Tuesday, July 5, 2016

நாம் பணத்தை இழுக்கும் காந்தமாக மாற

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

நாம் பணத்தை இழுக்கும் காந்தமாக மாற :
*************************************************************

இந்த பதிவில் நான் கூறியுள்ளது மிகவும் அடிப்படை பிரயோக முறை தான் , இதை சார்ந்த மிக சக்தி வாய்ந்த பிரயோக முறைகள் இதில் பல சக்திவாய்ந்த தாந்திரீக உண்ணும் முறைகள் ( வெறும் உணவை வைத்தே தேவதைகள் , பபூதங்களில் அருள் ஆசி பெற ரகசிய முறைகள் ) உள்ளன அதை நீங்கள் கற்று கொண்டால் உணவை வைத்தே நீங்கள் சகல காரியங்களில் வெற்றி பெறலாம்.

====================================================
ஓட்ஸை (OATS)ஆட்சி செய்யும் கிரகம் சுக்கிரன் , இதை ஆளும் தத்துவம் பூமி
=====================================================

தினம் தோறும் காலையில் ஓட்ஸின் சூட்சும குறியீட்டை பார்த்துக்கொண்டே ; ஓட்ஸ் ( முழுமையானதாக இருந்தால் உத்தமம் ) .

நாம் உண்ணும் உணவிற்கும் மனத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று விஞ்ஞானிகள் மற்றும் மெய்ஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள் . நம் ஆழ்மனம் குறியீடு வழியாகவே அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்கிறது ; இதில் உள்ள சூட்சுமம் தங்களுக்கு புரிந்தால் பல அற்புதங்களை இந்த உணவு பிரயோகம் வழியாக நீங்கள் செய்யலாம்

இறைவன் ( குறியீடு ) + நிவேதனம் ( குறிப்பிட்ட உணவு ) = காரிய சித்தி

கஞ்சியாகவோ (இனிப்பாக வைத்து சாப்பிட்டால் மிகவும் உத்தமம் , பலன்கள் விரைவாக நடக்கும் ); அல்லது ரொட்டி வடிவிலோ சாப்பிட்டு வந்தால் நீங்கள் பணத்தை ஈர்க்கும் காந்தமாக மாறுவீர்கள். உங்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படும் , அதிரிஷ்ட பணம் வந்து சேரும் , கடன் சுமைகள் குறையும் , சூதாட்ட தொழிலில் ஈடுபடுவோர் பெரும் லாபம் பெறுவர் .

சூதாட்ட தொழிலில் ஈடுபடுவோர்கள் ; நீங்கள் தினம் தோறும் குறியீட்டை பார்த்து ; ஓட்ஸை உண்டு வந்தால் உங்கள் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக்குவதை நீங்கள் நன்றாக உணர்வீர்கள் . குறிப்பாக சூதாட செல்லும் முன் இதை செய்துவிட்டு செல்லவும் உங்கள் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகும்.

நாம் உண்ணும் உணவை வைத்தே நம் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள :9840300178





ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Sunday, July 3, 2016

ரூன்களின் தாந்த்ரீக பிரயோகங்கள்-பாகம்-1

ஓம் நம சிவாய
##############

ரூன்களின் தாந்த்ரீக பிரயோகங்கள்-பாகம்-1
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"ரூன்" என்பது ஜெர்மானிய தாந்திரீர்கள் பயன்படுத்திய மந்திர எழுத்துக்களில் ஒரு எழுத்து ஆகும் . இந்த ரூன்கல் சாதாரண எழுத்துக்கள் அல்ல , இது பிரபஞ்ச சக்தியின் ( இயக்கத்தின் )இரகசிய குறியீடுகள் ஆகும். இந்த பதிவில் நாம் ஒரு ருணின் ஆற்றலை வெளிக்கொண்டு வந்து நம் ஆசைகளை எப்படி பூர்த்திசெய்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.

