Sunday, July 3, 2016

டம்பாலா பண வசியம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

டம்பாலா பண வசியம்
*********************************

இந்த தேவதை ஆப்ரிக்கா நாட்டின் வூடூ வழிபாட்டில் வகிக்க கூடிய தேவதைகளில் மிகவும் முக்கியமான தேவதை ; இந்த தேவதை தலைமை தேவதை ஆகும் . இவரை பாம்பு கடவுள் என்றும் அழைப்பார்கள்
இந்த டம்பாலா பண வசிய முறை மிக இரகசியமான சக்திவாய்ந்த முறை . இந்த முறையை நான் , என் நண்பர்கள் , என் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி ,மிகுந்த நன்மை அடைத்து உள்ளோம் .

இந்த பதிவில் இந்த பண வசிய முறையில் அடிநிலையை விளக்கி உள்ளேன் , இதில் உயர்நிலை பிரயோக முரையும் உண்டு , அதை பின்பு பார்ப்போம்
இதற்கு தேவையான பொருள் சுத்தமான மண் ஜாடி (போர்ஸலைன் (porcelain ) பயன்படுத்தலாம் ) , டம்பாலா பண வசிய யந்திரம் , டம்பாலா ஆத்ம ஸ்வரூப யந்திரம் , சில ரூபாய் நோட்டுகள் , பழங்காலத்து மரத்தடியில் ( மரம் நன்றாக(செழிமையாக ) இருக்க வேண்டும்) உள்ள மண் , வெண்மை வர்ணம் ,இரண்டு சிறிய தட்டுக்கள் , தண்ணீர் அல்லது பழ ரசம் ( உடலுக்கு சூடு கொடுக்க கூடியதாக இருந்தால் உத்தமம் ) , வெண்மை நிற உணவு பண்டங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் மண் ஜாடியை சுத்தமாக கழுவி காயவைத்து விட வேண்டும். இந்த ஜாடியை வைக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் . சுத்தப்படுத்தும் பொழுது மது , புகையிலை பிரயோகத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் . உடலில் இரக்த கசிவு போன்ற விஷயங்கள் இருந்தால் , அது நிவர்த்தி ஆகும் வரை காத்து இருக்க வேண்டும் . இந்த தேவதைக்கு மேலே சொல்லபட்டு உள்ள பொருள்களின் நாற்றம் அரவே பிடிக்காது (இது முக்கியம்) , நீங்கள் இந்த கிரியை செய்தபின் மது , மாமிசம் , புகையிலை(பழக்கம் இருந்தால் ) ; பிரயோகிக்கலாம் . இவர் மிகவும் சுத்தம் பார்க்கும் தேவதை , எச்சரிக்கையாக செயல்படவும்.

உங்கள் மண் ஜாடியை வெண்மை நிறத்தில் வர்ணம் பூசி விட வேண்டும் ( அல்லது நான் காட்டியதை போல் வெண்மை நிறம் கலந்த போர்ஸலைன் சட்டியை கடையில் இருந்து வாங்கி பிரயோகம் செய்து கொள்ளலாம்.
அமாவாசை அன்று இந்த தேவதையின் டம்பாலா பண வசிய யந்திரத்தை வரையவும். நீங்கள் வைத்திருக்கும் மண் ஜாடி உள் சிறிது தூவிவிடவும் ; பிறகு அதன் மேல் ரூபா நோட்டுகளை போட்டு வைக்கவும் . டம்பாலா ஆத்ம ஸ்வரூப யந்திரம் யந்திரத்தை வெளியே மேஜையின் மேல் வைத்துவிடவும்.பிறகு ரோஜா பூ நறுமணம் உள்ள வாசனை திரவியங்களை தெளிக்கவும் ; அந்தஜாடியை மூடி விடவும் ; ஜாடியை மூடிய பின் "லுவாக்களின் வாயில் காவலர் பாபா லெக்பா அவர்களே; லுவாக்களின் தலைவர் என்று போற்றப்படும் டம்பாலா தேவதையை நான் தொடர்பு கொள்ள அனுமதி தாருங்கள் " என்று கூறி வைத்திருக்கும் தட்டில் கொஞ்சம் நீரையோ , உடலுக்கு சூட்டை கொடுக்க கூடிய இனிப்பான பழ ரசத்தையோ ஊற்றவும் . இதை செய்த பின் நீங்கள் வைத்திருக்கும் வெண்மை நிற மேலுகு வர்த்தியை ஏற்றுங்கள் .

மெழுவர்த்தியை ஏற்றிய பின் டம்பாலா வந்துவிட்டார் என்று நம்பி ,அங்கே உள்ள பட்சணங்களை அவர் ஆத்ம ஸ்வரூப யந்திரத்தின் பக்கத்தில் வைக்கவும் , சற்று நேரம் உங்கள் கோரிக்கையை தியானம் செய்து , நீங்கள் சிந்தித்ததை அவர் யந்திரத்தின் பின் பக்கம் எழுதவும் ; பண வரவு அதிகரித்தால் ஒரு கணிசமான தொகையை அவருக்கு சமர்ப்பிப்பதாக ஓப்பந்தம் கையெழுத்து இடவும்.

பின் இந்த ஒப்பந்தத்தை சுருட்டி வெண்மை நிற நூலினால் கட்டி அந்த மண் ஜாடியில் போட்டு விடவும் , ஒப்பந்தத்தில் சொல்லபட்ட தட்க்ஷிணையை தோராயமாக அந்த ஜாடியினுள் போட்டு விடவும் . பிறகு டம்பாலாவிற்கு நன்றி தெரிவித்து , மெழுகுவத்தி அனைத்து விடவும் .

டம்பாலாவை சந்திக்க உதவிய பாபா லக்பாவிற்கும் நன்றிகளை தெரிவிக்கவும் . நிவேதன பொருள்களை தின்றுவிடவும் , அந்த ஜாடியை ஒரு சுத்தமான இடத்தில் வைத்து விடவும் . வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை செய்து வரவும் , பணம் உங்களை தேடி வருவதை கண்டு நீங்கள் பிரமித்து போவீர்கள் .

பூஜையை செய்ய இயலாதோர் டம்பாலா பண வசிய யந்திரத்தை தினம்தோறும் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் , மற்றும் இந்த யந்திரத்தை உங்கள் பண பையில் , பண பெட்டியில் வைத்து விடுங்கள் உங்கள் பொருளாதாரத்தில் நிச்சயம் முன்னேற்றம் அடைவீர்கள் .

இதில் இன்னும் மேலே கூறபடாத அற்புத இரகசிய தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளன , இதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&