Sunday, November 6, 2016

""திபெத்தியன் தாந்திரீக முத்திரை""

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

""திபெத்தியன் தாந்திரீக முத்திரை""
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
(நமக்கு சர்வ வல்லமையை வழங்க கூடியது)
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
**************************************************************************************
இறை சக்தியின் இருப்பிடமாக நீங்கள் மாற இன்று ஒரு மகத்தான முத்திரை, நீங்கள் செய்யும் ஜெபத்தின் ஆற்றல் கோடி மடங்கு வெளிப்படும் இந்த முத்திரையின் உதவியினால்
*************************************************************************************
"உச்சிஷ்ட ஜபம்" மாணவர்களுக்கு இந்த முத்திரையின் அதி சூட்சும பிரயோக முறை ( இஷ்ட சித்தி கிடைக்க ) ஒன்று நாளை உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த முத்திரை மிகவும் சக்திவாய்ந்த முத்திரை ஆகும் , இந்த முத்திரையை கொண்டு நாம் அஷ்டகர்மம் அனைத்தையும் விளையாடலாம் . இங்கே நான் இதன் அடிப்படை கட்டுமான அமைப்பை மட்டும் உங்களுக்கு கற்று தருகின்றேன் .
உங்கள் இடது கையை 'அனாஹதம்' என்று அழைக்கப்படும் இருதய சக்கரத்திற்கு ( சரியாக வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது . தோராயமாக உங்கள் தொப்புள் மத்தியில் இருந்து ஒரு ஜான் அளவு ) நேராக வைக்கவும்.உங்கள் வலது கையை படத்தில் காட்டியதை போல் உங்கள் இடது கையின் மேலே (உங்கள் வலது கை படத்தில் காட்டியுள்ள இடகையின் சக்தி இயக்க புள்ளிக்கு நேராக அமைய வேண்டும் ) ஒரு "3 inch " இடைவெளிவிட்டு வைக்கவும். கிழக்கு திசையை நோக்கி , இந்த முத்திரையை படத்தில் காட்டியதை போல் வைத்துக்கொண்டு உங்கள் இஷ்ட தேவதையின் மூல மந்திரத்தை ஜபம் செய்யுங்கள் , உங்கள் இஷ்ட தேவதையின் அருளால் விரைவில் இஷ்ட சித்தி ஏற்படும்.
உங்கள் ஆசைகளுக்கு ஏற்றால் போல் மூல மந்திரத்தை தேர்ந்து எடுங்கள் அல்லது மந்திரங்களை தேர்ந்து எடுங்கள் ( உதாரணம் : உங்கள் வாக்கு தெய்வீக ஆற்றல் பெற வேண்டும் என்றால் " ஐம் " என்ற வாகதேவி ( சரஸ்வதி ) பீஜத்தை பிரயோகம் செய்யலாம்)
குறிப்பு :
**********
1. இந்த முத்திரை தேவலோக சக்தியையும் , பூலோக( நாம் வாழும் பூமி ) சக்தியையும் இணைக்கும்
2. இந்த முத்திரை இரு சக்திகளையும் ஆக்ரஷ்னம் செய்து இணைத்து வெளிப்படுத்தும்
3. இந்த முத்திரையினால் வெளிப்படும் தாந்திரீக சக்தியானது , ஒரு லேசர் கருவியில் இருந்து வெளிப்படும் சக்தி இயக்கத்தை போல் மிகவும் சக்திவாய்ந்தது . இந்த சக்தியை நாம் சில எளிய பிரயோக முறைகளை கையாண்டு அஷ்டகர்மமும் விளையாடலாம்
4.சாதாரணமாக இந்த முத்திரையில் இருந்து வெளிப்படும் சக்தி உங்கள் சூட்சும சரீரத்தை பல படுத்தும் ( இந்த சரீரம் பலபெற்றால் உங்கள் தாந்திரீக கிரியைகள் பலிதமாகும் ), மற்றும் உங்களை சுற்றி உள்ள இடத்திலும் இந்த சக்தி நிரம்பி இருக்கும் , ஆதலால் உன்ளேயும் புறத்திலும் இந்த மகத்தான சக்தியக்கத்தினால் எப்பொழுதும் நீங்கள் சூழபட்டு இருப்பீர்கள் .
5.எந்த தேவதையின் மூல மந்திரத்தை நீங்கள் உச்சாடனம் செய்கின்றீகர்களோ அந்த தேவதையின் அருள் மிக விரைவில் உங்களுக்கு கிட்டும்.
6.இந்த முதத்திரையை தினம்தோறும் ஐந்து நிமிடம் பிரயோகம் செய்யவும் , சுகாசனத்தில் அல்லது வஜராசனத்தில் அமர்ந்து இந்த முத்திரையை பயன்படுத்தலாம் . நின்று கொண்டும் இந்த முத்திரையை பயன்படுத்தலாம்
7.நான் முன்னே கூறியதை போல் இந்த முத்திரையை கொண்டு , உங்கள் ஆசைகள் ( அஷ்டகர்மங்கள் ) அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் , இந்த சூட்சுமம் பின்னே நான் எடுக்கும் தாந்திரீக வகுப்புகளில் வெளிப்படுத்தபடும்
8.மூல மந்திரத்தை ஜபித்து கொண்டே நீங்கள் இந்த முத்திரையை பிரயோகம் செய்யலாம் , அல்லது மூல மந்திரம் ஜபித்த பின்பு மூல மந்திரத்தின் அதி தேவதையை தியானம் செய்து இந்த முத்திரையை பயன்படுத்தலாம்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&