ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
******************************************************************************
ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள்
பாகம் -3
*******************************************************************************
அம்பிகை வழிபாட்டிலே காளி வழிபாடு அற்புதமானது. சிலர் காளியென்றாலே பயப்படுவார்கள். உக்கிரமானவள்; பயங்கர மானவள் காளி. அவளை வீட்டிலே வைத்து வழிபட முடியாதென்பார்கள். ஆனால் பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருந்தாலும், ஒரு குழந்தையைப்போல் கருணை காட்டக்கூடிய அம்மன் காளி.
தாய்- குழந்தை பாவனையில் வழிபட உகந்த தெய்வம் மகாகாளி. ஞானத்திற்கு உரிய தெய்வம்- இந்த உலகுக்கு ஞானத்தைத் தரக்கூடியவள் மகாகாளி. அதனால்தான் அவளை வழிபட்டவர்கள் ஞானம் மிக்கவர்களாக மலர்ந்தார் கள். நம் அஞ்ஞானத்தை அகற்ற, நம் குழந்தைகள் நன்கு படிக்க காளியை வழிபடுவது விசேஷமானது.
காளியை வணங்க சகல யோகங்கள், நலன்கள் பெறலாம். காளிவழிபாடு தொன்று தொட்டு ஆதியில் இருந்து வருகிறது. காளி கோயில்கள் தனித்தே காணப்படும். ஒரு சில சிவன் கோவில்களிலும் காளிதேவி காணப்படுகிறாள். இவள் கலியுக கண்கண்ட தெய்வம், தன்னை வணங்கியவர்களை இவள் கைவிடமாட்டாள்.
காளி தேவி காலத்திற்க்கும், காலமாறுதல்களுக்கும் பொறுப்பானவள். காளி என்பதற்கு காலம் அல்லது கருப்பு என்று அர்த்தம். காளி என்ற வார்த்தை 'கால்' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டவை. காளனின் (சிவன்) மனைவி காளி. காளி பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக உள்ளது. காளியை வழிபடும் முறை பல புராணங்களில், தந்திரங்களிலும் கூறபட்டுள்ளது. காளி காலங்களை, தீய சக்திகளை கட்டுபடுத்தக்கூடியவள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.அது காலத்தை குறிக்கும். காலத்தில் இருந்து யாருமே தப்ப முடியாது. காலம் புதிரானது அதை பற்றின அறிவு நம்மக்கு இருளாக உள்ளது ; இருளின் நிறம் கருநிறம். அதே போன்று அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்கு தேவியும் கருநிறமாக காட்சி அளிப்பாள் ; காலத்தின் (காளியின் ) புதிர்கள் நம்மக்கு தெரிய நேரிட்டால் அவள் பசுமையான ( பச்சை )நிறத்தில் ஆயிரம் கோடி சூரியனின் ஒளி போல் காட்சி அளிப்பாள் . தேவியின் அனைத்து வடிவங்களையும் விட காளி தேவி வடிவம் தான் இரக்க குணமுள்ளவர். அதற்கு காரணம் தன் குழந்தைகளுக்கு மோட்சம் அல்லது விடுதலையை கொடுப்பவர் இவரே. அழிக்கும் கடவுளான சிவபெருமானின் துணை இவர். உண்மையற்றதை அழிப்பவர்கள் இவர்கள்.

மோட்சப் பிரதாயினி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணி, தேஜஸ்வினீ, பராசக்தி, திகம்பரீ, சித்விலாஸினி, சின்மயி, அறம், பொருள், விரும்பியதை நல்கும் தர்மம், மோட்சம் என்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் அருளும் பலஸித்திதாயினீ என அவள் பத மலர்களைப் பணிவோம். கலியில் காளிதேவி சட்டென்று அருள்பவள். இந்த தேவியை உபாசனை செய்தால் இன்பம், துன்பம், அழகு, கோரம், அன்பு, வெறுப்பு, அறம், அதர்மம் என யாவுமே ஒன்றாகவே தெரியும். எருக்கம்பூ, வாழைப்பூ, அரளி, செந்நிறமலர்கள் ஆகியவற்றால், அஷ்டமி, நவமி, அமாவாசை, சிவராத்திரி, பரணி நட்சத்திரம் ஆகிய தினங்களில் அர்ச்சித்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு பெருக, தேடி வந்து அருள்வாள் தேவி. இவள் பூஜையில் நறுமணம் மிக்க சாம்பிராணி, குங்குலியம் போன்ற தூபங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இவளை துதிப்பதால் அளவற்ற தைரியம், வாக்குவன்மை, நிகரற்ற செல்வம், தீர்க்க தரிசனம், முக்தி போன்றவை கிட்டும். வாக்கு, மனங்களுக்கு எட்டாத சக்தி படைத்த பராசக்தியான காளியை, வணங்குவோர் வாழ்வில் வளம் பல தந்தருளும் தேவியை வழிபடுவோம். பலனடைவோம்.