ருண்களை கொண்டு மிக அற்புதமான தாந்திரீக பயிற்சி முறைகள் உள்ளது , இந்த பதிவில் ஒரு அடிப்படை பயிற்சி முறையை மட்டும் பார்ப்போம் . இந்த ரூனை பெஹு (FEHU ) என்று அழைப்பார்கள் . சுருக்கமாக FA (பா ) என்று அழைக்கலாம்.

இந்த பா (FA ) குறியீடு தங்கத்தின் சக்தியை உள்ளடக்கி உள்ளது ; இந்த குறியீட்டை கால்நடை ( cattle ) என்று குறிப்பீடுகின்றார்கள் ; ஆதி காலத்தில் கால்நடைகள்தான் செல்வத்தின் அடையாளமாய் இருந்து உள்ளது . பிரபஞ்ச சக்தியில் உள்ள செல்வச்செழிமை என்ற அம்சத்தின் திறவுகோளை இந்த குறீயிடு அமைந்துயுள்ளது. இது நெருப்பு தத்துவத்தை குறிக்கும் , இது நம் தன்னம்பிக்கையின் இயக்க குறியீடாகும். இந்த பா (FA ) குறியீடு பயிற்சியை பிரயோகம் செய்தால் நீங்கள் அழிவின் விளிம்பில் இருந்தாலும் , மீண்டு வரலாம்.. இந்த குறியீட்டை வைத்து நீங்கள் சக்தி பரிமாற்றத்தில் ஈடுபடலாம் .
செல்வசெழிப்பு , உழைப்புக்கு ஏற்ற ஊதியம் , சொத்துக்கள் வாங்க , அதிஷ்ட பணம்(பண மழை பொழிய ) , காரிய வெற்றி , புதிதாக ( புதிராக உள்ள ) தொடங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற இந்த குறியீட்டின்

தாந்திரீக பயிற்சியை செய்து பயன் அடையுங்கள்

நவ கிரகங்களின் சக்தியை வசீகரிக்கும் ஆற்றல் இந்த குறியீட்டுக்கு உண்டு . குறிப்பாக சந்திர , சூரிய சக்திகளை நம் வாழ்வில் வெற்றி அடைய இந்த குறியீட்டை பயன்படுத்தி வசீகரம் செய்யலாம் . உங்கள் ஜீவ காந்த சக்தியை இந்த குறியீட்டை கொண்டு உயர்த்தி கொள்ளலாம் , இந்த குறியீட்டை பயிற்சி செய்வதனால் உங்கள் ஆன்மீக ஆற்றல்கள் மேலும் சக்தி பெரும்.

இந்த பயிற்சியை செய்ய , நன்றாக நிமிர்ந்து நிற்கவும் பிறகு இருகைகளையும் உயர்த்தவும் , இரு கைகளையும் 30 டிகிரியில் இருந்து 45 டிகிரி உள் உயர்த்தி வைத்தால் சிறப்பு , சில நூல்களில் / சில தாந்திரீகர்கள் இந்த கைகளின் அமைப்பை கீழே கொடுக்க பட்டு உள்ள படத்தை போல் நேராக வைக்கும்படி சொல்லி தருகின்றார்கள் இது தவறு.

இடது கையை வலது கை இருக்கும் நிலையில் இருந்து சற்றே உயர்த்தி வைக்கவும் ; சூரியனை பார்த்து செய்தால் உத்தமம் ( கண்டிப்பாக பார்த்து செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை). நன்றாக மூச்சை இழுத்து விடவும் , இழுக்கும் மூச்சு வயிறு உப்பும் படி அமைய வேண்டும் ; நீங்கள் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது , உங்கள் தலையில் உள்ள உச்சி குழியின் ( இது ஒரு பிரதானமான வர்ம புள்ளி ) வழியாக பிராணசக்தி(அல்லது சூரிய/சந்திர ஒளி கதிர்களை ) உடலுக்கு உள்ளே வருகின்றது என்று பாவனை செய்யுங்கள் ( சற்று நேரம் செய்த பின் , அந்த இடத்தில் ஒரு விதமான உஷ்ணத்தை உணர்வீர்கள் ) , இதே போல் நீட்டி உள்ள கையின் (உள்ளங்கை ) வழியாக பிராண சக்தியோ அல்லது சூரிய கதிர்களின் சக்தியோ நுழைகிறது என்று பாவனை செய்ய வேண்டும் .

