ஓம் நம சிவாய
##############
தாந்திரீக சுழற்சி யோகம்-1
***************************
++++++++++++++++++++++++
இந்த அற்புதமான அதி இரகசிய யுத்தியை கொண்டு நம் ஆசைகள் அனைத்தையும்
நிறைவேற்றிக்கொள்ளலாம் , தொழில் வெற்றி , பணம் , காதல் , திருமணம்
மற்றும் அஷ்டகர்மம் என்று சொல்லக்கூடிய 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3.
தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம் எட்டு
தொழில்களை இதை கொண்டு செய்யலாம்
இந்த தாந்திரீக யோக சுழற்சி முறையை
பிரயோகம் செய்யும் மூன் ஜீவ காந்த சக்தியை பற்றி திரு வேதாந்திரி மஹரிஷி
என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்
மனதின் ஜீவகாந்த சக்தியால் தான்
உயிர்வாழ்கிறான் , இந்த சக்தி அவனுக்கு உள்ளேயும் ,வெளியேயும் வ்யாபகமாக
பரவி கிடக்கின்றது . இந்த சக்தியின் செயல்பாடுகள் மின்சாரத்தை போலவே
அமைந்து உள்ளது , ஆனால் இந்த சக்தியின் தன்மை ; மின்சாரத்திவிட அதி
அற்புதமானது
.நமது உடலில் வலி, நோய், மரணம், எப்படி உண்டாகின்றன?
ஏன் உண்டாகின்றன? இவற்றை நம்மால் தடுக்க முடியுமா? என்பது குறித்த அறிவு
மிகவும் நுட்பமானது, அந்த அறிவை தெரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு
தத்துவம்தான் ஜீவகாந்தம். இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் பல
நுண்துகள்கள் ஒன்றுகூடி பரமாணுக்களாகி, அவைகள் இறைவெளியில் சுழன்று கொண்டே
இருக்கும்போது ஏற்படும் உரசலினால், பரமாணுக்களிலிருந்து இறைத் துகள்கள்
அலைகளாக வெளியாகின்றன. அந்த அலைகள்தான் காந்தம், உடலுக்குள்ளாக
உற்பத்தியாகிற காந்தத்தைச் ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில்
உற்பத்தியாகிற காந்தத்தை வான்காந்தம் என்றும் சொல்கிறோம்.
இந்த
உடலிலே திடப் பொருள், நீர்ப்பொருள், வெப்பம், காற்று, உயிர் என்று இவற்றை
எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால், அந்த உயிரானது மிக மிக நுண்ணிய
பரமாணுக்கள். கோடி கோடி பரமாணுக்கள் அந்த விண் துகள்கள் கூட்டாக இயங்கிக்
கொண்டிருப்பது தான் உயிர். ஒவ்வொரு உயிர்த் துகளிலேயும் தன்னுடைய
சுழற்சியினால் வரக்கூடிய விரிவு அலை ஒரு அழுத்தம் பெறுகிறது. ஏனென்றால்
வெளியிலே இருக்கக் கூடிய உயிருக்கும் உள்ளே உள்ள உயிருக்கும் ஒரு
வித்தியாசம் உண்டு. இது உடலிலே சுழன்று சுழன்று ஏழு தாதுக்களுக்குச்
சத்துப் பொருளாக (Essence) வரக்கூடிய Ectoplasm அல்லது ஓஜஸ என்று சொல்லக்
கூடியதாகவும் இருக்கக் கூடிய ஒரு வியத்தகு ஆற்றல் பெற்றது தான் இங்கே உள்ள
உயிர். அதில் ஒரு பூச்சு வேலை நடந்த பிறகு (Treatment) பதிவு செய்வது,
பிரதிபலிப்பது என்பதால் அதிகமான இயக்க வேகம் பெறுகிறது. நாம் பேசுவது ஒரு
Tapeல் பதிந்து கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துப்
பார்த்தால் வெறும் பிளாஸ்டிக் தான். ஒட்டுவதற்காக Cellotape
வைத்திருக்கிறோமே அதை Tape Recorderல் போட்டு ஓட்டினால் பேச்சைப் பதிவு
செய்து விட முடியுமா? முடியாது. ஏனென்றால் Tapeக்கு முதலில் ஒரு காந்தப்
பூச்சு (Magnetic treatment) கொடுக்க வேண்டும். பிறகு தான் அது பதிவை
ஏற்கும். ஏற்ற பின் பிரதிபலிக்கும்.
