Saturday, August 6, 2016

ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள் பாகம் -1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
******************************************************************************
ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள்
பாகம் -1
*******************************************************************************

கோடானகோடி கற்பங்கள் அடங்கப் பெற்ற காலத்தையே அவள் எடுத்து விழுங்கி தன்னகத்தில் அடக்கின்றமையால் வடமொழியில் "காலி" என்றும் , "காலிகா" என்றும் அழைக்கப்படுகிறாள்.காலி என்பது தென் மொழியில் காளி என்றாகிவிட்டது . அவள் கால ஸ்வரூபிணியாக இருந்துகொண்டு பாரெங்கும் பெரும் மாறுதல்களைச் செய்து வருகிறாள்.

இவள் காலத்தின் வடிவமாக நிற்பதால் , இந்த அண்ட சராசரேமே அழிந்துபோனாலும் , எஞ்சி நிற்பவள் இவள் ஒருத்திதான் . எனவேதான் யாருமற்ற மயானத்தில் நிற்கின்றாள்.

காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிறார்கள். வழிபடும்முறை ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகிறது. இந்த மூர்த்தி பேதங்களுள் ஸுக்த சத்துவ பிரதான லக்ஷண ஸ்வரூபம் கொண்ட உபாசனைக்கு மிகவும் ஏற்ற மூர்த்தி ஸ்ரீ தக்ஷிண காளிகையே என்று நிர்ணயித்துள்ளார்கள்.

தக்ஷினகாளிகைக்கு பவதாரிணீ என்ற சிறப்பு நாமமும் உண்டு. இந்த உலகத்தை ஆள்பவள் என்று பொருள். கலியுகத்தில் நம்மை காக்க உள்ள கருணாமூர்த்தி. அந்த தக்ஷிண காளிகையின் அருளை வேண்டி நம்மால் முடிந்த முயற்சிகளை செய்து இந்த உபாசனாக்கிரமத்தில் வெற்றி பெறுவோமாக.

ஸ்ரீ காளியின் பெருமையை காமாக்யா தந்திரம் கூறுகையில் ; எந்த வேலை செய்பவனுக்கும் வேலை முடிவில் தக்ஷிணை(செல்வம்) கிடைப்பது போல இந்த காளியை உபாசிக்கின்ற எல்லோருக்கும் கைமேல் பலன் கிடைக்கிறது ; ஆகவே இவள் தக்ஷிணகாளி என்றழைக்கப்படுகின்றாள் .

மேலும் தென்திசையின் கடவுளான சூரியனின் புத்திரன் எமன் காளியின் பெயரை கேட்டவுடன் பீதி கொள்கிறான் , ஆகவே 3 லோகங்களிலும் இவள் தக்ஷிணாகாளி என்று அழைக்கப்படுகிறாள் , எனவே தக்ஷிணகாளியை உபாசிப்பர்வர்களுக்கு இகபர சௌபாக்கியங்களும் எம பயமில்லாத வாழ்வும் கிட்டும்.

ஸ்ரீ காளிமாதா பயங்கரமான உருவத் தோற்றம் கொண்டவள். அவள் கையில் கொண்டுள்ள பொருள்களும், தரித்திருக்கும் ஆபரணங்களும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அவள் ஒரு பயங்கரி, மிக உக்கிரகமானவள் என்று நினைத்து அவள் உருவப் படத்தைக் கூட வீட்டில் வைத்து வழிபட அஞ்சுவர்.
உண்மைமையில் ஆனந்தமும் பிரேமையும் நிறைந்த கருணாமூர்த்தியாகிய இந்த தேவியைக்கண்டு நாம் சற்றும் பயப்படத்தேவை இல்லை. அவளுடைய தோற்றமும் ஆபரணங்களும் மற்றும் ஸ்வரூபத்தில் உள்ள பல லக்ஷணங்களும் வேதாந்த ஸாரமான கருத்துக்களையும் மந்தர சாஸ்திர தத்துவங்களையும் அடிப்படையாக கொண்ட குறிப்புகளாகும்.

ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள்

நமக்கு அபூர்வ சக்திகளை வழங்கும் ஸ்ரீ காளி தேவியின் தாந்திரீக உபாசனை ; படி படியாக நான் இந்த மாபெரும் வழிபாடு முறையை(சுருக்கம்) உங்களுக்கு முழுமையாக தருகின்றேன் . இதில் விரிவான பூஜை முறை உள்ளது ; இதைமுகநூல் வழியாக சொல்லி தர இயலாது ; அதாவது இது புரிந்துகொள்ள சற்று கடுமையானது ; இதை கற்று கொள்ள விரும்புவோர் நான் சொல்லித்தரும் எளிமையான தாந்திரீக பூஜைகளை செய்து , அவள் அருளை பெற்ற பின் என்னை நேரில் அனுகவும்

இந்த தாந்திரீக காளி வழிப்பாட்டின் சிறப்புகள் :
********************************************************************
1. அனைவரும் இந்த வழிபாட்டை செய்யலாம்

2. நம் வாழ்வியல் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து கொள்ளலாம்

3. நம் ஆன்மீக பயணத்தில் வெற்றி இலக்கு என்று சொல்லபடும் முக்தி பெரு அடையலாம்

4. தினம் இந்த பூஜையை செய்ய மிக பெரிய திரவிய செலவு இல்லை

5. குறைந்த நேரத்தில் இந்த பூஜையை செய்து முடிக்கலாம்

6. வீட்டில் இந்த பூஜையை செய்ய எந்த வித கட்டுப்பாடும் இல்லை

ஸ்ரீ காளி தேவியை நாம் வழிபட அவள் சதநாமங்களை(100 பெயர் ) படிக்கட்டுகளாக வைத்துக்கொள்வோம் . நாம் இந்த படிக்கட்டுகளை எரியவாரே அவளை மகிழ்வித்து அவள் அருளை பெற வைக்கும் தாந்திரீக கிரியைகளை படிபடியாக கற்றுக்கொள்வோம்.

நீங்கள் இவள் அருளை எளிதாக பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு , பாரம்பரிய பூஜை முறைகளை சற்று சுருக்கி ; அக வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்துள்ளேன் . சுருக்க பூஜை என்பதினால் , பலன்கள் சொர்ப்பமாக ஏற்படும் என்று எண்ணவேண்டாம் , தாத்திரீக கிரியைகள் அடங்கி உள்ளதால் ; கண்டிப்பாக மிகுதியான பலன்கள் நீங்கள் வியந்து போகும் அளவிற்கு ஏற்படும் .

அவளை வழிபாட்டிற்கு தேவையான பொருள்களை சில பதிவுகள் மூலமாக உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் , அதுவரை நீங்கள் அவள் பெயரின் ஆற்றலை ஜெபத்தின் மூலமாக , மற்றும் தாந்திரீக கிரியை மூலமாக உணர்ந்து ,அவள் சக்தியை உணருங்கள்

காளி வழிபாட்டின் முதல் படிக்கட்டு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
#######################
ஓம் ஹ்ரீம் காள்யை நம:
#######################

காளியின் முதல் பெயர் படைப்பின் ஆற்றலை /அதை தொடர்ந்து வரும் வளர்ச்சியையும் குறிக்கின்றது , இந்த பெயர் சர்வ வல்லமை கொண்டது . இந்த பெயருடன் ஹ்ரீம் பீஜம் இணைத்துள்ளதை கவனியுங்கள் . இந்த ஹ்ரீம் பீஜம் பராசக்தியின் இயக்க சப்தம் ஆகும்.

இந்த பெயர் தான் அனைத்து இயக்கங்களுக்கும் பிள்ளையார் சுழி ஆகும்
இந்த பெயரை தினம்தோறும் ஜபித்து வாருங்கள் ; இந்த பெயரை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகள் :
********************************************************************************

1. தடைபட்ட அனைத்து காரியங்களும் , தொடக்கம் / வளர்ச்சி பெரும்

2. நம் ஆழ்மன சக்தி தூண்டபட்டு , நம் வாழ்க்கையில் நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைய செய்யும்

3. நம் சோம்பலை தவிர்த்து , சுறுசுறுப்பாக இயங்க செய்யும்

4.புதிதாக எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் ( தொழில் , வேலை , திருமணம் , கல்வி ) , நல்ல தொடக்கம் ஏற்பட்டு , விருத்தி அடையும்.