சூரியனின் கதிர்களை தங்க நிறத்தில் பாவனை செய்ய வேண்டும். இந்த நேரத்தின் நீங்கள் தொடர்ந்து பா ,பி ,பை , பொ ,பு (FA ,FE,FI,FO,FU) என்ற மந்திர ஜெபத்தை செய்ய தொடங்க வேண்டும் (இதை சப்தத்தோடும் செய்யலாம் மௌனமாகவும் செய்யலாம் ) , இனி இந்த ஜெபத்தை இந்த பயிற்சி முடியும் வரை செய்ய வேண்டும் ;

படத்தில் காட்டியது போல் உள்ளே இழுத்த பிராண சக்தியின் இயக்கத்தை உடல் முழுதும் செலுத்துங்கள் ; உள்ளே புகுந்த சக்தி பூமியின் வாயிலாக சென்று விடாமல் இருக்க ஒரு பலகையின் மேல் நின்று செய்தால் உத்தமம் ; பலகை இல்லை என்றால் உங்கள் வலது காலின் பாதத்தை சற்று தூக்கியவாறு நில்லுங்கள் ;அந்த சக்தி பிரவாகம் உங்களின் உடல் முழுவதும் பாயட்டும் ; நன்றாக உடல்முழுவதும் இந்த சக்தி நிரம்பியதாக உணர்ந்த பின், உங்கள் வலது கை விரல்களை கொண்டு படத்தில் காட்டியுள்ள முத்திரையை உருவாக்குங்கள் ;இப்பொழுது உங்கள் உடல் முழுவதும் ( இரத்தம் , உறுப்புக்கள் , எலும்பு அனைத்தும் ) தங்க நிற சக்தியால் சக்தியூட்டபடுவதாக உணருங்கள்.

உடலில் பிராண சக்தியின் பிரவாகமாக மாறியபின் அந்த சக்தியை சூரியனிடம் அனுப்புங்கள் மீண்டும் சூரியனிடம் இருந்து பிராணசக்தியை கைகள் வழியாகவும் தலை உச்சி வழியாகவும் வாங்குங்கள்.மீண்டும் சூரியனிடம் சக்தியை அனுப்புங்கள் மீண்டும் வாங்கிக்கொள்ளுங்கள் இதே போன்று தொடர்ச்சியாக வாங்கிகொள்ளுங்கள் (இதை கொஞ்சம் வேறு விதமாகவும் செய்யலாம் , சூரியனிடம் இருந்து வலது கையின் வழியாக உள்ளே இழுத்து , இடது கை வழியாக ( மூச்சை இழுக்கும் பொழுது வலது கை , மூச்சை விடும் பொழுது இடது கை )உங்கள் நன்றி , கோரிக்கையை இடது கை வழியாக அனுப்பலாம் . பயிற்சி செய்து பாருங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் .). பணபுழக்கத்தை அதிகரிக்க பச்சைநிற ஆடை அணிந்து இப்பயிற்சி செய்தால் உத்தமம் ;அதேபோல் பயிர்சியின் பொழுது உங்கள் பணத்திற்காண ஆசையை தொப்புழுக்கு மேல் மூன்று விரல் இடைவெளி உள்ள "சிவி12"என்ற அக்குபஞ்சர் புள்ளியில் பச்சை நிறமாக இருக்குமாறு கற்பனை செய்யுங்கள்,மூச்சை இழுத்து சூரியனிடம் சக்தி பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பச்சை நிறம் பெரிதாக ஆகி தங்கநிறத்துடன் கலந்து அதுவும் ( பச்சை நிறத்தில் உள்ள உங்கள் ஆசையும் )சக்தி பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக பாவனை செய்யுங்கள் . உங்களுக்கு அதிக்க சக்தி வேண்டும் என்றால் பிராண சக்தியை சிகப்பு நிறமாக கற்பனை செய்யுங்கள்.

