ஓம் நம சிவாய
**********************
*********************
**********************
*********************
இந்த எகிப்தியன் தேவதையின் பெயர் அனுபிஸ் இதை அன்பூ என்றும் அழைப்பார்கள் . இந்த தேவதை குள்ளநரி தலையுடன் காட்சி அளிக்கும் . இதன் சக்தி மகத்தானது . இந்த தேவதை இசிஸ் தேவதையின் மற்றும் இந்த தேவதையின் மகன் ஹோரஸின் பாதுகாவலன் ஆகும் . இந்த தேவதை நீர்த்தவர்களின் (இறந்தவர்கள் ) உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஆன்மாக்களை ஒரு லோகத்தில் இருந்து அடுத்த லோகத்திற்கு அழைத்து செல்லும் பணியும் இந்த தேவதைக்கு உண்டு .
குள்ளநரியின் சக்தி இரவு நேரங்களில் மிகவும் சக்திவாய்ந்தது , இதே போல் நீங்கள் அனுபிஸை வழிபட்டால் உங்கள் இருளான ( மிகவும் துன்பமான காலகட்டங்களில் ) நேரங்களில் மிகவும் சக்திஉள்ளவர்களாக உணர்வீர்கள் , உற்சாகத்தோட செயல்படுவீர்கள் .
அனுபிஸ்யை நித்தியம் வழிபட்டு அவரின் ஆளுமைக்கு உட்பட்ட அப்பாச்சி டீயெர்ஸ் (apache tears ) என்ற கல்லை கையில் அணித்திருந்தாலோ , அல்லது கழுத்தில் மாட்டிருந்தாலோ , பில்லி சூனியம் , ஏவல் , மற்றும் பேய் பிசாசு தொல்லைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிட்டும் . உங்கள் வீட்டை சகல விதமான துர்சக்திகளின் பிடியில் இருந்து மீட்க ; திருடர்கள் , மந்திரவாதிகள் மற்றும் தீய என்னம் படித்தவர்களிடம் இருந்து உங்கள் வீட்டை பாதுகாக்க ; தினம் தோறும் காலையும் மாலையும் அவர் படத்தை பார்த்து " அன்பூ இறைவா எங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திடுங்கள் " என்று பிராத்திக்கவும் . வெளியே செல்லும் போதும் இந்த பிராத்தனைய அனுபிஸிடம் வையுங்கள் .
உங்கள் வீடு அனுப்பிசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் , இதை நீங்கள் உங்கள் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் மூலமாக உணர்வீர்கள் .இவர் உங்களுக்கு அருள் புரிந்துவிட்டால் கருப்பு நாயின் உருவத்தில் வந்து உங்களுக்கு அவர் வருகையை உறுதிசெய்வார் . இவர் வலது கையில் அங்க என்ற ஒரு யந்திரத்தை வைத்திருப்பார் ; இதை கொண்டு தான் இறந்தவருக்குக்கு மறுஜென்மம் எடுக்க அருள் புரிவார் .
வாழ்வில் நமக்கு தேவையான மாற்றங்களை உருவாக்க , துர் ஆத்மாக்களை அழிக்க , கணவன் மனைவி இடையே அந்நுனியம் ஏற்பட , நம் அனைத்து சொத்துக்களையும் பாதுகாக்க காலை சூர்ய உதயத்தின் போதும் , அஸ்தமனம் போதும் இந்த அனுபிஸ் தேவதையை வழிபடுங்கள். இவர் நம்மக்கு வாழ்வில் புதிய வாய்ப்புகளை நல்குவார் , முக்காலத்தை உணரும் சக்தியை அளிப்பார் ( ஜோதிடம் , குறி சொல்லுவது ) , நமக்கு உள்ள சகல விதமான ப்ரிச்சனைகளையும் தீர்த்து வைப்பார் , இவரால் நமக்கு நம் முன்னோர்களின் அருள் ஆசி கிட்டும் .
ஓம் நம சிவாய
**********************
*********************
**********************
*********************