Thursday, August 18, 2016

ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள் பாகம் -2

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&
*******************************************************************************
*******************************************************************************
ஸ்ரீ மகா காளியின் தாந்திரீக உபாசனை இரகசியங்கள்
பாகம் -2
******************************************************************************
******************************************************************************
முக்கிய குறிப்பு :
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த பதிவில் நான் கொடுத்துள்ள பிரபஞ்ச சார தியானத்தை , தினம்தோறும் செய்து வாருங்கள் , உங்கள் வாழ்க்கை அன்னையின் அருளால் மிக பெரிய ஏற்றத்தை அடையு; இது ஏன் அனுபவம்
"காளி!' இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு. நமது பாரத நாட்டில் காளியைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. அதாவது காளி என்ற தெய்வம் மந்திரவாதிகளுக்கு மட்டுமே உரித்தான தெய்வம் போலவும், காளியை வழிபடுபவர்கள் எல்லாம் மந்திரவாதிகள் போலவும் கருத்துகள் உலவுகின்றன.
ஸ்ரீ காளி என்று சொன்னால், உக்கிரமான சக்தி என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு, ஸ்ரீ காளி வழிபாட்டை வீட்டில் செய்வதற்குத் பயப்படுகிறார்கள் / தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால் நம் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயங்கரி ; ஆற்றலே வடிவான காளியைச் சரணடைந்தால், அவள் நம் பாவங்களையெல்லாம் பொசுக்கி, நாம் நம் லட்சியத்தை அடையச் செய்கிறாள். லோக மாதா ஆவாள் , அவள் அன்னையின் வடிவம். தீமைகளை அழிப்பவள்.
வெற்றிகளை அளிப்பவள். காளி காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். காளி ஞானத்தின் வடிவம். அறியாமை இருளை போக்குபவள்.ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமில்லா பெருவாழ்வு தருபவள்.
மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே. சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே.
தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்குபவள். எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் பக்தர்களை காப்பவள். கருணையின் வடிவம். ஸ்ரீ காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம்; துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக... எடுத்த அவதாரம். இவளைப் பார்த்து, பயப்பட வேண்டியதில்லை பக்தர்கள்.
இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு. மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காளி. ஸ்ரீ காளியின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சி. கொல்கத்தா தட்சினேஸ்வரத்தில் ஸ்ரீ காளியை வழிபட்டு அவளின் அருள் பெற்ற பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே மிகச் சிறந்த உதாரணம். மகாகவி காளிதாஸ், தெனாலிராமன் போன்றோரும் இதில் அடக்கம்.
உத்தரகலாமிருதத்தில் ஸ்ரீ காளி வழிபாடு: உடலில் பயத்தைப் போக்கி, மனோ தைரியத்தை வரவழைக்கும் ஸ்ரீ காளி வழிபாடு பற்றி ஒரு துதியால் அறிய முடிகிறது.
காமேசஸ்ய ஸீவாம பாக நிலயாம் பக்தாகிலேஷ்டார்த்ததாம்
சங்கம் சக்ர மதாசவயம் ச வரதம் ஹஸ்தைர் ததானம் சிவாம்
ஸிம்ஹஸ்தாம் சசிகண்ட மௌலி லசிதாம் தேவீம் த்ரிநேத்ரோஜ் வலாம்
ஸ்ரீமத் விக்ரம சூரிய பாலன பராம் வந்தே மகா காலிகாம்.
காமேஸ்வரக் கடவுளின் இடது பாகத்தை அலங்கரித்திருப்பவளும், தன் பக்தர்கள் கேட்பதைக் கொடுப்பவளும், அவர்களைப் பாதுகாக்கின்ற அடையாளமாகச் சங்கு சக்கரம் கொண்டு வரம் அளிப்பவளும், பிறை நிலவு தரித்து, பிரகாசமாக விளங்கும் முக்கண்களோடு, சிங்கத்தின் மீது அமர்ந்து அழகு உருவமாகக் காட்சி தருபவளும், சூரிய வம்சத்தில் பிறந்த விக்ரமார்க்க அரசனைக் காத்து நன்மை தருவதில் அக்கறை உடையவளுமான ஸ்ரீ காளி தேவியை வணங்குவோமாக!’
