Tuesday, November 29, 2016

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-5

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டி குறியீடுகள் :-பாகம்-5
****************************************************************************
*****************************************************************************
5. <இன்றைய கேள்வி>.

இலுமினேட்டிகள் ஏன் தீய ஷைத்தானின் குறியீடு என்று அழைக்கப்படும் பஞ்சகோண எதிர்மறை நட்சத்திர குறியீட்டை வணங்குகின்றார்கள் ?
அவர்கள் இந்த குறியீட்டை தாந்திரீக முறைப்படி வணங்குகின்றார்கள் என்பது உண்மைதான் , ஆனால் இது தீய குறியீடு என்பது முற்றிலும் தவறு . இதை பற்றின விளக்கங்களை நாம் பார்ப்போம்

குறியீடு -3

"பஞ்சகோண எதிர்மறை நட்சத்திர குறியீடு"
************************************************************
"பஞ்சகோண எதிர்மறை நட்சத்திர குறியீடு" என்று கீழே காட்டப்பட்டு இருக்கும் குறியீடு மிகவும் சர்ச்சைக்கு உரிய குறியீடுகளில் பிரதானமான இடத்தை பிடிக்கும் . இந்த குறியீட்டை நான் எதிர்மறை என்று கூறியதினால் இது தீயகுறியீடு என்று அர்த்தம் இல்லை . மின்சக்தி வெளிப்பட வேண்டும் என்றால் அங்கே நேர்மறை (+) மற்றும் எதிர்மறை சக்தி இயக்கம் பாய வேண்டும் அப்பொழுது தான் அங்கே ஒரு சக்தி பிரவாகம் ஏற்படும் . இங்கே எதிர்மறை (-) ஒரு தீய தன்மை இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்
இந்த குறியீடு நமக்கு தாந்திரீக சக்திகளை வழங்கும் மகத்தான மந்திர சாவியாகும் இதன் கட்டுமான அமைப்பினை நீங்கள் பார்த்தால் வியந்து போவீர்கள்
இந்த குறியீட்டை எந்த கோணத்தை வைத்து கணிதம் செய்தாலும் ஒன்பதுதான் விடையாய் வரும் :
கூட்டல் :
1)108°
108+108+108+108+108+108+108 +108+108+108=1080=1+0+8+0=9
2) 72°
72+72+72+72+72+72+72 +72+72+72=720=7+2+0=9
3) 36°
36+36+36+36+36=180=1+8+0=9
இதை மாற்றி கூடினாலும் விடை 9 தான் வரும்
4) 108+72+72+108+72+72+108 +72+72+108 +72+72+108 +72+72=1260= 1+2+6+0=9
பெருக்கல்
இதை எப்படி பெருகினாலும் 9 தான் விடையாய் வரும்
36x72x72=186624=1+8+6+6+2+4 =27=2+7=9
108x72x72x108=60466176 =6+0+4+6+6+1+7+6=36=3+6=9
இதை தலைகீழாக கூட்டி பெருகினாலும் 9 தான் விடையாய் வரும்
63+27+27=117=1+1+7=9
801+801+801+801+801=4005=4+0+0+5=9
27+72=99=9+9=18=1+8=9
801x27x27=583929=5+8+3+9+2+9=36=3+6=9

9 என்பது பிரபஞ்ச சக்தியின் எண் என்று ஷட்கோண குறியீடே பற்றி பார்க்கும் பொது நாம் பார்த்தோம் , ஹிந்து மார்க்கத்தில் ஜெபத்தில் என்னிக்கைகள் 27,54,108,1008 என்று உபதேசிக்க படுவதை நீங்கள் அறிந்தது தான்
இது மிகவும் தீய குறியீடு என்றும் , இந்த குறியீடு சாத்தானின் தீய சக்திகளை வெளிப்படுத்தும் என்று போதனை செய்யபடுகின்றது , இது முற்றிலும் தவறு . நான் பலமுறை கூறியுள்ளேன் இந்த சாத்தான் என்ற ஒரு நிரந்தர எதிர்மறை சக்தி என்பது ஒரு கிறிஸ்துவ நம்பிக்கை ; இவர் இருளின் பிரதிநிதியாக சித்தரிக்கபடுகின்றார் .