பயிற்சி செய்ய நேரம் இல்லை என்றால் ரூன் முதிரையை பிரயோகம் செய்து " பிரபஞ்ச சக்தியே தினம் தினம் என்னக்கு செல்வ வளர்ச்சி வேண்டும் " என்ற கட்டளையை கூறிக்கொண்டே இந்த குறியீட்டை தினம் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் , உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் செல்வ குவிப்பு நிகழும்
மேலும் தெரிந்து கொள்ள: 9840300178





ஓம் நம சிவாய
##############

உங்கள் வீட்டை துர் சக்திகளிடம் இருந்து பாதுகாக்க

ஓம் நம சிவாய
**********************

உங்கள் வீட்டை துர் சக்திகளிடம் இருந்து பாதுகாக்க
*****************************************************************************
*****************************************************************************


வீட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் இந்த சக்திவாய்ந்த தெய்வீக குறியீடு . இந்த குறியீட்டை நகல் ( வர்ணம்) எடுத்து லேமினேட் செய்து ;அதை உங்கள் சாமி அறையில் கிழக்கு நோக்கி மாட்டி வையுங்கள். இந்த குறியீட்டை உங்கள் முன் வாசலை நோக்கி் இருக்கும் படியும் மாட்டி வைக்கலாம்

ஓம் நம சிவாய
**********************

வீட்டை துர்சக்திகிளிடம் இருந்து பாதுகாக்க

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

வீட்டை துர்சக்திகிளிடம் இருந்து பாதுகாக்க
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வீட்டை துர் சக்திகளிடம் ( பில்லி , சூனியம் , ஏவல் , கட்டு , கண் த்ரிஷ்டி , செய்வினை கோளாறுகள் ) இருந்து பாதுகாக்க :
சிறிது அளவு உப்பையும் மிளகு தூளையும் நீரில் கரைத்து வீட்டை வாரம் இரு முறை சுத்தம் செய்யவும் .

வீட்டில் துர் சக்திகளின் செட்டை பெரிதாக இருந்தால் தினம்தோறும் இந்த கலவையை கொண்டு சுத்தம் செய்யுங்கள்


ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

டம்பாலா பண வசியம்

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

டம்பாலா பண வசியம்
*********************************

இந்த தேவதை ஆப்ரிக்கா நாட்டின் வூடூ வழிபாட்டில் வகிக்க கூடிய தேவதைகளில் மிகவும் முக்கியமான தேவதை ; இந்த தேவதை தலைமை தேவதை ஆகும் . இவரை பாம்பு கடவுள் என்றும் அழைப்பார்கள்
இந்த டம்பாலா பண வசிய முறை மிக இரகசியமான சக்திவாய்ந்த முறை . இந்த முறையை நான் , என் நண்பர்கள் , என் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி ,மிகுந்த நன்மை அடைத்து உள்ளோம் .