அது போலப் பதிதல்,
பிரதிபலித்தல் (Functions) என்று மன இயக்கத்திற்கு உரிய செயலாக எண்ணும்போது
அந்த உயிர்ச் சக்தி சுழலும் போது தானாகவே அந்த அலை வெளிவந்து கொண்டே
இருக்கும். அப்படி உடல் முழுவதிலும் இருக்கக் கூடிய உயிர்சக்தி சுழன்று
வெளியிடக்கூடிய அலையினுடைய அழுத்தம் உடலிலே ஜீவகாந்த சக்தி என்று
சொல்லுகிறோம். அந்த அலை அழுத்தம் தான் ஜீவகாந்த சக்தி. உயிருக்கும்
ஜீவகாந்த சக்திக்கும் வித்தியாசம் உண்டு. உயிர் என்பது ஒரு இயக்க நிலையம்,
இயங்கிக் கொண்டே இருப்பது. அதிலே இருந்து வெளிவந்து விரிந்து கொண்டே
இருப்பது விரிவு அலை - அதுதான் ஜீவகாந்த சக்தி.
ஒரு காந்தக் கல்லை
எடுத்துக் கொண்டு, அதன் அருகில் ஒரு ஊசியை கொண்டு வந்தால், காந்தக்
கல்லானது ஊசியை பிடித்துக் கொள்ளும், காந்தக் கல்லை ஆட்டினாலும் அவைகள்
அனைத்தும் காந்தக் கல்லால் பிடித்துக்கொள்ளப்படும், போதிய அளவு காந்த
ஆற்றல் இருக்குமேயானால், நான்கு ஊசிகளும் தொங்குகின்றன, ஆட்டினால்கூட
அவைகள் விழுவதில்லை, அவைகள் ஏன் விழுவதில்லை அவைகள் ஒன்றோடொன்று
ஒட்டப்பட்டும் இருக்கவில்லை, கட்டியும் வைக்கப்படவில்லை, அப்படியானால்
எப்படி அவைகள் விழாமல் நிற்கின்றன காந்த சக்தி அவைகளுக்கிடையே சுழன்று
கொண்டேயிருப்பதால், அவைகள் ஒன்றையொன்று கவர்ந்து பிடித்துக்
கொண்டிருக்கின்றன. அப்படியே தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றன.
காந்தக் கல்லை ஒட்டியுள்ள ஊசியை கையில் பிடித்துக் கொண்டு, காந்தக் கல்லை
எடுத்து விட்டோமானால், எல்லா ஊசிகளும் பொலபொலவென்று உதிர்ந்து விடுவதை
காணலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஜீவகாந்த ஆற்றல்தான் கவர்ந்து
பிடித்துக் கொண்டிருக்கிறது. ஜீவகாந்த ஆற்றல்தான் உடல்
நிலைத்திருப்பதற்கும் அது ஒரே தொகுப்பாக இயங்குவதற்கும் காரணமாக உள்ளது.
உடலின் எடைக்கும், செல்களின் எண்ணிக்கைக்கும் தக்கவாறு உடலைப்
பராமரிப்பதற்கு போதிய அளவு ஜீவகாந்த சக்தி வேண்டும். ஜீவகாந்தம் உடலில்
ஓடிக் கொண்டிருக்கிறபோது ஒரு செல்லானது இன்னொரு செல்லோடு இணைந்து இயக்கிக்
கொண்டிருக்கிற தொடர் நிகழ்ச்சியே உடலாக இயக்கத்தில் இருக்கிறது.
வான்காந்ததை வெளிப்படுத்தும் ஒரு மிக பெரிய யந்திரமாய் இந்த பூமி அமைந்து
உள்ளது , அதை போல் ஜீவ காந்தத்தை வெளிப்படுத்தும் சிறு யந்திரமாய் நாம்
அமைந்து உள்ளோம் .
இந்த பயிற்சி முறையின் அடிப்படையை பார்ப்போம்
நீங்கள் ஒரு சிறு மின் ( ஜீவ) காந்த சக்தியை வெளிப்படுத்தும் கருவி ; இந்த
பிரபஞ்சம் பெரிய மின்(வான்) காந்தத்தை வெளிப்படுத்தும் கருவி ; பெரிய
மின்காந்த சக்தி யந்திரம் ( பூமி ) மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கின்றது ;
இதே போல் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சோழற்சி இயக்கத்தை உண்டு பண்ணி , நம்
தேவைக்கு ஏற்றால் போல் மந்திர உச்சாடனம் செய்து செய்தீர்கள் என்றால்
நீங்கள் மிதிவண்டியில் பொருத்தப்பட்ட டயனமோ கருவியை போல் செய்யல்பட்டு ;
உங்கள் அனைத்து கோரிக்கையும் வெளிச்சத்துக்கு வந்து விடும்.
