Tuesday, June 28, 2016

இனான்னா தேவதை -பாகம்-1

நம சிவாய
**********************
########################################################################
பணம் , காதல் , உடல் வீரியத்தை தந்து அருளும் இனான்னா தேவதை
########################################################################
இனான்னா ஒரு சக்தி வாய்ந்த சுமேரியன் தேவதை . நமக்கு தேவையான மாற்றங்கள் அனைத்தையும் அருளும் தேவதை . இந்த தேவதையை வழிபட்டால் நமக்கு ஒரு ஸ்திரமான வாழ்வு அமையும் ; அனைத்து காரியங்களிலும் வெற்றி ஏற்படும் .

இந்த தேவதை நமக்கு தேவையான மாற்றங்களை அருளும் , குறிப்பாக காதல் , காமம் , சண்டை , உடலில் வீரிய சக்தி , செழுமை , பணம் போன்ற சகல விதமான விஷயங்களின் இந்த தேவதையின் அருள் கடாச்சம் பிரகாசித்து இருக்கின்றது.

கணபதி, எலிகுவா , அனுபிஸ் போல் இந்த தேவதையும் வாயுள் காப்பாளியாக செயல்படுகின்றது. இவளை வணங்கினால் பிற தேவதையின் அருள் கடாச்சம் நமக்கு கண்டிப்பாக கிட்டும் . இந்த தேவதையின் பிரியமான மிருகம் சிங்கம்/பாம்பு , பிரியமான பறவை ஆந்தை , இந்த தேவதைக்கு உரிய கற்கள் அமிதிஸ்ட்(Amethyst ), ஹேமாடைட் (hematite ) , டைகர் ஐ (Tiger eye ) , அக்டே (Agate), சொடலைட்(Sodalite) இவள் சுக்கிர கிரகத்தை ஆட்சி செய்கின்றாள் ; இவள் சந்திரனின் புதல்வி ஆவாள்.

இவள் மானுடத்தின் விதியை அமாவாசை அன்றுதான் எழுத்துவாள் .இந்த தேவதையை அம்மாவாசை அன்று ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை வைத்து வழிபட்டால் , அந்த கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும்.

இந்த தேவதையின் அருள்கிட்ட நமக்கு தேவை இவளின் எட்டு கோண நட்சத்திர சூட்சும குறியீடு . இந்த பதிவில் நான் அடிப்படை நட்சத்திர குறியீடு பிரயோக முறையை காட்டி உள்ளேன் , இந்த குறியீட்டை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களை உருவாக்கலாம்.

இந்த பயிற்சியை செய்யும் முன் லாபிஸ் லாஸுலி ( lapiz lazuli) என்ற ராசி கல்லை கழுத்தில் ஒரு சங்கிலி செய்து அணிந்து கொள்ளவும் படத்தில் காட்டியதை போல் அந்த எண்கோண யந்திரத்தை சீவி 12 ( solar plexus ) அக்குப் புள்ளியில் கற்பனையை செய்து , இந்த தேவதையின் பெயரை மூன்று முறை கூறி , ஐந்து நிமிடம் அந்த குறியிடை பாவனை செய்யுங்கள் ; அந்த வேலையில் இந்த குறியீடு வழியாக தங்க நிற கதிர்வீச்சுகள் வந்து உங்கள் உடல் மனம் அனைத்திலும் பரவி ,

உங்களை புதுமையாக மாற்றிஅமைத்துவிட்டதாக உணருங்கள் ; உங்கள் சூட்சும சரீரம் தங்கமாய் மின்னுவதாய் பாவனை செய்யுங்கள்.
இதன் பின்னர் மீண்டும் தேவதையின் பெயரை மூன்று முறை உச்சரியுங்கள் , பின்பு உங்கள் கோரிக்கையை அவள் இடம் மனதில் தெரிவியுங்கள். தினம்தோறும் இதை செய்யுங்கள் உங்கள் கோரிக்கை நிறைவேறுவதை நீங்கள் கண் கூடாக பார்ப்பீர்கள் . அமாவாசை அன்று கண்டீப்பாக இந்த பயிற்சியை செய்யுங்கள்.

இந்த தேவதைக்கு உரிய ட்ரொட் சீட்டு ஸ்டார் , இதில் இந்த தேவதை நிர்வாணமாக இருப்பதை பாருங்கள் , இது அவளின் புராண கதையை நினைவூட்டுகிறது . மேலே எட்டு கோண யந்திரத்தை பாருங்கள் . தினம் தோறும் இந்த எளிய பயிற்சியை செய்ய இயலாதோர் , இந்த ட்ரொட் சீட்டை பார்த்து அவள் பெயரை ஜபம் செய்யுங்கள் , நீங்கள் விரும்பும் மாற்றம் நிச்சயம் மிக விரைவில் நடக்கும் .

இந்த தேவதையின் குறியீட்டை தினம் தோறும் பார்த்து வாருங்கள் , உங்கள் பண பையில்/பெட்டியில் வைத்தால் உங்கள் பொருளாதாரத்தில் மிக பெரிய ஏற்றம் உண்டாகும்.

இந்த தேவதைக்கு மேலும் ஒரு அற்புதமான / விசேஷமான எட்டு கோண யந்திரம் உண்டு , இதை வைத்து ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் ; இதன் பிரயோகம் மிக எளிதானது ஆனால் சக்தி வாய்ந்தது .
இந்த ஒரு யந்திரம் நம் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் , இதை ஒரு தனிப்பட்ட பூஜை முறையாகவே பயன்படுத்தலாம்


இந்த யந்திரத்தின் தாந்திரீக பிரயோகத்தை பற்றி தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய