Saturday, July 9, 2016

உங்கள் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் சந்தனம்.

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
உங்கள் வருமானத்தை பல மடங்கு உயர்த்தும் சந்தனம்.
***********************************************************************************
சந்தனத்தின் தாந்திரீக ஆற்றலை பார்க்கும் முன் , இதன் சில மருத்துவ பயன்களை நாம் பார்ப்போம்
சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும்.
உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது. கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.
சந்தனம் பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் ஒரு மாபெரும் தாந்திரீக பொருள் ஆகும் ; இதை உணர்ந்த நம் முன்னோர்கள் ; இதை ஆன்மிக வழிபாடுகளில் ஒரு முக்கிய பொருளாக வைத்துள்ளார்கள் .
************************************************************************************
சந்தனத்தை ஆட்சி செய்யும் கிரகம் சந்திரன் மற்றும் புதன் , தத்துவம் நீர் ; ஆசையை நிறைவேற்ற , கோவில் வழிப்பாடு , இறுதி சடங்கு , சூட்சும சக்தி , பணம் , சுத்தம் , பாதுகாப்பு , ஆன்மீகம் , குணப்படுத்தல் , துர்சக்திகளை ஓட்டுதல் , ஆன்மீகம் போன்ற கிரியைகளில் இதனை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் .
************************************************************************************
சந்தன தூளை ஒரு இடத்தில் தூவிவிட்டால் அங்கு துர் சக்திகள் தங்காது
என்னையும் , திருச்சியை சேர்ந்த என் நண்பரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது கீழே கொடுக்க பட்டு உள்ள சந்தன கிரியை .மூன்றே மாதத்தில் என்னுடைய பண வரவு ஐந்து மடங்கு உயந்தது , நான்கு மாதத்தில் அவரின் பணவரவு ஏழு மடங்கு உயர்ந்தது .
குறிப்பாக சுய தொழில் செய்வோர் இதை செய்தால் கண்டிப்பாக உங்கள் தொழிலில் மிக பெரிய லாப வருத்தி ஏற்படும்.
பண வரவு அதிகரிக்க
*******************************
காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ; சிறிது அளவு சந்தனத்தை இளைத்து , படத்தில் காட்டிய படி சந்தனத்தை இருக்கைகளுக்கு நடுவில் வைத்து ; அதை உங்கள் தொப்புளுக்கு மேலே மூன்று அங்குலம் படத்தில் காட்டிய படியே இரு கைகளையும் வைத்து , கொடுக்கப்பட்டு உள்ள சந்தனத்தின் சூட்சும குறியீட்டை பார்த்து நமக்கு பண பொழிவு வர வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்தாபித்து , (காய்ந்து விட்டால் சில துளிகள் நீர் விடவும் )உங்கள் மோதிர விரலால் அதை எடுத்து சாப்பிட விட வேண்டும் . இதை தினம் தோறும் செய்து வர வேண்டும் ; வளர்பிறையில் செய்ய தொடங்குவது மிகவும் உத்தமம் . கண்டிப்பாக உங்கள் வாழ்வில் பண மழை பொழியும் .
உங்கள் ஆசைகள் நிறைவேற
*******************************************
பௌர்ணமி அன்று , சந்தன கடையின் நடுவில் இதன் சூட்சும குறியீட்டை வரையவும் , பிறகு உங்கள் கோரிக்கையை அந்த குறியிட்டின் மேல் குறுக்காக எழுதவும் , பின்பு ஒரு சட்டியில் வைத்து பச்சை கற்பூரம் கொண்டு எரித்து விடவும் , அந்த குறியீடு முழுமையாக எரியும் வரை உங்கள் கோரிக்கையை மனதின் உள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் ; கண்டிப்பாக அடுத்த பௌர்ணமிக்குள் , உங்கள் கோரிக்கை சார்ந்த நற் செய்தி உங்களுக்கு வந்து சேரும் .




ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&