தாந்திரீக ரெய்கி -பாகம்-1
சோ -கூ -ரே (CHO -KU -RAY )( சக்தி குறியீடு)
*************************************************************
**************************************************************
நாம் இன்றைக்கு ரெய்கி குறியீடுகளின் பிரதானமான ( முதல் ) குறியீட்டை பார்ப்போம் . இந்த குறியீட்டின் பெயர் சோ -கூ -ரே (CHO -KU -RAY )( சக்தி குறியீடு)
இந்த குறியீட்டின் பெயரின் (சோ -கூ -ரே) அர்த்தம்
1. பிரபஞ்ச சக்தியை கொண்டு வந்து இங்கே வை"
2. அரசனின் ஆணை
3. சக்தியை கூட்டு
4. நான் சாவியை வைத்துஇருக்கின்றேன்
இந்த குறியீடு பிரபஞ்ச சக்தியை வசீகரிக்கும் திறன் கொண்டது. இந்த குறியீடு பிரதானமாக மூன்று விதமான வேலை செய்கின்றது இது சக்தியூட்டுகின்ற , ஒரு செயலைத் தூண்டி ஊக்குகின்ற , மற்றும் பாதுகாக்கின்ற குறியீடு . பிற குறியீடுகளின் சக்தியை ஊக்கவிக்கும் திறன் கொண்டது . இந்த குறியீட்டை உங்கள் மூன் ஒரு முறை பிரயோகம் செய்தால் , பிரபஞ்சத்தில் உள்ள நமக்கு நன்மை பெயர்க்க கூடிய சக்திகளுக்கு ஒரு பாலமாய் அமைகின்றது
இந்த குறியீட்டை கொண்டு மனிதர்கள் / மனிதர்களை தாண்டி அனைத்து விதமான பொருள்களையும் சுத்தி செய்யலாம் . இந்த குறியீடு பிரபஞ்சத்தின் வேறு பரிணாமங்களை திறக்கும் சாவி போல் செய்யப்படுகின்றது இந்த குறியீடு பிரபஞ்சத்தின் வேறு பரிணாமங்களின் இருந்து நமக்கு தேவையான சக்தி பிரவாகத்தை வசீகரிக்கும் . இந்த குறியீடு உங்களை தீய சக்தியிடம் இருந்து பாதுகாக்கும். நாம் வசிக்கும் இடத்தை , சாப்பிடும் உணவை , வாகனத்தை இந்த குறியீடு கொண்டு சுத்தி செய்யலாம் . இந்த குறியீடு அதீத இரத்த போக்கை நிறுத்தும். சாப்பிடும் உணவில் மேல் இதை பயன்படுத்தினால் , இந்த உணவால் நம் உடல் வலு பெரும் , நாம் ஆரோக்யத்துடன் வாழுவோம். அன்பளிப்புகளை , விளம்பர பதாகைகளை ,விசிட்டிங் கார்டுகளை இந்த குறியீடு கொண்டு ஆசிர்வதிரக்காலம். நாம் உண்ணும் மருந்தை இந்த குறியீட்டை கொண்டு ஆசிர்வதித்தால் , ந்ம வியாதி விரைவில் குணம் ஆகும் .
இந்த குறியீட்டின் அமைப்பை பார்த்தால் இதன் செயல்பாடு சூட்சுமம் நமக்கு புரியும் , ஆகாயதத்துவதை மேலிருந்து இறக்கி பூமி தத்துவதோடு இணைத்து ஒரு சுழற்சி முறையில் சக்தி இயக்கத்தை உற்பத்தி செய்து ( சுழற்சி உள்ளதால் ஒரு சுத்தி செய்ய கூடிய அமைப்பை இந்த குறியீடு பெற்று இருக்கின்றது ) ; இதனால் நம் ஜீவ சக்தி சுத்தி / சமன் அடைந்து பூமி தத்துவதோடு ஒரு இணக்கத்தை நாம் ஏற்படுத்தி கொள்ளலாம். நம் சக்தியை ஓர் இடத்தில் திரட்டுவதற்கு இந்த குறியீடு பயன்படும் .
