Sunday, September 25, 2016

முக்கோண சக்தி யந்திரம்(அதி இரகசிய தாந்தீரீக யந்திரம் -2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

என் நண்பர் ( அவர் வேலை பார்க்கும் இடத்தின் தன்மை காரணமாக அவர் பெயர் மறைக்கபட்டு உள்ளது ) , அவர் பணியில் பதவி உயர்வு கிடைக்க இந்த யந்திரத்தை பிரயோகம் செய்து உள்ளார் , கண்டிப்பாக அவர் ஆசை நிறைவேறும் .

இங்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள கடமைபட்டு உள்ளேன் , இந்த யந்திரத்தில் இருக்கும் அனைத்து சின்னங்களும் முக்கியமானவை , இவை அனைத்தும் ரூப சக்தியால் ஆகாய (தத்துவத்தில் ) வாயிலாக செயல்பட்டு நம் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் .

இதன் காரணத்தால்" 0" மற்றும் " + " போன்ற குறியீடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணரவும் . கீழே உள்ள படத்தில் சில இடங்களில் இந்த ( 0 மற்றும் + ) குறியீடுகள் சரியாக அமைக்க படவில்லை என்பதை கவனிக்கவும் , இந்த சிறு விஷயங்கள் நாம் எதிர்பார்க்கும் விளைவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் . இந்த யாத்திரத்தில் உள்ள சிறு குறியீடுகளும் மிக பெரிய ஆற்றல்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது , ஆதாலால் கவனம் தேவை .

ஆனால் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றேன் .
அடுத்த பதிவில் இருந்து , ஒரு யந்திரமும் மற்றும் ஒரு குறியீட்டின் சக்தியை பற்றி பார்ப்போம் 






 ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&