Tuesday, July 19, 2016

அடிப்படை தாந்திரீக பயிற்சி- பாகம்-3


அடிப்படை தாந்திரீக பயிற்சி- பாகம்-3
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
அடிப்படை தாந்திரீக பயிற்சி- பாகம்-3
*******************************************************
*******************************************************
நம் உடம்பில் உள்ள சக்தி இயக்கங்களை சீர் செய்ய பல தாந்திரீக பயிற்சிகள் உள்ளது அவற்றில் சிலவற்றை வரும் பதிவுகளில் குறிப்பிடுகின்றேன் .,
நாம் நம் சக்தி இயக்கங்களை சீர் செய்யாமல் , எந்த பூஜை புனஷ்காரம் செய்தாலும் , "மை" வேலைகள் , தாந்திரீக கிரியைகள் , வழிபாடுகள் , சக்தி வாய்ந்த தேவதையை ஆவாகனம் செய்தாலும் நமக்கு எந்த விதத்திலும் நன்மை பெயர்க்காது
சிதறி கிடக்கும் நம் சக்திகளை ஒன்று இணைக்கவும் / சக்தி ஓட்டத்தை மேன்படுத்தவும், மன அழுத்தத்தை சீர் செய்யவும் , சுவாசத்தை பலபடுத்தும் , மன தெளிவை உண்டாகும் , மன/உடல் வேதனையை போக்கவும் , கீழே கொடுக்கபட்டு உள்ள பயிற்சியை தினம்தோறும் செய்யவும்
கழுத்து பகுதியில் விலா எலும்பு முடியும் இடத்தில் " U " வடிவத்தில் ஒரு தண்டு உள்ளது , அதை கண்டு புடித்து இந்த U வடிவத்தின் கீழ் பாகத்தில் ஒரு சக்தி மைய புள்ளி உள்ளது இதை "K -27" என்று அழைப்பார்கள் . இந்த புள்ளியை படத்தில் காட்டியதை போல் தினம் தோறும் மூன்று வேளை ; வேளைக்கு ஒரு நிமிடம் அழுத்தவும் ( அல்லது சக்தி சீரமைப்பு மிகுதியாய் தேவைப்பட்டால் உங்கள் கையை கூம்பு வடிவில் வைத்து கொண்டு தட்டவும் )
இந்த புள்ளியை நீங்கள் மசாஜ் செய்தால் சக்தி பிரவாகம் உடல் எங்கும் சீராக பரவும் , இந்த புள்ளியை நீங்கள் தட்டினால் பழைய தேவையற்ற அடிமை இயக்கத்தை சீர் செய்ய உங்கள் மூளைக்கு கட்டளை பிறப்பிக்கும்
நீங்கள் இந்த புள்ளியை தேய்க்கும் பொழுதோ , குத்தும் பொழுதோ வலித்தால் , உங்கள் சக்தி இயக்கம் சீராக இல்லை என்று அர்த்தம் .
இதை தினம் தோறும் ஒரு நிமிடம் செய்தால் போதுமானது , தினம்தோறும் மூன்று வேளைகள் செய்தால் உத்தமம் , முதலில் மசாஜ் செய்ய வேண்டும் பிறகு தட்ட ( குத்த ) வேண்டும் . இதை செய்யும் பொழுது ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும் .
மிக அற்புதமான இரகசிய பிரயோக முறைகளை தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&