5. ஆன்மீக பயணத்தில் புது பரிணாமத்தை நாம் அடைய ஸ்ரீ காளியின் இந்த பெயர் ஒரு சிறந்த திறவுகோலாக அமையும்

ஸ்ரீ காளி தேவியின் பிரதமை பெயரை ஜபம் செய்யும் முன் நீங்கள் உங்கள் கோரிக்கையை நன்றாக நினைவில் வைத்து கொண்டு மனத்திற்குள் ஒரு முறை சொல்லவும் ( உதாரணம் : ஸ்ரீ காளி தேவியே எனக்கு குழந்தை வரம் தந்து அருளுங்கள் )

இருபத்திஏழு ( மற்றும் நாயக மணி ஒன்று - மொத்தமாக இருபத்தி எட்டு மணி ) மணி கொண்ட ருத்திராக்ஷ மாலை பயன்படுத்தினால் உத்தமம் .சுகாசனத்தில் அமரவும் அல்லது ஒரு நாற்காலியில் முதுக்கு தண்டு நேராக இருக்கும் படி அமரவும் கீழே கொடுக்கபட்டு உள்ள வரிசையின் படி கிரியைகளை செய்ய வேண்டும் :

ஸ்ரீ காளியின் அருளை முழுமையாக நமக்கு கிடைத்திட பயன்படுத்த வேண்டிய தூப கலவை (சக்தி இயக்க தூபம்):

வெண்குங்கலியம் ஐந்து பங்கு , ஏலக்காய் இரண்டு பங்கு , தேவதாரு ஒரு பங்கு , அகில் ஒரு பங்கு ,சந்தனம் ஒரு பங்கு . இந்த பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியவில்லை என்றால் , வெண்குங்கலியத்தை ( இது ஸ்ரீ காளிக்கு மிக பரீதமான ஒன்றாகும் ) மட்டும் பயன்படுத்துங்கள்

1.ஸ்ரீ காளியின் மூல மந்திரம் : க்ரீம்
க்ரீம் பீஜம் காளியின் க்ரியா சக்தியை குறிக்கும் , சகல விதமான இயக்கங்களும் இந்த சக்தியை கொண்டே செயல்படுகின்றது . இந்த மந்திரம் எப்படி மின்சாரம் நம் வீட்டில் உள்ள அனைத்து உபகரணங்களையும் இயக்குகிறதோ , அதே போல் இந்த பீஜம் நம்மில் உள்ள சூட்சும சக்திகளை இயக்கி நம் யோக நெறியில் வெற்றியை பெற்று தரும் .இந்த மந்திரம் காளியின் சக்தி ஸ்வரூபம் ஆகும் ; இந்த மந்திரத்தின் சக்தியால்தான் தேவர்களின் ஆயுதங்களுக்கு சக்தி கிடைக்கின்றது .
இந்த மந்திரத்தை இருபத்திஏழு முறை ஜெபிக்கவும்

2.இந்த ஜெபத்தின் நோக்கம் : குழந்தை செல்வம் கிடைக்க
உங்கள் கோரிக்கை எதை சார்ந்து உள்ளது என்று மனத்தால் சிந்திக்கவும்

3.ஸ்ரீ காளியின் பெயர் : ஓம் ஹ்ரீம் காள்யை நம:
இந்த மந்திரத்தை ஐம்பத்தினாலு முறை ஜெபிக்கவும்

4.உங்கள் ஆசை : மிக விரைவில் எங்களுக்குக் ஒரு அழகான (ஆண் / பெண் ) குழந்தை செல்வம் வேண்டும்
கண்களை மூடி கொண்டு உங்கள் ஆசையை மனதார ஒரு முறை கூறவும் ( மனத்திற்குள் )

5.ஆட்சி செய்யும் கிரகங்கள் : சனி/ராகு
இங்கே சொல்வதற்கு ஒன்றும் இல்லை ( நீல நிற ஆடை அணியலாம் , சனி ஓரை காலங்களை தேர்வு செய்யலாம்)