இந்த பதிவில் இந்த பண வசிய முறையில் அடிநிலையை விளக்கி உள்ளேன் , இதில் உயர்நிலை பிரயோக முரையும் உண்டு , அதை பின்பு பார்ப்போம்
இதற்கு தேவையான பொருள் சுத்தமான மண் ஜாடி (போர்ஸலைன் (porcelain ) பயன்படுத்தலாம் ) , டம்பாலா பண வசிய யந்திரம் , டம்பாலா ஆத்ம ஸ்வரூப யந்திரம் , சில ரூபாய் நோட்டுகள் , பழங்காலத்து மரத்தடியில் ( மரம் நன்றாக(செழிமையாக ) இருக்க வேண்டும்) உள்ள மண் , வெண்மை வர்ணம் ,இரண்டு சிறிய தட்டுக்கள் , தண்ணீர் அல்லது பழ ரசம் ( உடலுக்கு சூடு கொடுக்க கூடியதாக இருந்தால் உத்தமம் ) , வெண்மை நிற உணவு பண்டங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் மண் ஜாடியை சுத்தமாக கழுவி காயவைத்து விட வேண்டும். இந்த ஜாடியை வைக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் . சுத்தப்படுத்தும் பொழுது மது , புகையிலை பிரயோகத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் . உடலில் இரக்த கசிவு போன்ற விஷயங்கள் இருந்தால் , அது நிவர்த்தி ஆகும் வரை காத்து இருக்க வேண்டும் . இந்த தேவதைக்கு மேலே சொல்லபட்டு உள்ள பொருள்களின் நாற்றம் அரவே பிடிக்காது (இது முக்கியம்) , நீங்கள் இந்த கிரியை செய்தபின் மது , மாமிசம் , புகையிலை(பழக்கம் இருந்தால் ) ; பிரயோகிக்கலாம் . இவர் மிகவும் சுத்தம் பார்க்கும் தேவதை , எச்சரிக்கையாக செயல்படவும்.

உங்கள் மண் ஜாடியை வெண்மை நிறத்தில் வர்ணம் பூசி விட வேண்டும் ( அல்லது நான் காட்டியதை போல் வெண்மை நிறம் கலந்த போர்ஸலைன் சட்டியை கடையில் இருந்து வாங்கி பிரயோகம் செய்து கொள்ளலாம்.
அமாவாசை அன்று இந்த தேவதையின் டம்பாலா பண வசிய யந்திரத்தை வரையவும். நீங்கள் வைத்திருக்கும் மண் ஜாடி உள் சிறிது தூவிவிடவும் ; பிறகு அதன் மேல் ரூபா நோட்டுகளை போட்டு வைக்கவும் . டம்பாலா ஆத்ம ஸ்வரூப யந்திரம் யந்திரத்தை வெளியே மேஜையின் மேல் வைத்துவிடவும்.பிறகு ரோஜா பூ நறுமணம் உள்ள வாசனை திரவியங்களை தெளிக்கவும் ; அந்தஜாடியை மூடி விடவும் ; ஜாடியை மூடிய பின் "லுவாக்களின் வாயில் காவலர் பாபா லெக்பா அவர்களே; லுவாக்களின் தலைவர் என்று போற்றப்படும் டம்பாலா தேவதையை நான் தொடர்பு கொள்ள அனுமதி தாருங்கள் " என்று கூறி வைத்திருக்கும் தட்டில் கொஞ்சம் நீரையோ , உடலுக்கு சூட்டை கொடுக்க கூடிய இனிப்பான பழ ரசத்தையோ ஊற்றவும் . இதை செய்த பின் நீங்கள் வைத்திருக்கும் வெண்மை நிற மேலுகு வர்த்தியை ஏற்றுங்கள் .

மெழுவர்த்தியை ஏற்றிய பின் டம்பாலா வந்துவிட்டார் என்று நம்பி ,அங்கே உள்ள பட்சணங்களை அவர் ஆத்ம ஸ்வரூப யந்திரத்தின் பக்கத்தில் வைக்கவும் , சற்று நேரம் உங்கள் கோரிக்கையை தியானம் செய்து , நீங்கள் சிந்தித்ததை அவர் யந்திரத்தின் பின் பக்கம் எழுதவும் ; பண வரவு அதிகரித்தால் ஒரு கணிசமான தொகையை அவருக்கு சமர்ப்பிப்பதாக ஓப்பந்தம் கையெழுத்து இடவும்.

பின் இந்த ஒப்பந்தத்தை சுருட்டி வெண்மை நிற நூலினால் கட்டி அந்த மண் ஜாடியில் போட்டு விடவும் , ஒப்பந்தத்தில் சொல்லபட்ட தட்க்ஷிணையை தோராயமாக அந்த ஜாடியினுள் போட்டு விடவும் . பிறகு டம்பாலாவிற்கு நன்றி தெரிவித்து , மெழுகுவத்தி அனைத்து விடவும் .

