ஆற்றலை வாரி வழங்கும் .
இதை போல் பல யந்திரங்கள் குருவுக்கு உண்டு ; நாம் இந்த பல தரப்பட்ட யந்திரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரின் தேவைக்கு ஏற்றால் போல் குருவின் யந்திரத்தை தேர்ந்து எடுத்து பிரயோகம் செய்தால் மிக அற்புதமான பலன்கள் நடக்கும் .

குருவின் எண் எந்திரம் பல இரகசிய பிரயோக முறைகளை உள்ளடக்கி உள்ளது . இந்த யந்திரத்தில் எண்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் பொறுத்தப்பட்டு உள்ளது ; இந்த அமைப்பின் காரணத்தினால் ஒரு வித சக்தி பிரவாகம் வெளிப்படும் . பொதுவாக இந்த விஷயங்கள் தான் ஜோதிடர்களுக்கு அல்லது தாந்திரர்களுக்கு தெரிந்திருக்கும் .

இதில் இன்னும் சில அதி அற்புத பிரயோக முறைகள் உள்ளது ; இதில் சிலவற்றை பார்ப்போம்

1.இந்த யந்திரத்தில் உள்ள எண்களின் வரிசை கிரமம் , மந்திர உச்சாடனத்திற்கு இரகசிய கோட்பாடினை சுட்டி காட்டிக்கிறது , அதாவது இந்த சதுர யந்திரத்தில் நுழைவாயிலை சரியா தேர்ந்து எடுத்து , இந்த யந்திரத்தில் கொடுக்கப்பட்டு உள்ள எண்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போல் மந்திர உச்சாடனம் செய்தால் நம் ஆசை அனைத்தயும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.

2. ஆதி காலத்தில் வாழ்ந்த மெய்ஞானிகள் கிரகங்களின் சக்திகளை வசீகரம் செய்யும் அதி அற்புத குறியீடுகளை ( இவை நம் ஆழ் மன சக்திகளை வெளிப்படுத்தும் ) நமக்காக தந்து உள்ளார்கள் ; இந்த குறியீடுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சப்தங்கள் ( மொழி ) , எண்களோடு ஒத்துபோகிறது .இந்த குறியீடுகளை குரு ( மற்ற கிரகத்தின் ) கிரகத்தின் யந்திரத்தில் உள்ள எண்களுக்கு பதிலாக பிரயோகம் செய்தால் , மிக அற்புத பலன்கள் நம் வாழ்வில் நடக்கும் .

மேலே சொல்லபட்டு உள்ள இரண்டு எண் யந்திர பிரயோக சூட்சுமங்களை ; உச்சிஷ்ட ஜெப பிரயோக முறையில் பயன்படுத்தினால் (உச்சிஷ்ட ஜபம் ஜெபங்களின் ராஜா வாகும் ; இந்த ஜெப பிரயோகத்தினால் நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம் ) நாம் ஆசைப்படும் அனைத்து விஷயங்களும் நம் மடியில் வந்து தானாக விழும் .
இந்த பதிவில் நான் கூறியுள்ளது சாதாரண ஜெப முறை (உச்சிஷ்ட ஜெப முறை அல்ல )

கீழே கொடுக்க பட்டு உள்ள குருவின் குறியீடு ( எண் ) யந்திரத்தை தினம் தோறும் , கொடுக்கபட்டு உள்ள எண்ணிற்கு ஏற்றால் போல் ஜெபத்தை செய்யவும் , அந்த எண்ணிற்கு உரிய குறியீட்டை பார்த்து கொண்டே செய்ய வேண்டும் .( முதல் நாள் யந்திரத்தில் உள்ள ஒன்றாவது எண் என்ன என்று குறித்து கொள்ளவும் ,மற்றும் இந்த எண்ணிற்கு உரிய குறியீட்டை குறித்து கொள்ளவும் , பிறகு கொடுக்கப்பட்டுலுள்ள எண்ணின் அளவிற்கு ஜெபிக்கவும் ( குருவின் மூல மந்திரத்தை ) இரண்டாவது நாள் முதல் நாள் செய்ததை போல் செய்யவும் ; இந்த யந்திரத்தில் எல்லா எண்களையும் முடிக்கும் வரை ஜெபத்தை தொடரவும் ) இந்த யந்திரத்தில் காட்டில்வுள்ள அம்பு குறியீடு வழியாகத்தான் இந்த பிரயோக முறையை செய்ய வேண்டும்.

மந்திர உச்சாடனம் செய்ய நேரம் இல்லாதோர் , குருவின் குறியீடு யந்திரத்தை தினம்தோறும் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் ; அல்லது இந்த குறியீடு (எண் ) யந்திரத்தை தினம்தோறும் உங்கள் கோரிக்கையை ( குரு கிரகத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் ) மனதில் வைத்து கொண்டு வரையவேண்டும் ( இது ஒரு விதமான லிகித ஜபம் முறையாகும்
ஜபிக்க வேண்டியே மந்திரம் :ஓம் ப்ரூம் ப்ருஹஸ்பதயே நமஹ (வேறு ஒரு தாந்திரீக மந்திரமும் உண்டு அதை நாம் வேறு ஒரு பதிவில் காண்போம்)

உச்சிஷ்ட ஜெபம் ஏன் ஜெபங்களின் ராஜாவாகும் ?
**************************************************************************
1. இந்த ஜெப முறையில்தான் ஜெபத்தோடு மூலிகை பிரயோகமும் செய்யபடுகின்றது
2. சக்திவாய்ந்த சூட்சும யந்திர பிரயோகமும் இந்த ஜெப முறையில் உண்டு
3. மந்திர ஆற்றல் வெளிப்பட கடினமான ஜெப எண்ணிக்கைகள் தேவை இல்லை
4. பேரா ஸிம்போலஜி முறையில் இதை தவிர வேற எந்த ஜெப முறையும் மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்தாது
5. இந்த ஜெப முறை வழங்கும் சௌபாக்கியம் மற்றும் சம்பத்துக்களை வேறு எந்த ஜெபமுறையும் வழங்காது.
6. இந்த ஜெப முறையின் ஆற்றல் வேறு எந்த ஜெப முறையிலும் கிடையாது
7. அனைத்து விதமான மந்திர யந்திர பிரயோக முறைகளிலும் இதை பயன்படுத்தலாம்
உச்சிஷ்ட ஜெப பிரயோகத்தை பற்றி தெரிந்துகொள்ள : 9840300178




ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&