ஸ்ரீ காளி தேவியை காற்றின் அதிதேவதையாக தந்திர சாஸ்திரங்கள் போற்றுகின்றன சூட்சுமமாக நம் உடலில் பிராண சக்தியின் அதிபதியாகத் திகழும் காளிதேவியை வழிபட்டால், எதிர்ப்புகள் எல்லாம் இல்லாமல் போவதுடன், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறி சந்தோஷ வாழ்க்கை அமையும். தென் திசைக் காவலனாக விளங்கும் எமதர்மராஜன் காளி என்ற பெயரைக் கேட்டால் விலகி ஓடி விடுவான். தேஜஸ்வினீ, பராசக்தி, பரப்பிரம்ம சொரூபிணி, மோட்சதா, திகம்பரா, சித்விலாசனி, சின்மயி ஆகிய நற்பெயர்களைக் கொண்டவள் காளி இவள் பயங்கரி உக்கிரமானவள் அகோரத்தின் அதிபதி .
ஸ்ரீ காளியை உபாசனை செய்து வழிபடுபவர்களுக்கு இன்பம், துன்பம், அறம், அன்பு, வெறுப்பு, அழகு, கோரம், அதர்மம் என்ற அனைத்தையும் ஒன்றாகவே பாவிக்கத் தோன்றும்.
******************************************************************************
இன்று இரண்டாவது படிக்கட்டுணை(காளியின் திவ்ய நாமம் ) பார்ப்போம்.
********************************************************************************
இவளின் சதநாம அரசாணையில் இரண்டாவது நாமம்
%%%%%%%%%%%%%%
ஓம் ஸ்ரீம் கராள்யை நம:
%%%%%%%%%%%%%%
இந்த நாமம் ஸ்ரீ காளியின் காக்கும் , இயக்கும் திறனை பிரதிபலின்றது ; மேலும் இந்த திரு நாமம் சூட்சுமமாக இவள் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துக்களிலும் இயக்க சக்தியாய் இருக்கின்றாள் என்பதையும் உணர்த்துகிறது . இந்த நாமம் அற்புத ஆற்றல் கொண்டது , ஆனால் புதிரானது ; இந்த நாமத்தின் அற்புத ஆற்றலை அவள் அருளால்தான் உணரமுடியும். இந்த நாமத்தில் ஸ்ரீம் பீஜம் உள்ளதை கவனியுங்கள் . இந்த பீஜம் மங்கலத்துவத்தை(குறை அற்ற சக்தி இயக்கம் ) வெளிப்படுத்தும் பீஜம் ஆகும் . இந்த நாமத்தை நீங்கள் தினம்தோறும் ஜபித்தால் உங்கள் வாழ்வு மங்களத்துவம் பெரும்
இந்த பெயரை தினம்தோறும் ஜபித்து வாருங்கள் ; இந்த பெயரை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகள் :
1. உங்கள் சொத்துக்கள் பாதுகாக்கபடும்
2. உடல்நிலை கோளாறுகள் சீராகும்
3.நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் தடை இன்றி சீராக நடைபெறும்
4. உங்கள் பொருளாதாரத்தில் மிக பெரிய ஏற்றம் ஏற்படும்
5. லோக வசியம் ஏற்படும்
6. பிறரின் குறை தீர்க்கும் ஆற்றல் கிட்டும்
அவளை போற்றி அவளின் சக்தி பிரவாகத்தை உங்களுள் அனுமதியுங்கள்; உங்களை மகிழ்விக்கும் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ஓம் ஸ்ரீம் கராள்யை நம: என்று அவளை போற்றுங்கள் , உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் எந்த ஒரு சூழலும் அமையவில்லை என்றாலும் அவளை போற்றுவதற்க்கு இந்த பிரபஞ்சத்தில் பல அச்சரியங்கள் / அற்புதங்கள் இருக்கின்றதது , அதை சிந்தித்து அவளை போற்றுங்கள். நீங்கள் போற்றும் படி உங்கள் வாழ்வில் பல விஷயங்கள் உள்ளன ஒரு உதாரணம் :நீங்கள் உங்கள் உள்ளுறுப்புகளுக்கு நன்றி தெரிவியுங்கள் , அவைகள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்கு ஆக பணிபுரிகின்றது ; லோக மாதா ஸ்ரீ காளி தேவி பிராண சக்தியின் வடிவில் இந்த உறுப்புகளை இயக்குகின்றாள் ; அவளுக்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள் ; அவளை போற்றுங்கள்
இரவு படுக்கும் முன் , இன்று உங்கள் வாழ்வில் உங்கள் கவனத்திற்கு வந்த போற்றத்தக்க சம்பவங்களை பற்றி அவளை போற்றி அன்னைக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் .