6.உப தேவதையின் மந்திரம் : ஓம் கம் கணபதயே நம:
இது கணபதியின் மூல மந்திரம் ; இது சகல விக்னங்களையும் போக்கும் , இது நமக்கு ஏற்பட்டு உள்ள சகல விதமான தடைகளையும் உடைத்துஎறியும் .
ஒன்பது தடவை சொல்லவும்

7.விசேஷ நேரம் ./காலம் : அமாவாசை , வளர்பிறை , மேஷ ராசி , சூரிய உதய வேலை ,கிழக்கு , சனி ஓரை /கிழமை.
இங்கே சொல்வதற்கு ஒன்றும் இல்லை , மேலே சொல்லபட்ட நேரங்களில் விசேஷமாக ஜபிக்கலாம்

பூஜை பொருள் :
**********************
இந்த பெயர் (ஓம் ஹ்ரீம் காள்யை நம:) இயக்க சக்தியின் ஆரம்பம் என்று நாம் பார்த்தோம் , இது புனிதத்திலும் புனிதமான பெயர் ; இது ஒரு உயிர் வளர்ச்சிடையும் பெண்களுக்கு கர்பப்பைக்கு சமமாக உவமைபடுத்தலாம் .
நாம் வாங்கும் முதல் பூஜை பொருள் ஒரு கலசம் ( படத்தில் காட்டியதை போல் மண்ணில் செய்ய பட்டதாகவும் இருக்கலாம் ) , இந்த கலசம் ஒரு கர்ப்பப்பை போல் செயல்படும் இதில் நாம் ஸ்ரீ காளியை ஆவாகனம் செய்யது , அவள் அருளை பெற்று மகிழலாம். இது ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவம் ஆகும் , உலகத்தை தன் கர்ப்பப்பையில் அடக்கி ஆளும் , தாயை , நாம் நம் பூஜையில் இந்த கலசத்தில் ( கர்ப்பப்பை போல் ) அவளை வரவழைத்து அவளுக்கு பணிவிடை செய்கின்றோம்.

நாம் அவள் பெயரை பற்றி பார்க்கும் பொழுது , அதை சார்ந்து உள்ள ஒரு பூஜை பொருளை பற்றியும் இதே போல் வரும் பதிவுகளில் பார்ப்போம்
இந்த கலசத்தில் எப்படி காளியை ஆவாகனம் செய்யலாம் என்று பிறகு பார்ப்போம்( ஒரு காளி பூஜைக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கியபின் நீங்கள் பூஜையை தொடங்கலாம் அதுவரை வெறும் ஜெப யோகம் மட்டும் செய்யுங்கள் ; அவள் அருளை கண்டிப்பாக நீங்கள் பெறுவீர்கள்.

தினம் தோறும் ஏதாவது ஒன்றை புதிதாக செய்யுங்கள் ( புது கதை , கவிதை , சமையல் ) , அது உங்கள் மனத்திற்கும் , உடலுக்கும் சந்தோஷத்தை அளிக்கட்டும் , இந்த மகிழ்ச்சியை லோக மாதா ஸ்ரீ காளி இடம் பரிமாறி கொள்ளுங்கள் , உங்கள் சந்தோஷம் பெருகட்டும்.

ஸ்ரீ காளியின் பிரதம நாம மந்திர பிரயோக ஜெபத்தை நீங்கள் தினம்தோறும் சிறிது நேரம் செய்து வரும் காலங்களில் ; உங்கள் உடம்பிலும் , மனத்திலும் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யுங்கள் , உங்கள் சுற்றி நடக்கும் சம்பவங்கள் வேறு ஒரு பரிணாமத்தை எட்டி உள்ளதை நீங்கள் உணர்வீர்கள் , ஸ்ரீ காளி அன்னை உங்கள் மனத்தை வேறு ஒரு பரிணாமத்தில் இயங்க செய்வாள் , நீங்கள் புதுமையாக பிறந்தது போல் உணர்வு ஏற்படும்
ஸ்ரீ காளியின் தாந்திரீக பூஜையின் இரகசியங்களை தெரிந்து கொள்ள :9840300178




ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&