தேஜோமயமானவள்! மகாகாலர், ப்ரம்மா, விஷ்ணு, யமன், வருணன், கணேசர், இந்திரன், சூரியன், சுக்கிரன், ப்ரகஸ்பதி போன்ற தேவர்களாலும், துர்வாசர், கச்யபர், சுகர், தத்தாத்ரேயர், ப்ருகு போன்ற ரிஷிகளாலும் அனுமன், பலி போன்ற சிரஞ்சீவிகளாலும் ராமன், பரதன், பரசுராமன் போன்ற அவதார மூர்த்தங்களாலும் ராவணன், கார்த்தவீர்யார்ஜுனன் போன்ற மாமன்னர்களாலும் ஆராதிக்கப்பட்டவள் இந்த தேவி. ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் நேரில் பேசிய தேவி இவள். ஆட்டிடையனை உலகம் போற்றும் காளிதாசனாக மாற்றிய தேவி. மது, கைடபர் எனும் இரு அரக்கர்களை அழிக்க இவளே திருமாலுக்கு உதவினாள் என தேவி பாகவதமும் மார்கண்டேய புராணத்திலுள்ள ஸப்தஸதியும் கூறுகின்றன. இதில் ஸப்தஸதியில் உள்ள மகாகாளி தியானம், கருநிறம், பத்துத் தலைகள், ஒவ்வொரு தலையிலும் மூன்று கண்கள், பத்து சரண கமலங்கள் கொண்டவளாக விவரிக்கிறது. அது பத்து திக்கிலும் உள்ளவர்களை தன் முப்பது கண்களால் அன்புடன் நோக்கி அவரவர் விரும்பும் வரங்களை வாரி வாரி வழங்குவேன் என்று கூறுவது போல் உள்ளது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஸ்ரீ காளியின் மூன்றாவது திரு நாமம் "க்ரீம் கல்யாணி "
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த திருநாமம் அன்னை காளியின் மகத்தான சக்தியான அழித்தல் மற்றும் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் குணத்தை விவரிக்கிறது .
க்ரீம் பீஜம் உலகில் உள்ள எல்லா வஸ்துக்களையும் மாற்றத்தை ஏற்படுத்தும்; அழிக்கும் சக்தியாகும் ; இந்த பீஜ சக்தி அனைத்து வஸ்துக்களையும் மரணம் என்ற மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி , செழுமை என்ற முகவரியை அருளி , பேரானந்தம் என்ற நிலையின் நம்மை வைத்து இருப்பாள் .
இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் :
க்ரீம் பீஜம் - மாற்றம் / அழித்தல்
கல்யாணி - மங்களமானவள் / மங்களத்தை அருள கூடியவள்
நாம் உணர வேண்டியது என்னவென்றால் ; இந்த பெயர் நமக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்தி நாம் விரும்பும் மங்களத்தை அருவாள்.இவள் உலகில் ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பவள். நாம் செய்யும் செயல்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அச்செயல்கள் வெற்றி பெற இந்த காளிதேவி அருள்புரிகிறாள். விரிந்த கூந்தல், நாற்கரங்கள், ஐம்பத்தோரு மாத்ருகா அட்சரங்களைக் குறிக்கும் வகையில் அதே எண்ணிக்கையில் மண்டையோடுகளால் ஆன கபால மாலையை அணிந்து, கோரைப்பற்கள் கொண்டு பயங்கரமாகக் காளி காட்சியளித்தாலும் பக்தர்களைக் காப்பதில் அன்பு மயமானவள். தன்னை சரணடைந்தவரைக் காப்பதற்கே அபய, வரதம் தரித்தவள். பிறப்பு, இறப்பு, சம்சார பயங்களை வேரோடு அழிப்பவள் . இத்தேவி க்ரீம் எனும் பீஜத்தை தன் பீஜமாகக் கொண்டருள்பவள்.