சாத்தான் தீயவரா அல்லது நல்லவரா என்ற வாதங்களுக்கு போகும்முன் , நாம் சற்று இருளை பற்றி ஆய்வு செய்வோம் .
வெளிச்சம் என்ற ஒன்று எதை சார்ந்து இருக்கின்றது ? எதையும் சாராமல் இருக்கின்றது என்று நீங்கள் கூறினால் ; இந்த பதில்லை எந்த அடிப்படையில் நீங்கள் கூறுகின்றீர்கள் ? இருட்டு அல்லது இருள் ஒன்று இருந்தது , இப்பொழுது அது இல்லை , உங்கள் பதில் இருள் அல்லது இருட்டை ஒரு பிரதானமான அளவுகோலாய் வைத்துதான் சொல்லப்படுகின்றது .

இதை நான் வேறு விதமாக உங்களுக்கு விளக்குகின்றேன் , நீங்கள் சிகப்பு நிற வர்ணத்தை பார்க்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம் ? சிகப்புநிறம் அற்ற ( அதாவது இதன் தன்மை அற்ற ) ஒன்று இருப்பதால் தான் இந்த வர்ணத்தை நாம் பார்க்க முடிகின்றது , எல்லாமே சிகப்புநிறமாக இருந்தால் சிகப்புநிறம் ஒன்று இருப்பதை நீங்கள் உணரவே முடியாது . இதை இன்னும் சூட்சுமாக சொல்ல வேண்டும் என்றால் , தன்னிடமிருக்கின்ற சிகப்பு அற்ற தன்மையை ஒரு வாஸ்து பிரதிபலிப்பின் காரணமாகவே சிகப்புநிறம் நமக்கு தெரிகின்றது
வெளிச்சமும் இருளும் ஒன்றை ஒன்று சார்ந்தது தான் இருக்கின்றது , வெளிச்சத்தின் உயிர்நாடி இருளில் உள்ளது , இருளில் உயிர்நாடி வெளிச்சத்தில் உள்ளது . இவை இரண்டில் எது தீயது அல்லது நல்லது என்ற வாதம் விவாதம் அர்த்தம் மற்றது .

இருள் எதிர்மறையான வர்ணம் என்று சொல்லுவது அறியாமையின் உச்சக்கட்டம். இருளின் முழு பிரதிபலிப்பாக இந்த எதிர்மறை 'நட்சத்திர குறியீடு' திகழ்கின்றது.

இருளின் சக்தியை மெய்ஞானிகள் மற்றும் விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார் . பெரும்பான்மையான பிரபஞ்சம் இருளால்தான் சூழபட்டுஇருக்கின்றது ; 'ஹிந்து கடவுள்களில் கிருஷ்ணர்' , காளி போன்ற பிரதான தெய்வங்கள் கருமைநிறம் தான் என்று உங்களுக்கு தெரிந்ததுதான் . கோவில்களில் கர்பகிரகம் இருளால் சூழப்பட்டு இருப்பதன் இரகசியம் என்ன ? இருள்தான் சக்தி இயக்கத்தின் ஆணி வேர் , இருளில் தான் 'கரு' உண்டாகி குழந்தையாக வளர்கின்றது , விதைகளில் உள் இருந்துதான் சக்தி வெளிப்படுகின்றது
தாந்திரீக சக்திகளின் ஆணிவேர் இருளில்தான் உள்ளது , இந்த இருளை நாம் முதலில் தழுவினால் தான் வெளிச்சத்தை நோக்கி செல்லமுடியும். இருளை தழுவுதல் என்பது நம் வாழ்க்கை நெறிக்கு , நம் கலாச்சார கட்டுமான அமைப்புக்கு புறம்பாக செல்ல வேண்டும் என்பது அர்த்தம் அல்ல , இதை தவறாக புரிந்து கொண்டு மூட தனமான பூஜைகளை செய்வதில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

இந்த இருளை தழுவ சக்தி வாய்ந்த யோக பயிற்சிகள் உள்ளன , இது மிகவும் எளிமையான ஒன்று , இதை சரியாக செய்தால் தாந்திரீக சக்திகளின் இருப்பிடமாக நீங்கள் மாறுவது உறுதி .