இந்த குறியீட்டை நாம் பரதக்க்ஷிணமாக பயன்படுத்தலாம் ; அப்ரதக்ஷணமாக பயன்படுத்தலாம் . நம் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் இதை பயன்படுத்திக்கொள்ளலாம் . வியாதி நீக்கத்தை பிரதானப்படுத்தும் கிரியைகளில் அப்ரதக்ஷணமாக பயன்படுத்தலாம் , நம் உடலில் சக்தியை ஏற்றும் கிரியைகளில் நாம் இந்த குறியீட்டை ப்ரதக்ஷிணமாக பயன்படுத்தலாம்
இது நம் சித்தர்களின் சோஹம் மந்திரத்தை போன்றது ; இந்த சோஹம் மந்திரம் நம் மூச்சின் இயக்கத்தின் சப்தம் ஆகும் . எப்படி நம் மூச்சு நமக்கு பிராண சக்தியை வழங்குகின்றதோ ; இதே போல் இந்த முத்திரை நமக்கு தேவையான ஜீவ சக்தியை அருளும் .
இந்த குறியீட்டை நீங்கள் பிரயோகம் செய்யும் பொழுது , மேலே உச்சி குழியில் ( ப்ரஹ்மரத்தில் ) இருந்து வற்றாத சக்தி பிரவாகத்தை ( அமிர்தத்தை ) , நம் உடலில் உள்ள அனைத்து சக்கரத்தில் வாயிலாக பாய்ச்சி இழுத்து வந்து அந்த நேர் கோட்டை நம் மூலாதாரத்தில் முடித்து நம உடல்முழுவதும் சுழற்சி இயக்க பாகத்தை வரைய வேண்டும்
நீங்கள் சுத்தி செய்யும் பொருட்டு இந்த குறியீட்டை பயன்படுத்தினால் உங்கள் ஆள்காட்டி விரல்ளையும் ; நடு விரல்ளையும் இணைத்து கோவிடாணம் முத்திரையை பிரயோகம் செய்து இந்த முத்திரையை அப்ரதக்ஷிணமாக பிரயோகம் செய்யவும் ; நீங்கள் சக்தி ஊட்டுக்காக இந்த குறியீட்டை பயன்படுத்தினால் ; அனைத்து விரல்களையும் கூம்பு போல் வைத்து கொண்டு ப்ரதக்ஷிணமாக இந்த குறியீட்டை வரையும் .
சோ -கூ -ரே என்று குறைந்தபட்சம் மூன்று முறை மனதில் உச்சரித்துவிட்டு பின்பு குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் .குறியீட்டினை முடித்த பின்பும் குறைந்தபட்சம் மூன்று முறை உச்சரிக்க வேண்டும் . தொலைதூர சிகிச்சைக்கும் இம்முறையை பயன்படுத்தலாம்..
பயன்கள் :
1.உயிர்சக்தி அதிகரிக்கின்றது
2.எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது
3.பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளுகிறது
4.ஏற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தவகுத்தலும் செய்கின்ற வல்லமை பெற்றது
5.பழுது நீக்கும் பணியை பழுது இன்றி செய்கிறது
6.பிரபஞ்சத்தின் அருள் சக்தி நமக்கு கிடைத்திட உதவுகின்றது
7.சூட்சும சக்திகளை நாம் தொடர்பு கொள்ளப் பாலமாய் அமைகிறது
இந்த குறியிடை தங்க நிறத்தில் பாவனை செய்யவேண்டும்
இந்த குறியீட்டை ஒரு காகிதத்தில் வரைந்து எந்த பொருளை பிரபஞ்ச சக்தியால் நிரப்ப வேண்டுமோ , அந்த பொருளின் அடியில் வைத்துவிடவும் ..
இந்த குறியீட்டை பிரமிட் அமைப்பில் பயன்படுத்தி ஏராளாமான நன்மைகளை அடையலாம்.
சூட்சும சக்திகளின் திறவு கொள் இந்த ரெய்கியின் முதல் குறியீடு
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178