டம்பாலாவை சந்திக்க உதவிய பாபா லக்பாவிற்கும் நன்றிகளை தெரிவிக்கவும் . நிவேதன பொருள்களை தின்றுவிடவும் , அந்த ஜாடியை ஒரு சுத்தமான இடத்தில் வைத்து விடவும் . வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை செய்து வரவும் , பணம் உங்களை தேடி வருவதை கண்டு நீங்கள் பிரமித்து போவீர்கள் .

பூஜையை செய்ய இயலாதோர் டம்பாலா பண வசிய யந்திரத்தை தினம்தோறும் பத்து நிமிடம் பார்த்து வாருங்கள் , மற்றும் இந்த யந்திரத்தை உங்கள் பண பையில் , பண பெட்டியில் வைத்து விடுங்கள் உங்கள் பொருளாதாரத்தில் நிச்சயம் முன்னேற்றம் அடைவீர்கள் .

இதில் இன்னும் மேலே கூறபடாத அற்புத இரகசிய தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளன , இதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178



ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

Friday, July 1, 2016

அடிப்படை மூச்சு பயிற்சி

ஓம் நம சிவாய
^^^^^^^^^^^^^^^^^^^^^^
அடிப்படை தாந்திரீக பயிற்சி பாகம் -1
##################################

அடிப்படை மூச்சு பயிற்சி
************************************
இந்த பதிவில் நான் உங்களுக்கு கூறியுள்ள மூச்சு பயிற்சி மிகவும் எளிமையான பயிற்சி ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது , இதை உலகெங்கும் உள்ள தாந்திரீகர்கள் அடித்தள பயிற்சியாக தன் மாணவர்களுக்கு சொல்லி தருகின்றார்கள் . இந்த மூச்சு பயிற்சியை நீங்கள் சில நாட்கள் செய்து வந்தால் உங்கள் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள் ; இந்த பயிற்சி செய்வதால் எந்த விதமான பக்க விளைவுகள் இல்லாதது .

இந்த மூச்சு பயிற்சி தாந்தீரிக க்ரியைக்கு தேவையான பிராண சக்தியை நம் உடலுக்கு வழங்கும்.இந்த பயிற்சியை செய்யும் பொழுது உங்கள் மூட்டு இணைப்புகள் விரைப்பாக இல்லாமல் தளர்வாக வைத்தால் உத்தமம்.

இந்த மூச்சு பயிற்சியை தினம் காலை மாலை பதினைந்து நிமிடங்கள் செய்து வாருங்கள் . மிகவும் இறுக்கமான ஆடைகள் அணியாமல் , இந்த பயிற்சியை செய்தால் மிகவும் சிறந்த பலன் நமக்கு கிடைக்கும். இதை செய்து அரைமணி நேரத்திற்க்கு பின்பு உணவு உண்ணவும் அல்லது தூங்க செல்லவும்.

இந்த பயிற்சி, கால் அணிகள் இல்லாமல் செய்ய வேண்டும். பாட்டு , இசையை கேட்டு கொண்டு இந்த பயிற்சியை செய்தால் நமக்கு இதனால் ஏற்படும் நன்மையான பலன்கள் ஏதுவும் ஏற்படாது . வானிலை , சுற்று சூழல் மாசுபட்டு இருக்கும் சூழலில் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம் .
இந்த பயிற்சி செய்த பின் காமிய கர்மங்கள் செய்து வாருங்கள் , அதில் வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

ஒரு குழந்தை பிறந்த உடன் , அது ஆழமான மூச்சை இழுத்து விடும் இதுதான் அந்த குழந்தையின் முதல் செயலாய் இருக்கும்
நாம் உணவு இன்றி சில வாரங்கள் உயிருடன் இருக்கலாம் , நீர் இன்றி சில வாரங்கள் இருக்கலாம் ஆனால் மூச்சின்றி சில நிமிடங்கள் கூட இருக்க முடியாது . நம் மூளைக்கும் மூச்சுக்கும் நேரடி தொடர்பு உண்டு , ஒரு மனிதனின் ஏதோ ஒரு காரணத்தால் மூச்சு விட்டால் ; முதலில் மூளை தான் பாதிப்பு அடைகின்றது

