Thursday, November 10, 2016

சர்வ சக்தி அருளும் இலுமினேட்டிகளின் இரகசிய தாந்திரிக பிரயோக முறைகள் -பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&


*************************************************************************
சர்வ சக்தி அருளும் இலுமினேட்டிகளின் இரகசிய தாந்திரிக பிரயோக முறைகள் -பாகம்-1
***************************************************************************

'இலுமினேட்டி'கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்கின்றார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர்கள் கற்று அறிந்து வைத்து இருக்கும் மெய்ஞானம் தான் . அவர்கள் கண்டறிந்த தத்துவங்களை வெறும் போதனைகளாக இல்லாமல் , இந்த தத்துவ ஞான போகிஷின்களை நடைமுறை வாழ்வியலில் பிரயோகம் செய்து அவர்கள் மேன்மை அடைந்து உள்ளார்கள்

6. <இன்றைய கேள்வி>.
**********************************

இலுமினேட்டிகள் துர்தேவதைகளை வழிபடுகின்றார்களா ?

இது முற்றிலும் தவறு , இவர்கள் கிறிஸ்துவ மத ( மற்றும் சில மதங்கள் ) கட்டுமான அமைப்பிற்கு உட்படாமல் வாழ்கின்றதால் , இவர்கள் அப்படி சித்தரிக்கபட்டு உள்ளார்கள் . இவர்கள் மதம் என்ற ஒரு எல்லை உள்ளே சிக்கிக்கொள்ளமாட்டார்கள் , இவர்கள் மெய்ஞான பாதை தனித்துவமானது இவர்கள் பிரபஞ்சத்தில் சூட்சும சக்திகளை ஆக்ரஷ்னம் செய்து தன்னை உயர்த்தி கொள்ளுவார்கள் , சாமியார்கள் , மத குருமார்கள் என்ற நபர்களிடம் அடிமையாக இருந்து தன் வாழக்கையை வீணாகி கொள்ள மாட்டார்கள்
பூதங்கள் , தேவதைகள் மற்றும் கடவுள்களை தாந்திரீக முறை படி வழிபடுவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இவர்கள் பூதங்கள் , தேவதைகள் மற்றும் கடவுள்களை வழிபடுகின்றார்கள் என்பது உண்மை தான் ; ஆனால் அது துர்சக்திகள் என்று கிறிஸ்துவ மதத்தை சார்ந்த குருமார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்

ஹிந்துக்கள் இங்கே ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் , 'சிலை' வழிபாட்டை சைத்தான் வழிபாடு என்று 'பைபிள்' கூறுகிறது , அதனால் பெருவாரியான கிறிஸ்துவர்கள் ஹிந்துக்களை சைத்தானின் பாதையில் செல்லுபவர்கள் என்று கருதுகின்றார்கள் . நீங்கள் இலுமினேட்டிகளை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மதம் என்ற எல்லைகோட்டிற்கு வெளியே வந்து பார்க்க வேண்டும்

தேவதையின் அருளை பெற மனித பலி ( குறிப்பாக குழந்தைகளை ) , மிருக பலி இலுமினேட்டி செய்கின்றார்கள் என்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு தனி மனிதன் பிரபஞ்ச இரகசியங்களை கற்றுக்கொள்ளாதபடி மத போதர்கள் செய்து உள்ளார்கள் . 'இலுமினேட்டி' என்ற முக முடிக்குள் சில மூடர்கள் இதன் போன்ற பிரபஞ்ச சட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இவர்களை போன்ற மூடர்கள் எல்லா மார்கங்களிலும் உண்டு

ஒரு உதாரணம் :
********************

ஞானத்தை வழங்க கூடிய "ஸ்ரீ மகா காளி"யை ஒரு ஏவல் தேவதை போன்று சித்தரித்து , இந்த கருணையே வடிவான காளிக்கு ஒரு துர்தேவதையின் தோற்றத்தை கற்பித்து உயிர் பலிகளை செய்கின்றார்கள் . 'காளி' சுடுகாட்டில் இருப்பதை போன்ற ஓவியத்தில் தத்துவத்தை ( மகா பிரளயத்திற்கு பின்பு அன்ணையின் தோற்றத்தை இந்த ஓவியம் சுட்டி காட்டுகின்றது , மற்றும் பல தத்துவ ஞானம் இந்த ஓவியத்திற்குள் அடங்கி உள்ளது ) உணராமல் அவள் சுடுகாட்டில் வாழ்கின்றார் என்ற அப்படியே புரிந்துகொண்டு 'சுடுகாடு காளி' என்று கூறி , சுடுகாட்டு பூஜைகளை , பலி பூஜைகளை போதிக்கும் மூடர்கூட்டமும் தமிழ்நாட்டில் உண்டு .

காளி உபாசனயை ""யோக மார்க்கம்"" என்ற படிக்கட்டுகளில் ஏறாமல் , மிருக பலி ( பிற உயிரை துன்புறுத்துவது ) , சுடுகாட்டு பூஜை போன்ற கேடான செயகளில் ஈடுபடுவோர்களின் வாழ்க்கை நரகம் ஆக மாறும் என்பது உறுதி .
தன் தவத்தை நம்பாமல் , ஸ்ரீ மகா காளியை மிருக சவத்தினால் வழிபடுவனின் வாழ்க்கை நரகமாய் மாறும் என்பது உறுதி. இந்த பூஜைகளை செய்பவர்களை நான் பார்த்துள்ளேன் , அவர்களின் வாழ்க்கை மிக பெரிய துயரத்தில் தள்ளப்பட்டு உள்ளது.