சகல தாந்திரீக சக்திகளின் இருப்பிடமாக இந்த குறியீடு அமையும் , இந்த குறியீடு அபூர்வ சக்திகளின் பிரதிநிதியாக அமையும் ; ஹிந்து மதத்தில் பல யந்திரங்களில் இந்த குறியீட்டை நாம் பார்க்கலாம் , நீங்கள் கிழே படத்தில் பல யந்திரங்களில் இந்த குறியீடு இருப்பதை பார்க்கிறீர்கள் , ஹிந்து தேவதா உபாசனையில் பல சக்திவாய்ந்த தேவதைகளின் யந்திரங்களில் இந்த குறியீடு நடு நாயகமாக இருப்பதை நீங்கள் காணலாம்.

நமக்குள் இருக்கும் இருள் சக்தி அமுக்க பட வேண்டிய ஒன்று இல்லை , இது செதுக்க பட வேண்டிய ஒன்று , இந்த சக்தியை நாம் சரியாக வெளிக்கொண்டு வந்தால் நாம் பிரபஞ்ச சக்தியின் இருப்பிடமாக ஆவது உறுதி.
சைத்தான் உள் கடவுள் உண்டு , கடவுள் உள் சைத்தான் உண்டு இவை இரண்டையும் பிரிக்க இயலாது , ஒன்று மற்ற ஒன்றை தின்றுதான் உயிர் வாழ்கின்றது , இது ப்ரபஞ்சத்தின் இயல்பு ஆகும் , இதை நல்லது கேட்டது என்று கூறுவது மனிதனின் இயலாமை ஆகும்.

எல்லா மனிதன்னுக்கு உள்ளும் இருள் பகுதி உள்ளது , இந்த பகுதியில் தான் இவனின் சகல வல்லமைகளும் செயலற்று இருக்கின்றது , இந்த இருள் பகுதியின் காரணத்தால்தான் வெளிச்சத்தில் இவன் உணர்ந்து செய்யும் அனைத்து செயல்களும் அமைகின்றது இதை அவன் சரியான பயிற்சியின் மூலமாக செத்துக்கி வெளிக்கொண்டு வந்தால் இவன் வாழ்வில் இவன் செய்யும் அணைத்து செயல்களும் இவனுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக் அமையும்.

இருள் தாந்திரீக சக்திகளின் இருப்பிடமாக அமைகின்றது , நாம் சிறந்த தாந்திரீகர்களாக அவதாரம் எடுப்பதற்கு முதல் படி இந்த இருளை நாம் அரவணைத்து , இதனுள் மறைந்து இருக்கும் வெளிச்சத்தை வெளிக்கொண்டு வருவதில் தான் உள்ளது

கருப்பு தாந்திரீகம் மற்றும் வெள்ளை தாந்திரீகம் என்று சொல்லுவது முற்றிலும் தவறு , இங்கே தாந்திரீகம் தான் இருக்கின்றது , இந்த இரண்டு முறைகளும் நம் ஆணவத்தால் (ego ) தான் செயல் படுத்த படுகின்றது . இந்த இரண்டு மார்க்கத்திலும் நம் ஆணவ மனத்தால்தான் காரியங்கள் நிறைவேற்ற படுகின்றது

என் முதல் நூலான விட்ச்கிராப்ட் தந்த்ராவில் முதல் பயிற்சியே இந்த இருளை அரவணைப்பது தான் , இது தான் இலுமினேட்டிகளின் முதல் பயிற்சி ஆகும் , இது மிகவும் எளிதானதாகும் ஆனால் சக்திவாய்ந்ததாகும் , இந்த பயிற்சி கலாச்சார கடவுள்களை தாண்டி பிரபஞ்ச கட்டுமான அமைப்புகளை கொண்டு செய்ய படுகின்றது .
இருளை அரவணைத்த பின் , வெளிச்சத்தில் மூழ்கி நம் ஆழ்மன சக்திகளை நாம் செய்யும் பூஜை மற்றும் செயல்களில் இணைக்க செய்ய படும் தாந்திரீக யோக பயிற்சி
இருளை நீங்கள் அரவணைத்து செதுக்கினால் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறப்பது உறுதி

குறிப்பு :

கிழே படத்தில் சில தமிழ் புஸ்தகம் காட்டியிருக்கிறேன் இது நான் எழுதின புஸ்தகம் இல்லை ( சில உதாரணங்கள் காட்டுவதற்காக ) , என் புஸ்தகம் ஆங்கிலத்தில் வரும் ஜனவரி மாதம் வர உள்ளது

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&