இந்த மூச்சு பயிற்சி செய்யும் பொழுது நம் முதுகு தண்டு பூமி சார்ந்து நேராக இருந்தால் மிகுதியான நன்மைகள் கிடைக்கும் , நம் கீழ் வயிற்று பகுதியும் நன்றாக விரிந்து கொடுக்கும் .
சிறு குழந்தைகள் அடிவயிறு உப்பும் படிதான் மூச்சு காற்றை சுவாசிக்கும் , இதனால் தான் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாய் இருக்கும் ; மன அமைதியும் இவர்களுக்கு இருக்கும்
தாந்திரிக மூச்சு பயிற்சியின் படிநிலைகள் :

1.ஒரு சாந்தமான இடத்தில் நேராக நிற்கவும் ( வானத்தை பார்த்து படுத்தும் செய்யலாம் )

2. படத்தில் காட்டியதை போல் கழுத்தில் இருந்து அடி வயிறு வரையிலும் ஒரு பாட்டிலை கற்பனை செய்யவும்

3.உங்கள் மூக்கு வழியாக மெதுவாக காற்றை சீராக உள்ளே இழுக்கவும் , அது அடிவயிறு வரை சென்று உங்கள் வயிறு நிரம்புவதை உணரவும்.

4. உங்கள் கவனம் வயிற்றின் மேல் இருக்கட்டும்

5. காற்றை உள்ளே இழுக்கும் பொழுது உங்கள் வயிற்றையும் , உடலையும் சாந்தமாக வைத்திருங்கள் ; இதனால் உங்கள் நுரைஈரல் முழுமையாக காற்றினால் நிரப்பப்படும்

6.உள்ளே சென்ற மூச்சை மெதுவாக வாய் வழியாக வெளியேற்றுங்கள்( எக்காரணம், கொண்டும் மூச்சை வாய் வழியாக உள்ளே இல்லுக்கூடாது )

7. இதே போல் குறைந்த பட்சம் ஒன்பது முறை செய்யவும். சிறிது நாட்கள் கழித்து கூடுதலாகவும் செய்து கொள்ளலாம்

இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உடலில் பிராண சக்தியின் இயக்கம் அதிகரிக்கும்

முதலில் சில நாட்கள் படத்தில் காட்டியதை போல் வானத்தை பார்த்து படுத்து , உங்கள் அடிவயிற்றில் சில புத்தகத்தையோ அல்லது இதற்கு ஈடான பொருள்களையோ வைக்கவும் ; இதை வைத்த பிறகு மேலே கூறிய மூச்சு பயற்சியை செய்து வாருங்கள் ; இதனால் உங்கள் வயிற்று பகுதி உறுதியாகும் ; இதில் இன்னும் ஒரு சூட்சுமம் உள்ளது ( பிராண சக்தியை இயக்க இது வழி வகுக்கும் )


இந்த பயிற்சி தாந்திரிக கலையின் அடிப்படை பயிற்சி ஆகும் , இதில் இன்னும் பல நுட்பங்கள் உள்ளன இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள :9840300178
ஓம் நம சிவாய
^^^^^^^^^^^^^^^^^^^^^^

அடிப்படை தாந்திரீக நீர் பிரயோக முறை

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

அடிப்படை தாந்திரீக பயிற்சி பாகம் -2
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம் ஆசைகளை நிறைவேற்றி கொள்ள அடிப்படை தாந்திரீக நீர் பிரயோக முறை
**************************************************************************
நீர் ஆனது கட்டளைகளை எடுத்து செல்லும் திறன் உள்ளது என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது , கட்டளைகளுக்கு ஏற்றாற் போல் நீரின் சூட்சும சரீரத்தின் வடிவம் மாற்றம் அடைகின்றது ; இந்த கட்டளைகள் நீரின் அணுவில் பதிவாகிறது ; இந்த நீரின் தன்மையை நாம் தாந்திரீக பிரயோக முறையில் பயன்படுத்தலாம்

