ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
நம் ஆசைகளை நிறைவேற்றும் தேவதத்தர்கள் - பாகம் -1
************************************************************
இரகசியமாக பயன்படுத்திய ஒரு தாந்திரீக கலையின்அதி நுட்ப சூட்சுமங்கள்
*********************************************************************************
உங்கள் குரு நாதர் , உங்களுக்கு சொல்லாத ரகசியங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இதை சார்ந்த பிரயோக முறைகளை செய்வேன் என்று சொல்லும் நபர்களிடம் இந்த தொடரை படித்து கேள்வி கேளுங்கள்
தேவதத்தன் என்பது சூட்சுமசக்திகளை (பூதங்கள் , பிரபஞ்ச சக்தி ,தேவதைகள் , ஒருவரின் ஆன்மா ) போன்றவற்றை உள்வாங்கி கொள்ளும் ஒரு கருவியாகும் . இந்த கருவியை கொண்டு சூட்சும சக்திகளை வசீகரித்து நாம் , நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம் . இந்த தேவதத்ர்கள் பல வடிவில் பிரயோகம் செய்யபடுகின்றது ( பொம்மை , சிலை ).
தேவதத்தனில் பல விதம் உண்டு , அதில் நாம் தொடராக பார்க்கப்போவது இரண்டு விதம் , ஒன்று நிரந்தரமாக ஒரு ஆன்மாவையோ , தேவதையையோ வசிகரித்து உள்ளே வைத்துகொள்ளும் கருவி ; இரண்டாவது நமக்கு காரியசித்தி ஏற்படுத்தும் தேவதையை வசீகரிக்கும் தன்மை உள்ள கருவி .
எல்லா தேவதத்தன் பிரயோக முறைகளில் யந்திர குறியீடு தான் முதல் படி , இது இல்லாமல் இந்த கிரியை வெற்றி அடையாது .
இந்த குறியீடுகளின் அமைப்புக்கள் மார்க்க ( மதங்கள் ) ரீதியாக வேறுபாடுகள் உள்ளன ; ஆனால் அவைகளின் கட்டமைப்பை ஆய்வு செய்தீர்கள் என்றால் வேற்றுமையில் ஒற்றுமையை காண்பீர்கள் . வரும் பதிவுகளில் இதை பற்றி விரிவாக பார்ப்போம் .
படத்தில் காட்டியிருப்பது தேவதத்தன் உருவாக்கத்தில் அடிப்படை கட்டுமானத்திற்கு தேவையான யந்திர குறியீடு. படத்தில் காட்டிய முதல் கருவி ஒரு பாத்திரம் போல் வேலை செய்யும் , இரண்டாவது கருவி காந்தம் போல் வேலை செய்யும் ; இரண்டுமே தேவதா வசியத்திர்ற்கு உரியது , இதை பிற மனிதனை ஆட்கொள்ளும் ( அஷ்டகர்ம ) வேலைகளுக்கு பயன்படாது ; இதற்கு வேறு சில யந்திர அமைப்புகள் உள்ளன.
தேவதத்தனின் சில கட்டுமான அமைப்புகளை நாம் பார்ப்போம் ; இந்த பதிவில் தேவதத்த பிரயோகத்தில் குறியீட்டின் மகத்துவத்தை நாம் காண்போம்.படம் ஒன்றில்உள்ள குறியீடு அமைப்பினை நாம் இப்பொழுது பார்ப்போம் .
இங்கே கொடுக்கபட்டு இருக்கும் மனித அமைப்பினை போன்ற யந்திர குறியீடு , தேவதத்தன் இயங்குவதர்ற்கு தேவையான சூட்சும பூத , தேவதா சக்திகளை வசீகரித்து அந்த சக்தியின் இயக்கத்தை ஒரு கட்டமைப்புக்குள் வழி நடத்தும் பணியை செய்கின்றது.
சுருக்கமாக சொல்வது என்றால் , சூட்சும சக்திகளை ; ஸ்தூல இயக்கத்திற்கு வழி நடத்தும் செயலை இந்த யந்திர குறியீடுகள் செய்கின்றன . ஒன்றை நன்றாக நினைவு வைத்து கொள்ள வேண்டும் இந்த யந்திர குறியீடு சுயமாக சக்தியற்றவை அவைகளை நாம் தகுந்த தாந்திரீக கிரியைகளால் உச்சாடனம் செய்தால் , இந்த குறியீடுகள் சக்திவாய்ந்த சக்தி மையங்களாய் மாறிவிடும் .