இதை நான் மௌனமாக செய்திருக்கின்றேன் ஏன் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்து உள்ளது ; உங்கள் வாழ்விலும் கண்டிப்பாக இவள் பல அற்புதங்களை நிகழ்த்துவாள் .
*********************************
பிரபஞ்ச சார தியானம்
**********************************
இது சுருக்க முறை - இதில் அதி சூட்சுமமான தாந்த்ரீக முறையும் உண்டு
ஸ்ரீ காளியின் முதல் திருநாமத்தை ஜெபத்தை கொண்டு அணுகினோம் ( எல்லா நாமத்திருக்கும் ஜெபங்கள் , தூபங்கள் , தாந்திரீக கிரியைகள் உண்டு நேரம் கருதி அனைத்து நாமத்திருக்கும் சிலவற்றை மட்டும் பதிவிடுகின்றேன் ) ; இரண்டாவது திருநாமத்தை த்யானம் கொண்டு அணுகுவோம்
காலை சூரிய உதயத்துக்கு முன்( சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் ) , எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு , வானத்தை பார்த்து "ஓம் ஸ்ரீம் கராள்யை நம: " என்று மனதிற்குள் ஜபம் செய்யுங்கள் . சூரியன் வாண விளிம்புக்கு மேல் வரும்பொழுது கருநீல நிற வண்ணம் பிரபஞ்சத்தில் இருந்து உங்கள் மேல் பாய்வதாக எண்ணுங்கள் , நான் படத்தில் காட்டியதை போல் கைகளை வைத்து கொண்டு , மேலே கொண்டு சென்று அஞ்சலி முத்திரையை பிரயோகம் செயுங்கள் . தாந்திரீக சாஸ்திரத்தில் காளி இருதய சக்கரத்தில் இருக்கின்றாள் என்று போற்ற படுகின்றது.
இந்த கருநீல வண்ணம் உங்கள் உடல் முழுவதும் ( நாடி , நரம்புகள் , அணுக்கள் ) பரவுவதாக த்யானம் செய்யுங்கள் , சிறிது நேரம் சென்ற உடன் கருநீல வண்ணம் பச்சை நிறமாக மாறுவதாக உணருங்கள்( மலையை தூரத்தில் இருந்து பார்த்தால் கருமையாக தான் தெரியும் , அதன் பக்கத்தில் சென்று பார்த்தால் பச்சை நிறமாக தெரியும் அதே போல் ஸ்ரீ காளியின் அருள் ப்ரவாகத்துள் நீங்கள் முழுமையாக மூழ்கிய பின்பு அவள் உங்கள் அருகில் உள்ளதாக எண்ணி , பச்சை நிறமாக அவள் அருள் சக்தியை பாவனை செய்கிறீர்கள் .
இந்த தருணத்தில் நீங்கள் உங்கள் கைகளை பக்க வாட்டில் ( படத்தில் காட்டியதை போல் ) நீட்டி ; அவள் அருளால் நீங்கள ப்ரபஞ்சத்தின் எல்லைகளை கடந்து வளருவதாக எண்ணுங்கள் ; அவள் அருள் சக்தி அமிர்தமாக ( பச்சை வண்ணத்தில் ) உங்கள் உடல் எங்கும் பரவி உங்கள் கோசங்கள் , சரீரங்கள் அனைத்தும் சக்தி அன்னையின் அருளால் பெறுவதாக உணருங்கள் . சிறிது நேரம் இதை அனுபவியுங்கள் . சிறிது நேரம் சென்ற உடன் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுங்கள் . பிறகு ஸ்ரீ காளி மாதாவிற்கு நன்றிகளை மனதார தெரிவியுங்கள் , அவள் உங்களை காலை பொழுதில் அருள் சக்தியால் நிரப்பியதை போல் நாள் முழுவதும் அருள் வெள்ளத்தால் நிரப்பும் மாரு பிராத்தனை செயுங்கள். இந்த பயிற்சி நாள் முழுவதும் ஒருவித சக்தி பிரவாகத்தை ஏற்படுத்தும் . இதை நீங்கள் அதி காலையில் செய்வதால் உங்கள் உடலும் . உள்ளமும் ஒரு புதுமையான பரிணாமத்தில் இயங்க ஆரம்பிக்கும்
இந்த நாமத்திற்கான பூஜை பொருள் இவள் யந்திரம் :
