Tuesday, November 15, 2016

திருமண நாளை முன்னிட்டு நேற்றைய தினம் நான் செய்த ஒரு அதிஇரகசிய தாந்திரீக பூஜை.

ஓம் நம சிவாய &&&&&&&&&&&&&










****************************************************************************
திருமண நாளை முன்னிட்டு நேற்றைய தினம் நான் செய்த ஒரு அதிஇரகசிய தாந்திரீக பூஜை.
*****************************************************************************

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் , உங்களிடம் ஒளிந்து இருக்கும் மாபெரும் சக்திகளை வெளிகொண்டு வரவேண்டும் .
தாந்திரீகம்- உங்களிடம் உள்ள மாபெரும் சக்திகளை வெளிகொண்டு வரும் அற்புதமான ரசவாதம்

தாந்திரீக கோட்பாடுகள் அனைத்து மார்க்கங்கள் மற்றும் மதங்களின் அச்சாணியாக செயல் படுகின்றது , இந்த கோட்பாடுகளை செயல் வடிவில் நடைமுறைபடுத்தும் ( அவர்கள் வாழும் காலம் , தேசம் , காலாச்சார மற்றும் சில காரணீகளை கொண்டு ) பணியை தான் மதங்கள் மற்றும் மார்க்கங்கள் செய்கின்றது .

'மதம்' என்ற கோப்பைக்குள் சற்று எட்டி பாருங்கள் மிகவும் சுவையான தாந்திரீகம் என்ற மதுரசம் இருக்கின்றது

.நண்பர்களே நடைமுறையில் சாத்தியம் இல்லாத சில பயிற்சி முறைகளை (தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் ) , சித்தர்கள் , ரிஷிகள் பெயர்களில் மூடர்கள் அற்ப சந்தோஷத்திற்காக எழுதி வைத்து உள்ளார்கள் , இதை சிறிது கூட ஆய்வு செய்யாமல் அப்படியே சில மூடர்கள் அவர்களை நம்பி வரும் மாணவர்களுக்கு கற்று தருகின்றார்கள் , இது உங்கள் வாழ்க்கையில் எந்தவித ஏற்றத்தையும் ( அல்லது நன்மையையும் ) தந்து விடாது என்பதை புரிந்து கொள்ளவும் மிகவும் விழிப்புடன் இருக்கவும்.

[மை , ஆவி , மந்திர உச்சாடனம்] போன்ற பல விஷயங்களில் மிக பெரிய தொகைகளை நான் பந்தையும் வைத்து உள்ளேன் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான் , இன்று வரை ( பல மாதங்கள் சென்று விட்டது ) யாரும் போட்டிக்கு வரவில்லை

<<உதாரணம்>>
************************
கீழே இரு தாந்திரீக புத்தகங்களில் ( நீங்கள் பார்க்கும் முதலாவதான பழைய புத்தகம் ; புத்தக கடைகளில் கிடைக்க கூடியது , இதில் காட்டபட்டுள்ள புது புத்தகம் ஒரு மாந்திரீகரால் பயிற்சி வகுப்புக்காக தயார் செய்யபட்டு விநியோகம் செய்யபட்டது). அந்த பதிவில் ஒரு பக்கம் காட்டபட்டு உள்ளது , இதில் ஒரு வசிய வித்தை உபதேசம் செய்யபட்டு உள்ளது. இரு புத்தங்களிலும் ஒரு ஒரே விஷயம் தான் சொல்லிதரப்பட்டுள்ளது இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது மற்றும் சிந்திக்க வேண்டியது (உங்கள் ஆசானிடம் கேள்வி கேட்க வேண்டியது )இவைகளை தான் :

1. இந்த பிரயோக முறையில் கொடுக்கப்பட்டு இருக்கும் விஷயம் இரு புத்தங்களிலும் வேறு பட்டு(சற்று மாற்றபட்டு உள்ளது ) இருக்கின்றது , இதில் எது சரி? எது தவறு? .என்று உங்கள் ஆசானை கேள்வி கெள்ளுங்கள்

2. உங்கள் ஆசான் ஒன்றை சுட்டி காட்டினாள் . இது சரி என்று ஒன்றை அவர் காட்டினால்; நீங்கள் அடுத்த கேள்வியை முன் நிறுத்துங்கள்- இதை பிரயோகம் செய்து சித்தி செய்தவர் யாரென்று கேளுங்கள் கண்டிப்பாக ஒருவரை கூட இவரால் கூற இயலாது)

3. அடுத்த கேள்வியை நீங்கள் கேட்டால் ( உங்களை கண்டிப்பாக சபிப்பார் ) ; அதாவது இது எந்த தாந்திரீக விதியை பின்பற்றி செயல்படுகின்றது? என்று அவரிடம் கேளுங்கள் .

4. பின்பு "நீங்கள் இதை செய்து பார்த்து பயன் அடைந்து உள்ளீர்களா ? என்று உங்கள் ஆசானை பார்த்து அடுத்த கேள்வியை கெள்ளுங்கள் ( மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் உங்களுக்கு அடி விழுந்தாலும் விழலாம் )

இந்த இரு புத்தங்களிலும் உள்ள இந்த விதி 'ஏட்டு சுரைக்காய்' தான் , இதை பயன்படுத்தி நாம் எதையும் சாதித்துவிடமுடியாது , இந்த விதி மனோதத்துவம் , மெய்ஞ்ஞானம் , தாந்திரீக மற்றும் மாந்திரீக கோட்பாடுகளை பின்பற்றவில்லை அதானால் இது ஒரு கற்பனை கிறுக்கல் தான்
தமிழகத்தில் மாந்திரீகம் என்ற பெயரில் பல வகுப்புகள் எடுத்து வருகின்றார்கள் , அவர்களின் பாட நூல்கள் பல என்னிடம் உள்ளது , இந்த நூல்களில் உள்ள விஷயங்கள் இவைகள் தான் - பல தாந்திரீக யுத்திகளை அப்படியே பழைய நூல்களில் இருந்து சிறிது கூட ஆராய்ச்சி ( பயிற்சி மற்றும் முயற்சி ) செய்யாமல் காபி அடித்து சிறு மாற்றங்களை புகுத்தி புத்தகங்களாக தயார் செய்து உள்ளார்கள். இதை சார்ந்தே ( பழைய கிறுக்கல்களை புது கிறுக்கல்களாக மாற்றி அமைத்து ) வகுப்புகள் எடுக்கின்றார்கள்
இவை அனைத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்தேன் ( பயிற்சி செய்பவர்களிடம் மற்றும் மாணவர்களிடம் பேசி பார்த்தேன் ) இந்த நூல்களில் உள்ள பல விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்து வராத வெறும் கற்பனை கிறுக்கல்கள் தான் என்று உணர்ந்து கொண்டேன்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&