Wednesday, July 13, 2016

நாம் நினைக்கும் வாழ்க்கையை வாழ வைக்கும் எலிகுவா


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

*************************************************************************************
நாம் நினைக்கும் வாழ்க்கையை வாழ வைக்கும் எலிகுவா
**************************************************************************************

என் மாணவர்கள் , நண்பர்களை ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கடித்த இவரின் அருள் மழை .

எலிகுவா ஆப்பிரிக்கா நாட்டின் கணபதி ஆவார் . இவரை வணங்காமல் பிற தேவதைகளை ஆவாஹனம் செய்ய முடியாது . இவர் ஸ்ரீ பைரவரை போல் வாயில் காப்பானாகவும் செயல் படுவார் .

இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் , இவரை வழிப்பட்டால் நாம் நினைத்த காரியம் நமக்கு எளிதில் கை கூடும்.இவரை வழிபடுவது மிகவும் எளிது ; என் மாணவர்கள் இவரை வழிப்பட்டு மிகுந்த நன்மை அடைந்துள்ளார்கள் .
இந்த பதிவில் நாம் இந்த தேவதையை எளிமையாக வழிபட இருண்டு முறைகளை பார்ப்போம் :

1. தேவதைகளுக்கு கோரிக்கை அனுப்பும் முறை
2. குறியீட்டை வணக்கும் முறை

தேவதைகளுக்கு கோரிக்கை அனுப்புதல்

தேவதைகளுக்கு கோரிக்கை அனுப்புதல் ஒரு மிக சக்திவாய்ந்த தாந்திரீக கிரியை , இதை நாம் பல வழிகளில் செய்யலாம் . இந்த பதிவில் ஒரு காக்தித விண்ணப்பத்தை கொண்டு எப்படி கோரிக்கையை அனுப்பலாம் என்று பார்ப்போம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ள காகித விண்ணப்பம் இவைகளை உள்ளடக்கி உள்ளது; குறிப்பிட்ட தேவதையை ஆவாகனம் செய்ய அந்த தேவதையின் எந்திரம் ; பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் குறியீடு மற்றும் ராசி குறியீடு ( இன்னும் மிக சக்திவாய்ந்த படிவத்தில் பல குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றது ) கோரிக்கையை அனுப்ப தேவதையைக்கு புரிந்த சூட்சும அக்ஷரங்களை கொண்டு எழுத்துப்பட்ட விண்ணப்பம்.

கோரிக்கை படிவத்தை பதிவிறக்கம் செய்து , குறைந்தது ஐம்பது நகல்கள் எடுத்து வைக்கவும் . இந்த படிவத்தில் கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும் வட்ட குறியீடடின் மேல் உங்கள் பெயரையும் ; உங்கள் பெயருக்கு கீழ் கோரிக்கையையும் எழுதவும் . ஒரு இரும்பு சட்டியை வைத்து கொள்ளவும் , இந்த இரும்பு சட்டியில் நில கரி துண்டுகளை போட்டு வைக்கவும் , இந்த கரித்துண்டுகளை பச்சை கற்பூரம் கொண்டு எரி மூட்ட வேண்டும் ; இதை நன்றாக கௌந்துவிட்டு எரிய போதுமான அளவு நெய் விடவும்.

இப்பொழுது உங்கள் விண்ணப்ப காகிதத்தை , அக்னியில் விடவும் , இந்த காகிதம் எரியும் பொழுது உங்கள் கோரிக்கை எலிகுவா மூலமாக குறிப்பிட்ட தேவதைக்கு சென்று அடைவதாக உணரவும் . எலிகுவாவிற்கு நன்றி தெரிவித்து சிறிது இனிப்பு பக்ஷணத்தை அக்னியில் போடவும் (கடலை மிட்டாயை , பேரிச்சை , திராச்சை , பப்பாளி துண்டுகள்). பிறகு அந்த அக்னியில் பீடி அல்லது சுருட்டை வைக்கவும்( இது மிகவும் முக்கியம் ) .இதே போல் தினம் தோறும் ( இருப்பது நாட்களுக்கு )செய்யவும்
உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது என்று அவர் உங்களுக்கு உணரத்தினால் , இந்த கிரியையை நிறுத்தி விடலாம்

கீழே குடுத்து உள்ள சம்பவங்கள் ஏதாவது ஒன்று உங்களுக்கு நடந்தால் அவர் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிடுவார் என்று அர்த்தம் ( நீங்கள் பூஜையை நிறுத்தி விடலாம் )
1. கோழி சம்பந்தமான விசித்திர சம்பவங்கள்
2. குழந்தை சம்பந்தமான விசித்திர சம்பவங்கள்
3. குதிரை சம்பந்தமான விசித்திர சம்பவங்கள்
4. வயதானவர் சம்பந்தமான விசித்திர சம்பவங்கள்
5.திடீர் புகையிலை வாடையால் நீங்கள் நிரப்படப்படுவது
6. சுடுகாடு சம்பந்தமான விசித்திர சம்பவங்கள்
7. பாம்புகளின் சம்பந்தமான விசித்திர சம்பவங்கள்

இவைகளில் ஏதாவது ஒன்று இருப்பது நாட்களுக்கு உள் தெரிய வேண்டும் ; அப்பொழுதான் தேவதை செவி சாய்த்து உள்ளது என்று அர்த்தம்

குறியீட்டை வணக்கும் முறை

இவரின் சக்தியை தெரிந்து கொள்ள ;இவரின் சக்தி மிக்க குறியீட்டை (நாற்சந்தி கடவுளின் சக்தி குறியீடு)தினம்தோறும் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் ; இந்த யந்திரத்தை பார்க்கும் பொழுது நீங்கள் இந்த பிராத்தனையை மனத்திற்குள் கூறுங்கள் நாற்சந்தி கடவுளான எலிகுவாவே என் வாழ்க்கை பிரகாசிக்க வாய்ப்புக்களை தந்து அருளுங்கள் , நீங்கள் வாய்ப்புகளை தந்து என் வாழ்வை பிரகாசிக்க செய்தால் ; நான் உங்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்" தினம் தோறும் இந்த பிராத்தனை செய்யுங்கள் . தினம்தோறும் இந்த யந்திரத்திற்கு வெண் குங்க்லியம் தூபம் போடுங்கள் ; அமாவாசை அன்று இந்த யந்திரத்திற்க்கு புகையிலை தூபம் போடுங்கள்; நீங்கள் ஆசைப்படும் வாழ்க்கையை வாழ பிரகாசமான வாய்ப்புகளை அள்ளி தருவார்.

குறிப்பு : இந்த யந்திரத்தை சாக்பிஸ் ( chalk piece ) கொண்டு தரையில் வரைந்தும் வழிபடலாம்

எலிகுவா வழிபாட்டின் சில பட தொகுப்புக்கள் கிழே கொடுக்க பட்டு உள்ளது
இந்த தேவதையை வழிப்பாடு செய்ய மிக அற்புதமான இரகசிய பிரயோக முறைகளை தெரிந்து கொள்ள :9840300178

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&