Friday, August 26, 2016

அதி அற்புத கபால ( மண்டை ஓடு ) வழிபாடு பாகம்-1

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

இந்த தொடரில் சொல்லித்தரப்படும் இரகசியங்கள் தாந்திரீகத்தில் பெரும் அறிவும் , ஆறுவமும் உள்ள நபர்களுக்கு மட்டுமே புரியும்

அதி அற்புத கபால ( மண்டை ஓடு ) வழிபாடு பாகம்-1
*******************************************************************************
___________________________________________________
தந்திர மார்கத்தின் மிகவும் சக்தி வாய்ந்த கருவியை பற்றிய இரகசியங்கள்
___________________________________________________
நம் வாழ்வில் தேவையான அனைத்து விதமான சௌபாக்கியங்களை அருளும் இந்த அதிஅற்புத கபால வழிபாட்டுமுறை .இந்த வழிபாடு முறையை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாது , அவர்கள் தயவுசெய்து இந்த தொடரை படிக்க வேண்டாம் நன்றி .

கபாலத்தை உலகில் உள்ள பல தாந்தீரீகர்கள் தங்கள் பூஜைகளில் பயன்படுத்தி வருகின்றார்கள் , ஆனால் அவர்கள் இதை ஒரு பாவனைக்காக ( அல்லது ஒரு சாதாரண பூஜை பொருளாக ) தான் பயன்படுத்தி வருகின்றார்கள் . ஆனால் கபாலத்தின் அற்புத ஆற்றல்களை நீங்கள் தெரிந்து கொண்டால் , உங்கள் ஆசைகள் அனைத்தையும் நீங்கள் விரும்பியவாரே நிறைவேற்றிக்கொள்ளாம் , நீங்கள் செய்யும் தாந்திரீக கிரியைகள் உங்களுக்கு அற்புத பலன்கள் அளிக்கும் .

கபாலத்தின் சக்தியை பல விதத்தில் பயன்படுத்தலாம் , அவைகளை கீழே கொடுக்க பட்டு இருக்கும் படி நாலு விதமாக பிரித்துவிடலாம்

1. யந்திர வடிவில் ( படம் , குறியீடு )
2. இயற்கையான கபாலம்
3. ஸ்படிக்க கபாலம் ( மற்றும் இரத்தின கற்கள் )
4. கபால தெய்வங்கள்

இந்த பதிவில் நாம் கபாலத்தை யந்திர வடிவில் (படம் , குறியீடு ) எப்படி வழிபடுவது என்று ஒரு உதாரணத்தோடு பார்ப்போம்(மிகவும் அடிப்படை பிரயோக முறையே கொடுக்க பட்டு உள்ளது , இதில் இன்னும் பல அற்புத ( (மண்டல முறை ) முறைகள் உள்ளன , காலம் கை கொடுத்தால் வேறு ஒரு பதிவில் இதை பற்றி எழுதுகிறேன் )
.
கபாலத்தின் பெருமையை உணர்ராத காரணத்தினால்தான் தமிழில் சைக்கோ ஸிம்போலஜி பற்றிய பல நூல்கள் இருந்தும் இந்த கபாலத்தின் அருமையை பற்றி சுட்டி காட்டபடவில்லை.

தாந்தீரீக தேவதைகளை கபாலம் இன்றி காண்பது அரிது ; இதில் மாபெரும் சைக்கோ ஸிம்போலஜி யுத்தி அடங்கி உள்ளது .

இதன் சக்தியை பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ட்ரொட் சீட்டுகளில் பதிமூன்றாம் சீட்டை ஆய்வு செய்யவேண்டும் . இந்த பதிமூன்றாம் சீட்டின் பெயர் மரணம் ; இந்த சீட்டில் பல தாந்திரீக இரகசியங்கள் அடங்கியுள்ளது .பொதுவாக ட்ரொட் பிரசன்னத்தில் இந்த சீட்டு வந்தால் எதிர்மறையான பலன்கள் சொல்லப்படுகின்றது இது முற்றிலும் தவறு . இந்த சீட்டில் கபாலத்தை ( குதிரை மேல் வரும் கவசம் அணிந்த எலும்புகூடு தலையை ) கவனியுங்கள் ;

