Sunday, July 24, 2016

தொழில் வளர்ச்சி தூபம்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

என் தாந்தீரீக பணியில் என்னை தட்டி கொடுத்து , எனக்கு வேண்டிய உதவிகளை செய்து என் பணியை வெற்றிகரமாக முடிக்க தன் சந்தோஷங்களை விட்டு கொடுத்த என் மனைவிக்கு நான் இன்றைக்கு ஒரு நன்றி தெரிவிக்கின்றேன்.

என் மனைவி உச்சிஷ்ட கணபதியின் தாந்திரீக வழிபாட்டிற்கு எனக்கு (அவளிடம் ஒன்றும் கூறவில்லை ) வெப்பமரத்து புல்லுருவியை கொண்டு வந்து என்னை ஆச்சரியத்தில் சிலிர்க்கவைத்தால் .

உச்சிஷ்ட பெயர் விளக்கம் :
***************************************
***************************************

உச்சிஷ்டம் என்ற வார்த்தைக்கு மீதம் இருப்பது என்பது பொருளாகும். வேதம் பரம் பொருளை விளக்கும் போது நேதி -நேதி என்று ஒவ்வொன்றையும் இல்லை , இல்லை என்று தள்ளுகிறது . இவ்வாறு எல்லாவற்றையும் தள்ளிய பிறகு மீதம் இருக்கும் தத்துவமே உச்சிஷ்டமாகும் . அவரே பிரம்மம் , அவரே உலகமாக ஆகியிருக்கிறார்.

முழுமுதற் பொருளாக திகழும் உச்சிஷ்ட கணபதிதான் அந்த உண்மை பொருள்.சத்தியமான மெய்ப்பொருள் அவர்தான். சத்தியமான மெய்ப்பொருள் அவர்தான்.சகல தருமங்களும்,சத்தியங்களும் இவரிடம்தான் அடங்கியிருக்கின்றன.இந்த உச்சிஷ்ட கணபதியின் பேரருளால் தான் மகரிஷிகள் இந்த பேருண்மையை;

அறிந்தார்கள்,ஒழுக்கத்திலும்,பிரம்மச்சரியத்திலும் அவர்கள் வெற்றி கண்டதும் உச்சிஷ்ட கணபதியின் திருவருள் துணை காரணமாகத்தான்.

உச்சிஷ்ட ஜெபம்
************************
************************
உச்சிஷ்ட ஜெபம் மிக சக்தி வாய்ந்த தாந்தீரீக முறை , இந்த ஜெபமுறை நமக்கு சகல விதமான சௌபாக்கியங்களையும் வழங்க கூடியது . இந்த ஜெபமுறையை கொண்டு நீங்கள் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் .இந்த சக்தி வாய்ந்த ஜெபமுறை என் குருநாதர் ( ஸ்ரீ தத்புருஷ கோபால் ) நாவிலிருந்து வந்த உபதேசம் மற்றும் கணபதி அருளால் உருவாக்கம் பெற்றுள்ளது.

உங்களில் சிலர் இதற்கு முன் ஒரு நல்ல ஆசான் மூலமாக உச்சிஷ்ட கணபதி உப்பாசனையை கற்று , பயிற்சி செய்து வந்து இருப்பீர்கள் ; ஆனால் இந்த ஜெபமுறை முற்றிலும் புதுமையான ஒன்று ; மிகவும் சக்திவாய்ந்தது ; நமக்கு சகல விதமான சித்திகளை வழங்க கூடியது .

இந்த முறையில் மிக சக்திவாய்ந்த படத்தில் காட்டியதை ( இது ஒரு உதாரணம் தான் , இந்த ஜெப முறையில் இன்னும் பல சக்தி வாய்ந்த ரகசியங்கள் உள்ளது ) போல் தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளது . இந்த பிரயோக முறைகள் பயிற்சி செய்ய மிகவும் எளிதானது மற்றும் நாம் எண்ணிய பலன்கள் விரைவில் நடக்கும் என்பது உறுதி

தொழில் வளர்ச்சி தூபம்
***********************************
***********************************
இதற்கு தேவையான பொருள்கள் :

சாம்பிராணி இரண்டு பாகம் , ஒரு பாகம் "லவங்க பட்டைபொடி" மற்றும் ஒரு பாகம் "கிருஷ்ணதுளசி" இலை பொடி

இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக கலந்து , உங்கள் வியாபார ஸ்தலத்தில் புகை போட்டால் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் உங்கள் வியாபாரம் பெருகும்

உச்சிஷ்ட ஜெப பிரயோகத்தை பற்றி தெரிந்துகொள்ள : 9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&