இந்த யந்திரத்தை எழுத பல முறைகள் உள்ளன அதில் சில முறைகள் :
1. தன் இரத்தத்தினால் எழுதுவது ; இது மிகவும் சக்திவாய்ந்தது ( இரத்தத்திற்கு இயற்கையாகவே பிராண சக்தியை வசீகரித்து கொண்டு செல்லும் திறன் உண்டு) . இந்த இரத்த பிரயோததில் ஒரு சூட்சுமம் உள்ளது ; அதாவது நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு பகுதியில் உள்ள இரத்தத்தின் தாந்திரீக சக்தி வேறுபட்டு இருக்கின்றது ,அதை உணர்ந்து பயன்படுத்துவது சிறப்பு.
2. நூலை கொண்டு குறியீடை அமைக்கலாம் , நூலை கொண்டு குறியீட்டை அமைக்கும் பொழுது அந்த நூல் உங்கள் காமிய காரியத்திற்கு சம்பந்தமான நிறமாக இருக்க வேண்டும் ( பணம் என்றால் பச்சை அல்லது ஆரஞ்சு நிறம் ) . மற்றும் அந்த நூலை குறிபிட்ட மூலிகை ரசத்தினால் நனைத்தல் வேண்டும் அதை குறிப்பிட்ட சந்திர / சூரிய இயக்கத்தில் உலர்த்த வேண்டும்.
3.எழுத்து ஆணி கொண்டு கீறுவது , தகுந்த தகடு அல்லது மூலிகை / தாந்திரீக பொருள்களில் மேல் எழுதவேண்டும்
4.மையை ( INK ) கொண்டு வரைவது . பயன்படுத்தும் மை மூலிகை இரசத்தினால் தயாரிக்கபட்டு இருக்கவேண்டும் . உங்கள் குறிப்பிட்ட காமிய கிரியையை சக்தி ஊட்டும் அமைப்பாக இருக்க வேண்டும்.
மேலே சொல்லபட்டு உள்ள ஏதேனும் ஒரு முறையில் , அந்த யந்திர கூட்டமைப்பில் உள்ள தேவதையின் மந்திர சொற்களை உட்சாடனம் சையது கொண்டே எழுத வேண்டும் ; இப்படி செய்தால் தான் இந்த குறியீடு ஸ்துல பிரபஞ்சத்திலும் ; சூட்சும பிரபஞ்சத்திலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தும்.
மேலே சொல்ல பட்ட அனைத்து யந்திரத்தையும் எழுதும் பொழுது ஒரு குறிப்பிட்ட முறையில் தான் எழுத வேண்டும் , இதை தகுதியானவர்களுக்கு நேரில் கற்றுதரப்படும்
இந்த குறியீடு பிரயோத்தை பற்றி திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு பாடலை பார்ப்போம்:
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகந்
துன்று மெழுகையுள் பூசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே.
திருமந்திர பாடல்-973
மெய்யுணர்வு விளங்குவதற்கு நிலைக்களமாக நிற்கும் அரசமரத்தின் பலகையில் திருவைந்தெழுத்தை மகர முதலாக வரையமைத்து எழுதுதல் வேண்டும். அம் மந்திரத்திருவுருவினுக்கு பூவும் புனலும் புகையும் ஒளியும் பாவும் பிறவும் கொண்டு வழிபாடு செய்க. ஓலையின்கண்ணும் அத்திருவைந்தெழுத்தினை வரைந்து, அதன்மேல் மெழுகுபூசி அதைச் சிறிது வெப்பமுறக் காட்டி அப் பலகையின் மேல் வைத்தல் நிறுத்துதல் என்ப. நிறுத்துதலைத் தம்பனம் என்ப.
இந்த பாடலில் பல ரகசியங்கள் அடங்கி உள்ளது . தொடரும் >>>>>>>>>>>
வரும் தொடரில் இந்த தேவதத்தன் பிரயோக முறையில் சில சக்தி வாய்ந்த யந்திர குறியீடுகளை பற்றி பார்ப்போம் , மேலும் இந்த பிரயோக முறையில் சில ரகசியங்களை பார்ப்போம்.
தேவதத்தன் பிரயோகத்தில் பல தாந்திரீக ரகசியங்கள் அடங்கி உள்ளது அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&