இந்த சீட்டு நாம் அன்றாட வாழ்வில் நினைக்கும் மரணத்தை சுட்டி காட்டவில்லை . இது ஒரு மனிதனின் இறப்பு இல்லை ; இது ஒரு சூழலின் (நம் இருப்பு நிலையின் ) இறப்பு , இது நாம் ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைக்கு செல்வதை காட்டுகிறது . இது நாம் ஒரு ஏற்றமான பரிமாணத்திற்கு செல்லுவதை காட்டுகிறது. நாம் நம் வாழ்வில் மறுபிறப்பு அடைந்து ; நாம் செப்பிலிருந்து தங்கமாக மாறுவதை உணர்த்துகிறது ; ஆன்மாவின் ஏற்றத்தை காட்டும் சீட்டு இது.

இந்த சீட்டுக்கு முந்தய சீட்டின் ( தொங்கும் மனிதன் ) இயலாமையின் பிடியில் இருந்து நாம் விடுதலை அடையப்போவதை காட்டுகிறது.

குறிப்பாக பிரசன்னத்தில் பழைய தடைகள் மரணித்து , புதிய வாய்ப்புகளின் பிறப்பை சுட்டி காட்டுகின்றது . இந்த சீட்டில் இருக்கும் கபாலத்தை தினம்தோறும் பத்து நிமிடம் பார்த்து வந்தால் நம் வாழ்வில் நாம் எண்ணிய மாற்றம் கண்டிப்பாக நமக்கு நிகழும்.

குதிரையில் வரும் அந்த கபால மனிதனின் கையில் இருக்கும் கொடியில் இருக்கும் பவித்திர குறியீட்டை கவனியுங்கள் , இதில் பஞ்சகோண அமைப்பு இருப்பதை காணுங்கள் , இதில் இருக்கும் தளிர்கள் அறுவடை காலம் நெருங்கிவிட்டது என்று சுட்டி காட்டுகின்றது.

இதில் இருந்து நமக்கு ஒன்று தெளிவாக தெரிகின்றது , இந்த கபால மனிதன் அழிக்கவரவில்லை அறுவடை செய்யவந்துள்ளான் என்று. கபால சின்னம் வரையபட்ட யந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை , இந்த யந்திரங்கள் நம் ஆசைகள் அனைத்தையும் ( நம் சக்திக்கு , சிந்தனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாக இருந்தாலும் சரி ) மிக விரைவில் சித்தி அடைய செய்யவைப்பவை .

ஜோதிடத்தில் கபாலத்தை குறிக்கும் கிரகம் சூரியன் , மற்றும் நான் மேலே குறிப்பிட்ட ட்ரொட் மரண சீட்டில் சூரியன் உதிப்பது போன்ற ஓவியத்தை நீங்கள் பார்க்ககூடும் இதில் ஒரு மாபெரும் தாந்திரீக ரகசியம் அடங்கியுள்ளது .கபாலம் சூர்ய சக்தியை ஈர்க்க கூடியது , இது உங்கள் எண்ணத்திற்கு பிராண சக்தியை தந்து அருளி காரிய சித்தி ஏற்படசெய்யும்

பிறரை அடக்கி ஆழ
*****************************
*****************************
கீழே கொடுக்கபட்டு இருக்கின்ற யந்திரத்தை சிகப்பு மையினால் ஒரு காகிதத்தில் வரையவும் , இதில் உள்ள கபாலத்தை வரையும் பொழுது நீங்கள் அடக்க நினைக்கும் நபரின் பெயரை சொல்லிக்கொண்டே வரையவும் , வரைந்து முடித்தபின் உங்கள் பணப்பையில் ( purse ) வைத்து கொண்டு அந்த நபரை சந்திக்க செல்லவும் ; அவன் உங்களிடம் பெட்டிபாம்பாய் அடங்கிபோவான்.

பொதுவாக இதை வரைந்து உங்களிடம் வைத்துகொண்டால் , பிறர் உங்களிடம் அடங்கி போவார்கள் . இதில் அதிரகசிய ( உங்கள் இரத்தத்தை கொண்டு , சரியான நேரத்தை பயன்படுத்தி ) பிரயோக முறையும் உண்டு அதைபற்றி வேறு ஒரு பதிவில் காணலாம்

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : 9840300178

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&