Wednesday, June 22, 2016

சூட்சும ஆழ்மன உச்சாடனம்-1

ஓம் நம சிவாய
##############

சூட்சும ஆழ்மன உச்சாடனம்

சூட்சும ஆழ்மன உச்சாடனம் ஒரு அற்புதமான கலை , இதை கொண்டு உறுதியாக நாம் விரும்பிய மாற்றத்தை நம் வாழ்வில் ஏற்படுத்தி கொள்ளலாம்.

இந்த சூட்சும ஆழ்மன உச்சாடனத்தை பல வழிகளில் நாம் செயல்படுத்தலாம் ; நாம் இதை கொண்டு தொழிலில் முன்னேற்றம் , கணவன் மனைவி இடையயே அன்நுயின்யம் ஏற்படுத்தலாம் , காதலில் வெற்றி பெறலாம் , ஜன வசியம் செய்யலாம் , உடல் கோளாறுகள் , மன கோளாறுகள் அனைத்தையும் சரிசெய்யலாம் , நம் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்த ஆழ்மன சூட்சும உச்சாடனம் என்ற கலை தன்னுள் பல நவீன அறிவியல் கூறுகளை அடக்கி வைத்து உள்ளது ; இந்த பிரயோக முறை விஞ்ஞானத்தையும் / மெய்ஞானத்தையும் சேர்த்து பிசைந்ததில் இருந்து செய்த ஒரு அழகிய சிற்பம் ஆகும் . இதன் பிரயோக முறை மிக எளிது ஆனது , இதை நாம் ஒரே பெயரால் ( ஆழ்மன சூட்சும உச்சாடனம் ) என்று அழைத்தாலும் இதில் பல யுத்திகள் (உட்கூறுகள்) உள்ளது . இந்த அனைத்து கூறுகளும் இணைந்து செயல்பட்டால் மாற்றம் என்பது உறுதி . அனைத்து யுக்திகளையும் ஒரே பதிவில் காண்பது கடினம் இதில் இந்த பதிவில் ஒரு யுத்தியை மட்டும் பார்ப்போம் .

நறுமணத்தையும் , வாசனை திரவியங்களும் மனிதனின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒன்று .வாசனை திரவியங்கள் நறுமணத்தை கொண்டு ஆழ்மனதை உச்சாடனம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம் .
பெரும்பாலான மிருகங்கள் பூச்சிகள் முக்கிய தருணங்களில் தன் ரசாயணத்தின் முலம் தன் தகவலை பரிமாரி கொள்கின்றன .பால் குடி குழந்தைகள் தன் அம்மாவின் முலையின் நறுமணத்தை நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்கள் என்று அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது . அவை தன் அம்மாவின் முலையின் நறுமணத்தை உணர்ந்த பின் தான் , குழந்தைகளுக்கு பால் குடிக்க ஆசை மிகவும் தூண்டப்படுகிறது .
கலவியில் இடுப்படும் பொழுது தம்பதியரின் உடலில் வரும் நறுமணங்கள் ; அவர்கள் மனதில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும் . அந்த நறுமணங்கள் ஆழ்மனதில் ஒரு பதிவாய் அமர்ந்துஇருக்கும் ,அவைகளை தேவைபடும்பொழுது நாம் வெளியே கொண்டுவரலாம் .
நறுமணத்தை சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி ஒரு பெண்ணிடம் ஆண் மோகிக்கிறது அல்லது ஒரு ஆண் பெண்ணிடம் மோகிக்கறது ப்ரீனோம்ஸ் (பெரோமோன்ஸ்) என்ற ரசாயன தூதுவனாலும் ஏற்படலாம் என்று கண்டறிந்து உள்ளது.

இந்த ப்ரீனோம்ஸ் (பெரோமோன்ஸ்) ஆலபாக்டரி சென்சாரசால் (olfactory sensors ) உணரப்படுகின்றது , இது உடலில் தோள் , வியர்வை , சிறுநீரகம் , எச்சில் போன்றவைகளால் வெளிப்படுத்தப்படுகிறது. பிரீனோம்ஸ் மனிதனின் வோமெரோனேசல் ஆர்கன் என்று அழைக்கப்படும் பகுதி ( இது மூக்கின் உள் பகுதியில் அமைந்து உள்ளது )மூலமாக உணரப்படுகின்றது. இது ஆலபாக்டரி அரக்கனின் ஒரு உட்பிரிவு ஆகும் . இந்த உறுப்பு ப்ரீனோம்ஸ்யை அல்லது நறுமண தீண்டுதலை உணர்ந்த பின் அமிக்டலா என்ற உறுப்புக்கு அந்த தகவல்களை அனுப்பி வைக்கும் . இந்த அமிக்டலா மனித மூலையில் டெம்போரல் லோபஸ் உள்ள இடத்தில் அமைந்து உள்ளது ; இந்த உறுப்புதான் மனிதனின் ஞாபகசக்தி , முடிவுகள் எடுக்கும் திறன் , உணர்ச்சிகள் போன்ற செயல்பாடுகளை நிறுவகித்து வருகின்றது . அமிக்டலா பகுதியில் இருந்து இறுதியாக தகவல்கள் ஹைபோதாலமஸ் என்ற பகுதிக்கு செல்லும்.
சில ஆண்கள் பார்க்க அழகாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்களை சுற்றி பெண்கள் கூட்டம் அலைமோதும் இதன் காரணம் அன்ரோஸ்டெரோன் (androsterone ) என்ற ப்ரீனோம்ஸ் தான் . இந்த ப்ரீனோம்ஸ் பெண்களிடம் / ஆண்களிடம் அவர்கள் அறியாமலே ஆழ்மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது .

