Friday, July 1, 2016

அடிப்படை மூச்சு பயிற்சி

ஓம் நம சிவாய
^^^^^^^^^^^^^^^^^^^^^^
அடிப்படை தாந்திரீக பயிற்சி பாகம் -1
##################################

அடிப்படை மூச்சு பயிற்சி
************************************
இந்த பதிவில் நான் உங்களுக்கு கூறியுள்ள மூச்சு பயிற்சி மிகவும் எளிமையான பயிற்சி ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது , இதை உலகெங்கும் உள்ள தாந்திரீகர்கள் அடித்தள பயிற்சியாக தன் மாணவர்களுக்கு சொல்லி தருகின்றார்கள் . இந்த மூச்சு பயிற்சியை நீங்கள் சில நாட்கள் செய்து வந்தால் உங்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள் ; இந்த பயிற்சி செய்வதால் எந்த விதமான பக்க விளைவுகள் இல்லாதது .

இந்த மூச்சு பயிற்சி தாந்தீரிக க்ரியைக்கு தேவையான பிராண சக்தியை நம் உடலுக்கு வழங்கும்.இந்த பயிற்சியை செய்யும் பொழுது உங்கள் மூட்டு இணைப்புகள் விரைப்பாக இல்லாமல் தளர்வாக வைத்தால் உத்தமம்.

இந்த மூச்சு பயிற்சியை தினம் காலை மாலை பதினைந்து நிமிடங்கள் செய்து வாருங்கள் . மிகவும் இறுக்கமான ஆடைகள் அணியாமல் , இந்த பயிற்சியை செய்தால் மிகவும் சிறந்த பலன் நமக்கு கிடைக்கும். இதை செய்து அரைமணி நேரத்திற்க்கு பின்பு உணவு உண்ணவும் அல்லது தூங்க செல்லவும்.

இந்த பயிற்சி, கால் அணிகள் இல்லாமல் செய்ய வேண்டும். பாட்டு , இசையை கேட்டு கொண்டு இந்த பயிற்சியை செய்தால் நமக்கு இதனால் ஏற்படும் நன்மையான பலன்கள் ஏதுவும் ஏற்படாது . வானிலை , சுற்று சூழல் மாசுபட்டு இருக்கும் சூழலில் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம் .
இந்த பயிற்சி செய்த பின் காமிய கர்மங்கள் செய்து வாருங்கள் , அதில் வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

ஒரு குழந்தை பிறந்த உடன் , அது ஆழமான மூச்சை இழுத்து விடும் இதுதான் அந்த குழந்தையின் முதல் செயலாய் இருக்கும்
நாம் உணவு இன்றி சில வாரங்கள் உயிருடன் இருக்கலாம் , நீர் இன்றி சில வாரங்கள் இருக்கலாம் ஆனால் மூச்சின்றி சில நிமிடங்கள் கூட இருக்க முடியாது . நம் மூளைக்கும் மூச்சுக்கும் நேரடி தொடர்பு உண்டு , ஒரு மனிதனின் ஏதோ ஒரு காரணத்தால் மூச்சு விட்டால் ; முதலில் மூளை தான் பாதிப்பு அடைகின்றது

இந்த மூச்சு பயிற்சி செய்யும் பொழுது நம் முதுகு தண்டு பூமி சார்ந்து நேராக இருந்தால் மிகுதியான நன்மைகள் கிடைக்கும் , நம் கீழ் வயிற்று பகுதியும் நன்றாக விரிந்து கொடுக்கும் .
சிறு குழந்தைகள் அடிவயிறு உப்பும் படிதான் மூச்சு காற்றை சுவாசிக்கும் , இதனால் தான் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாய் இருக்கும் ; மன அமைதியும் இவர்களுக்கு இருக்கும்
தாந்திரிக மூச்சு பயிற்சியின் படிநிலைகள் :

1.ஒரு சாந்தமான இடத்தில் நேராக நிற்கவும் ( வானத்தை பார்த்து படுத்தும் செய்யலாம் )

2. படத்தில் காட்டியதை போல் கழுத்தில் இருந்து அடி வயிறு வரையிலும் ஒரு பாட்டிலை கற்பனை செய்யவும்

3.உங்கள் மூக்கு வழியாக மெதுவாக காற்றை சீராக உள்ளே இழுக்கவும் , அது அடிவயிறு வரை சென்று உங்கள் வயிறு நிரம்புவதை உணரவும்.

4. உங்கள் கவனம் வயிற்றின் மேல் இருக்கட்டும்

5. காற்றை உள்ளே இழுக்கும் பொழுது உங்கள் வயிற்றையும் , உடலையும் சாந்தமாக வைத்திருங்கள் ; இதனால் உங்கள் நுரைஈரல் முழுமையாக காற்றினால் நிரப்பப்படும்

6.உள்ளே சென்ற மூச்சை மெதுவாக வாய் வழியாக வெளியேற்றுங்கள்( எக்காரணம், கொண்டும் மூச்சை வாய் வழியாக உள்ளே இல்லுக்கூடாது )

7. இதே போல் குறைந்த பட்சம் ஒன்பது முறை செய்யவும். சிறிது நாட்கள் கழித்து கூடுதலாகவும் செய்து கொள்ளலாம்

இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உடலில் பிராண சக்தியின் இயக்கம் அதிகரிக்கும்

முதலில் சில நாட்கள் படத்தில் காட்டியதை போல் வானத்தை பார்த்து படுத்து , உங்கள் அடிவயிற்றில் சில புத்தகத்தையோ அல்லது இதற்கு ஈடான பொருள்களையோ வைக்கவும் ; இதை வைத்த பிறகு மேலே கூறிய மூச்சு பயற்சியை செய்து வாருங்கள் ; இதனால் உங்கள் வயிற்று பகுதி உறுதியாகும் ; இதில் இன்னும் ஒரு சூட்சுமம் உள்ளது ( பிராண சக்தியை இயக்க இது வழி வகுக்கும் )


இந்த பயிற்சி தாந்திரிக கலையின் அடிப்படை பயிற்சி ஆகும் , இதில் இன்னும் பல நுட்பங்கள் உள்ளன இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய
^^^^^^^^^^^^^^^^^^^^^^