இப்பிரபஞ்சத்தின் இயக்க சக்தியாய் ஸ்ரீ மகா காளி இருக்கின்றாள் ,நம் பூஜையின் இயக்க சக்தியாய் அவள் எந்திரம் அமைந்துள்ளது ;உலகத்தை இயக்கி , அதை பாதுகாத்து எங்கும் வ்யாபகமாக இருக்கும் ஸ்ரீ காளி தேவியை நம்மை ரட்சிக்கும் பொருட்டு , நம் அன்பினால் அவளை ஒரு சிறு சதுர அமைப்பிற்குள் அமரவைக்கின்றோம் (ஒரு தாய் அவள் செய்யை மகிழ்விப்பதற்காக்க விளையாடவுவது போல்). சூரிய ஒளியை லென்ஸ்யை கொண்டு பஞ்சை பற்ற வைப்பது போல் , இவள் ( எந்திரம் லென்ஸை போல் வேலை செய்கின்றது ) எந்திரத்தை கொண்டு நமக்கு தேவையான விளைவுகளை ஏற்படுத்தி கொள்ளலாம்
ஸ்ரீ காளியின் யந்திரம் :
********************************
காளியின் வடிவம் ,செயல் , தோற்றம் ஆகியவற்றுக்கு ஏற்ப , காளி எந்திரம் , மகா காளி எந்திரம் , தக்ஷிண காளி எந்திரம் , ஸ்மாஷண காளி எந்திரம் ஆகிய இரகசிய எந்திரங்கள் உள்ளன
ஸ்ரீ காளியின் பல எந்திரங்களில் கீழே கொடுக்கபட்டு உள்ள எந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது , இந்த எந்திரத்தை நாம் வழிபட்டால் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூட்டலாம்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள காளியின் எந்திரம் மிகவும் ஆற்றல் மிக்கது , இந்த எந்திரத்தை வைத்து இருப்பவர்களுக்கு குறை இல்லா பெரு வாழ்வு கண்டிப்பாக கிட்டும் . இது ஸ்ரீ தக்ஷினகாளி எந்திரம் , காளிக்கு சேவை செய்ப்பர்வர்களுக்கு கண்டிப்பாக அவள் அவர்கள் விரும்பியதை தக்ஷிணையாக அருள்வாள் .
தக்ஷிண காளியின் பெருமை சொல்லி மாளாதது. இவளுடைய பெருமைகளையும் , மஹிமைகளையும் தந்திர சாஸ்திர நூல்கள் வெகுவாக புகழந்து பேசுகின்றன . அவைகளில் சில தந்திர நூல்களான :
1. மஹா காலசம்ஹிதை
2.மஹா நீல தந்திரம்
3.மஹா நிர்வாண தந்திரம்
4.சக்தி சங்கம தந்திரம்
5.கோடல தந்திரம்
6.நிருத்தர தந்திரம்
7.குலார்ணவ தந்திரம்
8.குல சூடாமணி தந்திரம்
9.காளி குல சூடாமணி தந்திரம்
10.மஹா சீன ஸாரக்ரமம்
11. 11.புரச்சர்யார்ணவம்
12.காலி கற்பூராதிஸ்துதி
13.யோகிநீ தந்திரம்
14.முண்டமாலா தந்திரம்
15.சியாமளா இரகசியம்
என்பவைகளாகும்
இந்த எந்திரத்தின் ஆட்சி தேவதை ஸ்ரீ தக்ஷிண காளி
மூல மந்திரம்
^^^^^^^^^^^^^^^^^^^^^
***********************************************************************************
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா
***********************************************************************************
இந்த எந்திரத்தை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள் ( செப்பு தகட்டில் அல்லது இதை நகல் எடுத்து வைத்துகொள்ளுங்கள் ) , தினம்தோறும் இதை பார்த்து மூலமந்திர ஜபம் செய்யுங்கள் , பிறகு நீங்கள் காளிபூஜையை முழுவதுமாக பயின்ற பிறகு இந்த எந்திரத்தை நுட்பமாக பயன்படுத்தலாம் .
வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் இந்த எந்திரத்தால்






ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&