இந்த ப்ரீனோம்ஸின்(பெரோமோன்ஸ்) இயக்கத்தை தாந்திரீக பயிற்சி மூலமாக பலபடுத்தி கொள்ளலாம் . நீங்கள் இந்த ப்ரீனோம்ஸை மந்திர உச்சாடனம் மூலம் உருஏத்தி மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றிஅமைக்கலாம் இதை பற்றி வேறு ஒரு பதிவில் காணலாம் .

இது நறுமணத்தின் சூட்சும செயல்பாடு ; நாம் இப்பொழுது நறுமணத்தின் ஸ்தூல செயல்பாட்டை காண்போம் .

பால் காச்சும்பொழுது அதன் நறுமணம் உங்களுக்கு எப்படி இருக்கும் ?

காபி கொட்டைகளை வருக்கும் பொழுது வரும் நறுமணம் உங்களுக்குள் எப்படி ஒரு மாற்றத்தை உருவாக்கவும் ?

ஹோம புகையின் நறுமணத்தால் தன்மை என்ன ?

மல்லிகை பூவின் நறுமணம் உங்களுக்கு என்ன உணர்வை ஏற்படுத்துகின்றது ?
இதே போல் நறுமணங்கல் பல உண்டு , அவை அனைத்தும் நம் மனத்திற்குள் ஒரு உணர்வு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்துகின்றன. நறுமணங்கள் உறுதியாக மனமாற்றத்தை ஏற்படுத்தும் , அவை நம் ஆழ்மனத்தில் (புர மனம் உணராத படி ) ஒரு விதமான தகவலை பிரதிபலிக்கும் ; இதை ஆழ்மனம் ஒரு கட்டளையாக ஏற்று கொண்டு செயல்படும் .

ஸ்தூலமான பொருள்களில் ,தேவதையின் சூட்சும சக்திகள் நிறைந்து உள்ளது ; அவைகளை ஹோமத்தில் பிரயோகம் செய்யும் பொழுது சூட்சும சக்தி நறுமணத்தோடு வெளிப்பட்டு நம் மனதை பாதிக்கின்றது
நாம் ஒரு உதாரணத்தை பார்ப்போம்

உங்கள் வீட்டை நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்று நாம் ஆசைபட்டால் கீழே சொல்லபட்ட அடிப்படை சூட்சும ஆழ்மன உச்சாடனத்தை செய்து பாருங்கள் :

லவங்கப்பட்டை ஒரு ஆன்மீக ஆற்றல் மிக்க மூலிகை நமக்கு செல்வ சேர்க்கையை ஏற்படுத்த கூடிய ஒரு மூலிகை , தாந்திரீகர்கள் தொழில் பரிவர்த்தனையில் லாபம் ஈட்ட இந்த மூலிகையை பிரயோகம் செய்வார்கள்
ஒரு பௌர்ணமி அன்று இதை செய்ய தொடங்க வேண்டும் .ஒரு இரும்பு சட்டியில் சிறிது தண்ணிநீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி இலவங்க பட்டை பொடியை போட்டு நன்றாக கொத்திக்கவிட வேண்டும்.நறுமணம் வந்து கொண்டிருக்கும் போது வீட்டை விற்க வேண்டும் என்றால் கிலீம் என்ற மந்திரத்தை உச்சாடணம் செய்யவேண்டும்.வீட்டில் அமைதி நிலவ ஹாம் பீஜத்தை பிரயோகம் செய்யவேண்டும்காரியம் நிவர்த்தி ஆகும்வரை தினம்தோறும் செய்து வாருங்கள்.இந்த நறுமணத்தை வீட்டை வாங்கவருபவர் நுகர்தாங்கள் என்றால் ஆழ்மனதில் ஒரு உணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த வீடு வருபவர்களை ஈர்க்கும் படி காட்சி அளிக்கும் ,இதனால் இந்த வீட்டை அவர்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாஷமாம் ஆகிவிடும்,

இதே போல் உங்கள் விசிட்டிங் கார்டுகளில் சூட்சும பிரயோக முறைகள் பயன்படுத்தி , நறுமங்களை ஏற்றலாம் ஒப்பந்தங்கள் செய்ய கூடிய இடத்தில் நறுமணங்களை பயன்படுத்தலாம்.இந்த நறுமண பயன்பாட்டில் சூட்சும இரகசியங்கள் தாந்திரீக பிரயோக முறைகள் (வர்ணம்,சப்தம் ,ஒளி,குறியீடு போன்ற பல) உள்ளது .

மேலும் தெரிந்து கொள்ள: 9840300178




ஓம் நம சிவாய
##############