'இலுமினேட்டிகள்' தன்னை அற்பணிப்பதே சிறந்த பலியாக உணர்ந்து உள்ளார்கள் , இவர்களிடம் தேவதையுடன் ஒப்பந்தம் என்ற ஒரு மாபெரும் இரகசிய பிரயோகமுறை ஒன்று உண்டு , இது மிகவும் சக்திவாய்ந்த பிரயோகமுறை ஆகும் இதை கொண்டு தன் ஆசைகள் லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளுவார்கள் . இது நாம் ( ஹிந்துக்கள் ) தேவதை உபாசனை என்று சொல்லுகின்றோமே அதேபோல் தான் .
இவர்களின் இந்த பிரயோக ( தேவதா ஒப்பந்தம் ) முறையை நான் கடந்த "14" ஆண்டுகளாக செய்து வருகின்றேன் , இதன் ஆற்றல் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு மிகவும் அற்புதமானது .

நேற்று என் பொருளாதாரத்தை பல மடங்கு ஏற்றிகொள்ள ஒரு தேவதையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்போது எடுக்கபட்ட படங்கள் கீழே தரபட்டு உள்ளது.

இங்கே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தேவதையுடன் ஒப்பந்தம் என்பது உங்கள் ஆன்மாவை ( கிறிஸ்துவ நம்பிக்கை ) தேவதையிடம் விற்பது அல்ல , உங்கள் வாழ்க்கை பாதையில் மனம் , ஆன்மா , மற்றும் உடல் அனைத்தயும் தேவதையின் அருளால் ( உங்கள் அகத்தில் மற்றும் புறத்தில் அற்புதமான மாற்றம் நிகழும் , இந்த மாற்றத்தை பயன்படுத்தி ) , உங்கள் இலட்சியத்தை நோக்கி பயணிப்பது ஆகும்

நான் இந்த பூஜையில் இலுமின்டிகளின் இரண்டு தாந்திரீக பிரயோக முறைகளை ஒன்றாக செய்து உள்ளேன் ( தேவதையுடன் ஒப்பந்தம் மற்றும் ஒரு தாந்திரீக வாஸ்துவில் அந்த தேவதையின் ஆற்றலை செலுத்துவது )
இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் , இங்கே இரத்த ( இரத்தத்தை பற்றி சில மாதங்களுக்கு முன் கட்டுரைகள் எழுதினேன் அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் , சுருக்கமாக இரத்தம் பிராண சக்தியின் வாகனமாக இருக்கின்றது என்பதை உணர வேண்டும் )பலி கொடுக்கபட்டு இருக்கின்றது , எனக்கு சில விஷயங்களை இந்த தேவதை அருள வேண்டும் , அதனால் நான் என்னை அர்ப்பணிக்க வேண்டுமே தவிர , அப்பாவி மிருகங்களை பலி கொடுத்தால் மிக பெரிய நிவேதமாக தேவதைக்கு அமையாது . ஒரு ஒப்பந்தத்தை தேவதையிடம் நான் செய்துகொண்டேன் என்றால் , இந்த தேவதையின் அருளால் என் உள்ளேயும் , என்னை சுற்றியும் ஒரு மாபெரும் ( சிந்தனைகள் ,சூழல்கள் போன்றவற்றில் ) மாற்றம் ஏற்படும் , நம் லட்சியத்திற்கும்,நம் ஆசைகளுக்கும் இடையூறு செய்யும் காரணீகள் எதுவாக இருந்தாலும் அவைகள் தேவதையின் அருளால் அகற்றபடும்.

இதில் இன்னும் சில மூடர்கள் இப்படியும் உபதேசம் செய்வார்கள் சில நாட்கள் தொடர்ந்து பலி கொடுத்து , மந்திர உச்சாடனம் செய்தால் நாம் விரும்பிய தேவதை நேரில் வந்து நமக்கு காட்சி அளிக்கும் என்று ; இது முற்றிலும் தவறு 'யோகமுறை' இன்றி தேவதையை கண்களால் பார்க்க இயலாது , மற்றும் பயிற்சியாலும் முயற்சியாலும் இன்றி அவர்களின் அருளை அனுபவிக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .

கண்டிப்பாக தேவதைகளை பார்க்கலாம் , அனால் அதற்கு பயிற்சி முறைகள் உள்ளது , அதை விடுத்து குறுக்கு வழிகள் என்று நம்பி 'பலி' வெறும் மந்திர உச்சாடனம் போன்ற விஷயங்களை பிரயோகம் செய்து தேவதைகளின் அருளை மற்றும் அவர்களை பார்த்து விடலாம் என்று சில குரு என்ற முகமூடியில் இருக்கும் குருடர்கள் பேச்சை நம்பிவிடவேண்டாம்
உலகத்தில் உள்ள மிக பெரிய தாந்திரீகர்கள் தேவதைகளை உச்சாடனம் செய்யும் யோக இரகசியத்தை தெரிந்து வைத்துள்ளார்கள் எனபதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் அதை சார்ந்த உங்கள் பயணத்தை நீங்கள் இன்றே தொடங்குவீர்கள் .

இந்த முறைகளை நான் கற்று கொள்ள மற்றும் பிரயோகம் செய்து இதன் நன்மைகளை நான் அனுபவிக்க இந்த பிரபஞ்சம் என்னக்கு கடந்த "14" வருடங்களாக வாய்ப்பு அளித்து உள்ளதை நினைத்து நான் சந்தோசம் அடைகின்றேன்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&