இத்தேவியின் மந்திரம் மந்திரங்களின் ராணி எனும் பொருள்படும் வித்யாராஜ்ஞீ என்று போற்றப்படுகிறது. அந்த மந்திரத்தின் வேர், உடல், உயிராய் உறைபவள் காளி. தேவியின் ‘க்ரீம் ஹூம் ஹ்ரீம்’ எனும் மந்திரம், த்ரிதாரி மந்திரம் என போற்றப்படுகிறது. அதை ஜபம் செய்தால் கிட்டாததே இந்த உலகில் இல்லை. சச்சிதானந்தத்தின் வடிவமாக விளங்கும் அமிர்தத்திற்கு நிகரான சஷகம் எனும் பானத்தை அருந்துவதில் பிரியமுள்ளவள். இத்தேவியைத் துதிக்கும் ஜகன்மங்கலம், சர்வமங்கலம் எனும் கவசங்கள் புகழ் பெற்றவை.
ஸ்ரீ காளியின் இந்த பெயருக்கு உரிய பூஜை பொருள் திருநீறு
*****************************************************************************
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
நிலையாமையை உணர்த்தும் அரிய மகத்துவம் வாய்ந்த பொருளாக திருநீறு அமைந்துள்ளது. இந்த மானிட உடலானது ஒரு நாள் இந்த திருநீறைப் போல சாம்பலாகும். திருநீறை அணிகிறவர்களுக்கும், அதனைப் பார்க்கிறவர்களுக்கும் உலகின் மிகப்பெரும் நிலையாமை தத்துவத்தை உணர்த்துகிறது திருநீறு.
அறிவியல் சொல்லும் விஷயம் என்ன..
நெற்றி பகுதியில்அமிர்தத்தை சுரக்கும் / நாம் எண்ணியததை நிறைவேற்றும் மிக இரகசியமான சக்தி மையங்கள் உள்ளது , இதை இயக்க தாந்திரீக முறைபடி தயாரித்த திருநீறை ( பல தரபட்ட மூலிகை பஸ்மம் , மந்திர உச்சாடணம் ) பயன்படுத்தினால் நாம் ஆச்சரியப்படும்படி நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும் .
தாந்தீரீக திருநீற்றை பயபடுத்தி நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம் ; அதை பற்றி வேர் ஒரு பதிவில் காண்போம்
திருநீறுக்கு, அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. எனவே,நெற்றியின் நடுவில் இருக்கும் ஆக்ஞா சக்ரா பகுதியில் திருநீறு பூசிக் கொள்வது நல்ல அதிர்வுகளை உள்ளுக்குள் ஈர்த்தி, தீய அதிர்வுகளை தடுத்து விடவும் உதவும்.
திருநீறு நாம் வேண்டிய மாற்றத்தை வழங்கும் ஒரு அற்புத கருவியாகும் , இது ஒரு மிகவும் உத்தமமான , மங்கலத்துவம் நிறைந்த பொருளாகும் ; இதை ' நாம் செய்யும் பூஜை வேளைகளில் பூசி மகிழ்ந்தாள் கண்டீப்பாக நாம் எண்ணிய மாற்றங்களை நம் வாழ்வில் ஏற்படுத்தி கொள்ளலாம்
வெண்மை நிறமாக உள்ள அணைத்து சூர்ணகளும் திருநீறு அல்ல , சாஸ்திர படி தயாரிக்க பட வேண்டும் ; இன்று கடைகளில் திருநீறு என்ற பெயரில் ரசாயன கலவைகளை தருகின்றார்கள் ; இதை பூசுவதினால் ஒரு நன்மையையும் ஏற்பட போவதில்லை
பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே.
திருமந்திரம்
பூதி ( திருநீறு ) நம்மை , தீய வினைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு சிறந்த கருவியாகும்
எச்சரிக்கை :
*****************
*****************
எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்றும் , திருநீறு பூசியவர்கள் எவ்வளவு பாவியாக இருந்தாலும் அவர்களை வணங்கவேண்டும் என்றும் சிலர் அப்பாயகரமான போதனையை மக்களுக்கு வழங்குகின்றார் ;இது முற்றிலும் தவறு இதை நம்பி நண்பர்களே நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் .