சுபி (
இஸ்லாத்தின் ஒரு பிரிவினர் ) இந்த யுத்தியை தெரிந்து வைத்து உள்ளார்கள் ;
இதை அவர்கள் சுபி நடனம் என்ற பெயரில் அழைப்பார்கள் ; ஆபிரிக்கா நாட்டின்
மக்கள் தேவதைகளை ஆவாகனம் செய்யும் பொழுது இந்த ஒரு நடனம் ஆடுவார்கள் அதில்
இந்த சுழற்சி முறை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
நான் செய்து
காட்டியுள்ள இந்த சுழற்சி முறை ; கையின் அமைப்பு பனைத்தை ஈர்க்கும் ( பண்
வரவு , லாபம் , கடன் தொல்லை நிவர்த்தி , அத்ரிஷ்ட பணம் , அனைத்து விதமான
செலவ சேர்க்கைக்கு ) தினம்தோறும் இதை பத்து நிமிடம் செய்து வாருங்கள்
நீங்கள் , பத்து நாட்களில் முன்னேற்றம் தெரியும் . சுழற்சியின் தன்மை
பிரதக்ஷணம் & அப்ரதக்ஷணம் ( வேகம் , மெதுவாய் , மத்திமம் ) , மந்த்ர
உச்சாடனம் , கைகளின் அமைப்பு , காலின் அமைப்பு இவைகள் இந்த தந்திர
சுழற்ச்சி முரையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
இந்த பதிவில் நான் பண பொழிவை தர கூடிய சுழற்சி முறையை காட்டியுள்ளேன்
பணம் பொருளாதாரம் செல்வ சேர்க்கை
************************************************************
************************************************************
பணம் , பொருளாதாரம், செல்வ சேர்க்கை
சுழற்சி முறை - பிரதக்ஷணம்
சுழற்சி வேகம்- மெதுவாக
கைகளின் அமைப்பு- படத்தில் காட்டிய படி வலது கை முன்னேயும் ; இடது கை பின்னேயும்
கால்களின் அமைப்பு - வலது குதி காலை ஒரு அச்சாணி போல் ஊன்றவும்
மந்திர உச்சாடனம் - ஸ்ரீம் & ஹா யாக்
வலது காலை ஊன்றி , கைகளை படத்தில் காட்டியதை போல் வைத்துக்கொள்ளவும் ,
இடது காலை ஒரு துடுப்பு போல் பயன்படுத்தி பிரதக்ஷணமாக சுழற்சியில்
ஈடுபடவேண்டும் ; வலது குதிகாலை நகர்ற்றாமல் ( அச்சாணிபோல் ) வைத்து கொண்டு
இதில் இது பட வேண்டும் முதல் ஐந்து நிமிடம் "ஹா யாக் " என்ற மந்திரத்தை
உச்சாடனம் செய்ய வேண்டும் ; இறுதி இந்து நிமிடம் " ஸ்ரீம் " என்ற
மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்
இந்த தந்திர சுழற்சி முறையை
முடித்த பிறகு அமைதியாக இரண்டு நிமிடம் அமரவேண்டும் ( படுத்துவிட கூடாது )
,இதை தினம் தோறும் செய்து வாருங்கள் , உங்களிடம் செல்வ சேர்க்கை
அதிகரிப்பதை மற்றவர்கள் கண்கூட காண்பார்கள்
அதி சூட்சும தந்திர சுழற்சி யோகம்
தந்திர சுழற்சி + ராசி கல் (உலோகம் ) + அதிர்வு மருந்துகள் ( லண்டன் மலர்
மருந்து , ஆஸ்திரேலியன் புஷ் மலர் மருந்து , தேய்வீக இந்திய மூலிகை
மருந்து )+ முத்திரை + மந்திரம் + யந்திரம் + பிரபஞ்ச சூட்சும குறியீடு +
ஆழ் மன சூட்சும குறியீடு + அழ் மன சூட்சும கட்டளை + ஆஸ்ட்ரல் நெம் பவர் (
அடிப்படை )
அதி சூட்சும தந்திர சுழற்சி யோக பயிற்சியை மேற்கொண்டால் வாழ்வில் அனைத்து செய்யல்களிலும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி .
இந்த தந்திர சுழற்சி முறையின் மிக அதிநுட்ப இரகசிய
இந்த தந்திர சுழற்சி முறையின் மிக அதிநுட்ப இரகசிய பிரயோக முறைகள் உண்டு ; அதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178
ஓம் நம சிவாய
##############