Thursday, October 13, 2016

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-4

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-4
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&..

உங்கள் வாழ்வில் பண மழை பெய்யும் :-
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
4. <இன்றைய கேள்வி>.

"இலுமினேட்டிகள்" சக்தி வாய்ந்தவர்களாக இருக்கின்றார்களே அதற்கு காரணம் என்ன ?
இவர்கள் சக்தி வாய்ந்தர்வர்களாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது , அதில் ஒரு பிரதானமான காரணம் , இவர்கள் தேவதைகளின் சக்திகளை தன் வசம் ஆக்கிக்கொள்கின்ற யுக்தியை நன்றாக அறிந்தவர்கள் .
தேவதைகளை பற்றின தவறான கருத்துக்கள் மக்களின் மனத்தில் அனுபூதி இல்லாதவர்களால் விதைக்கபட்டு உள்ளது ; தயவுசெய்து கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்

குறியீடு -1
#############
சட்கோண (ஷட்கோண ) குறியீடு :4
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஏன் ஷட்கோணம் சக்திவாய்ந்ததாக கருதப்படுகின்றது ?

நாம் முன்னே பதிவுகளில் இருந்து தெரிந்து கொண்டது இந்த சட்கோணம் சூரிய சக்தியை வெளிப்படுத்துகின்றது , பிரபஞ்சத்தில் சூரியனை சுற்றி பிற கிரகங்கள் சுற்றி வருவதை போல் , இந்த குறியீட்டின் ( சூரிய ) சக்தியால் தேவதைகள் , இந்த யந்திரம் இருக்கும் இடத்தை சுற்றி வரும்.

சிவபூஜை செய்யும்முன் சிவசூரிய பூஜை செய்யும் வழக்கம் இன்றும் சிவன் அடியார்கள் மத்தியில் உள்ளது , என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . இதற்கு பல காரணகள் சொல்லபட்டாலும் , பிரதானமான காரணமாக சொல்லபடுவது , இந்த பூஜை போகத்தை அருள கூடியது எனபதை தான்

ஷட்கோணத்தை பற்றி நாம் விரிவாக பார்த்துவிட்டோம் , இதில் இன்னும் பல அமானுஷ்யமான இரகசியங்கள் புதைந்தது கிடக்கின்றது , அதை பற்றி நாம் மேலும் தெரிந்துகொள்ளும் முன் இன்று இதன் ஒரு அடிப்படை( ஆனால் சக்தி வாய்ந்தது ) குறியீடு பிரயோக முறையை நாம் பார்ப்போம் .

ஷட்கோண பூத வசிய அமைப்பு
***********************************************
***********************************************

(மிகவும் சக்தி வாய்ந்த பிரயோக முறை )

இந்த யந்திரத்தை வர்ண நகல் எடுத்து கொள்ளவும் ( photo print எடுத்தால் உத்தமம் ) , இதை சுற்றி உள்ளது தேவதைகளின் சக்தி வாய்ந்த குறியீடுகள் ஆகும் ( இதை பற்றி சொல்லவேண்டும் என்றால் நூற்று கணக்கான பக்கங்கள் தேவை படும் , வேறுஒரு பதிவில் நாம் பார்ப்போம் ). ஷட்கோண யந்திரத்தில் நடுவில் உங்கள் குரு மேட்டில் இருந்து சில துளிகள் இரத்தத்தை விடவும் , பிறகு அதன் மேல் ஒரு பெரிய பச்சை நிற மெழுகுவர்த்தியை ஏற்றவும் , தினந்தோறும் சூரிய உதய நேரத்தில் இந்த பிரயோகத்தை செய்யவும் ( உச்சிஷ்ட மார்க்கம் பயிற்சி எடுப்பவர்கள் பணத்திற்கான சந்திர இயக்க புள்ளிகளை தேர்வு செய்து கொள்ளவும் ) , 10-நிமிடம் உங்கள் பண தேவையை நேர்மறை சொற்களால் உச்சாடனம் செய்யவும் , உங்கள் வாழ்வில் பணத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக ஆக்குவதை நீங்கள் உணர்வீர்கள் , பலருக்கு பண மலை பெய்யும் ஒரு மாதம் சென்ற உடன் உங்கள் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

குறிப்பு :
#######

நான் பல தேவைதைகளை உச்சாடனம் சையது என் பொருளாதாரத்தை இவைகளின் உதவியால் உயர்த்தி உள்ளேன் , தேவதைகளை இதற்காக பயன்படுத்துவது தவறு இல்லை , இதை செய்த்தெரியாதோர் சுய நலத்திற்காக இவைகளை பயன்படுத்துவது தவறு என்று கூறுவார்கள் , இது முற்றிலும் தவறு தேவதைகளை பற்றின அறிவு இவர்களுக்கு இல்லை என்பதையே இது உணர்த்துகின்றது .

படத்தில் நீங்கள் பார்ப்பது நான் உச்சாடனம் செய்யும் பல தேவதைகளில் ஒரு தேவதை ( எலிகுவா ) .படத்தில் நான் காட்டியுள்ள எலிகுவா பிம்பங்கள் மூலிகை கலவை பூசப்பட்டு , காயவைக்கப்பட்டுள்ளது , இது என் மாணவர்களுக்காக தயார் செய்தது ஆகும்

2014 மார்ச் மாதம் இந்த யுத்தியை நான் மெழுகுவர்த்தி மட்டும் ( இரத்தம் இல்லாமல் ) பயன்படுத்தி பிரயோகம் செய்து பார்த்தேன் சொற்பமான பலன்களே எனக்கு கிட்டியது , அடுத்த மாதம் இரத்தத்தை பயன்படுத்தி பிரயோகம் செய்து பார்த்தேன் , செய்த பத்து நாட்களில் என் வாழ்வில் பண மலை பெய்தது

இன்று இந்த யந்திரத்தை உங்களுக்கு கொடுக்கலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தேன் அப்பொழுது பிரபஞ்சம் ( சகுனங்கள் ) மூலம் பதில் கூறியது . மூடர்கள் பேச்சு சத்யத்திற்கு முன் எடுபடாது , உங்கள் வாழ்க்கையை மூடர்களிடம் தந்து விடாதீர்கள் , பிரபஞ்ச தாயின் மடியில் சரணாகதி அடையுங்கள் , அவள் உங்களை வழி நடத்துவாள்






ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&