இதை தான் கீழே உள்ள பாடலில் திருமூலர் கூறுகிறார்
ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் 1அப்புவி யாதலால்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே.
திருவடியுணர்வில்லாக் கீழோர் சிவக்கோலம் பூண்டு சிறந்த தென்னாட்டகத்துக் கூடா ஒழுக்கம் புரிந்து பிறரை வஞ்சித்து ஏதும் உழையாது இரந்துண்டிருப்பர். அவர் அவ்வாறு இருப்பதால் நாட்டின் பெருமையும் நன்மையும் கெட்டொழியும். ஆகையால் அப் பொருந்தா வேடத்தாரை அவ் வேடத்தை நீக்கச்செய்து நாட்டுக்கு நன்மையும் இன்பமும் வாய்க்கும்படி செய்வது நல்லோர் கடனாகும்.
இதை பூசி இருப்போர் உத்தமர்கள் ( என்னை உட்பட ) என்று நம்பி ஏமாந்து விட வேண்டாம் ; இது ஒரு கருவி இதற்க்கு உள்ள மகத்துவத்தை அதை பூசி இருக்கும் நபர்கள் மேல் தினித்து விடார்த்தீர்கள் .
என்னை உட்பட அனைத்து தாந்திரீகர்கள் உத்தமர்கள் என்று நம்பி விடார்த்தீர்கள் , உலகில் மிக மோசமான ஒழுக்க கேடான( உதாரணம் -ரஸ்புடின்) மனிதர்கள் மிக ஆற்றல் மிக தாந்தீரீகர்களாக இருந்து உள்ளார்கள். நன் நடத்தைக்கும் தாந்திரீக ஆற்றலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது .
பெண் தெய்வங்களின் அருளை பெற்று தரும் :
சக்தி ஆக்ரஷ்ன யந்திரம்
************************************
(சக்தி ஆக்ரஷ்ன யந்திரத்தை பச்சை நிறத்தில் வரைய வேண்டும் )
சக்தி ஸ்வரூபமான பெண் கடவுள்களின் சக்திகளை நாம் பெற ; நம் வாழ்வில் நாம் என்னும் மாற்றங்களை உருவாக்க கீழே கொடுக்கபட்டுள்ள சக்தி ஆக்ரஷ்ன யந்திரத்தை பயன்படுத்துங்கள்.
ஒரு வெள்ளை காகிதத்தில் படத்தில் காட்டியதை போல் ஒரு வட்டத்தை வரையுங்கள் , அதை சுற்றி ஒரு பத்து கோடுகள் வரையுங்கள் , நீங்கள் விரும்பும் மாற்றம் ஏற்பட்டால் நிகழ போகும் நன்மைகளை இந்த பத்து கோடுகளுக்கு நேராக வேகமாக எழுதுங்கள் ; உங்கள் கோரிக்கை பிரபஞ்சத்திற்கு நேர்மறையாக சொல்ல சில வினாடிகள் தேவை அதனால் இந்த பயிற்சி தரப்படுகின்றது , இந்த காகிதத்தை சக்தி ஆக்ரஷ்ன யந்திரத்தின் நடுவில் வைத்து(ஓம் க்ரீம் கல்யாணியை நம: என்று கூறி கொண்டே ) மடித்து விடுங்கள் ; முன்னே பதிவில் கொடுக்கபட்டுள்ள ஸ்ரீ காளி தேவியின் யந்திரத்தின் மேல் இந்த அமைப்பை வைத்து விடுங்கள்
ஸ்ரீ காளி தேவியின் யந்திரம் இல்லை என்றால் , வேறொரு பெண் தேவைத்தின் படத்தின் கீழ் அல்லது யந்திரத்தின் மேல் வைத்துவிடுங்கள் , நீங்கள் விரும்பும் மாற்றம் கண்டீப்பாக உங்கள் வாழ்வில் நிகழ்த்து ஏறும் .
நித்யம் இந்த அமைப்பின் மேல் கைகளை வைத்து ; நீங்கள் விரும்பும் மாற்றத்தை த்யானம் செய்து ; ஸ்ரீ காளி தேவியின் மூன்றாவது பெயரை சிறிது நேரம் ஜபம் செயுங்கள்.