தாந்திரீகர்கள் எந்த செயலையும் ஒரு ஆன்மீக கிரியையாக செய்து அதன் மூலமாக பயன் பெறுவார்கள் . ஒரு சாதாரணமான நீர் அருந்தும் செயலை கூட ஆசைகளை நிறைவேற்றும் ஒரு கிரியையாக செய்வார்கள்.
தாந்திரீகர்கள் நம் வாழ்வில் ஒளி விச , அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த பல தாந்திரீக கிரியைகளை நமக்கு தந்து உள்ளார்கள் . நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் ஒரு தாந்திரீக கிரியையாக மாற்றி அமைக்கலாம்.

இந்த தாந்திரீக நீர் அருந்தும் முறையை நீங்கள் நாள் முழுவதும் எல்லா முறையையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை , காலை பொழுதில் குடிக்கும் முதல் குவளை நீரை ; இந்த முறையை கொண்டு உச்சாடனம் செய்யுங்கள் , பின்பு இரவு படுக்க செல்லும் அருந்தும் கடைசி நீரை இந்த கிரியை கொண்டு உச்சாடனம் செய்யுங்கள் .
அடிப்படை தாந்திரீக நீர் பிரயோக முறை படிநிலைகள்

இந்த பயிற்சி முடியும் வரை அடிவயிறு மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்

1.இந்த பிரபஞ்சம் உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்க்காக இந்த நீரை உங்களுக்கு வழங்கியுள்ளதாக என்னி இந்த நீரை பார்த்து ஆன்மார்த்தமாக சிரியுங்கள்

2.நீங்கள் அருந்தும் நீர் சுத்திகரிக்கும் சக்தியின் ஸ்வரூபமாக இருக்கின்றது என்று உணருங்கள் ; இதனால் உங்கள் மனம் , உடம்பு முற்றும் சுற்றுசூழல் பரிசுத்தமாகும் என்ற தத்துவத்தை சிந்தியுங்கள் . நீரை எந்த பாத்திரத்தில் ஊற்றுகிறமோ அதன் வடிவத்தை இது எடுத்துக்கொள்ளும் அதை போல் இந்த நீர் உங்கள் ஆசைகளும் ஒரு ஸ்தூல வடிவம் அமைக்க உதவும் என்று எண்ணுங்கள்

3.நீங்கள் அருந்தும் நீர் சுத்திகரிக்கும் சக்தியின் ஸ்வரூபமாக இருக்கின்றது என்று உணருங்கள் ; இதனால் உங்கள் மனம் , உடம்பு முற்றும் சுற்றுசூழல் பரிசுத்தமாகும் என்ற தத்துவத்தை சிந்தியுங்கள்

4.நீரை நன்றாக உற்று கவனியுங்கள் , அதன் நிறமற்ற அழகை ரசியுங்கள் , அதை உங்கள் சிந்தனையினால் கட்டி அனைத்து அதன் பரிசுத்தத்தன்மையை சுவாசியுங்கள் , அதன் சுத்திகரிக்கும் தன்மையை பற்றி சற்று சிந்தியுங்கள்

5.நீங்கள் நீர் அருந்தும் முன் சற்று நேரம் உங்கள் மூச்சை நன்றாக அடி வயிறு வரை இழுத்து விடுங்கள் ( மூச்சு பயிற்சி- அடிப்படை தாந்திரீக பயிற்சி -1 )

6.நீங்கள் உங்கள் ஆசையை நன்றாக கற்பனை செய்யுங்கள் . இது காதல் , பணம் , திருமணம் , நோய் போன்ற எந்த விஷயமாகவும் இருக்கலாம் . அந்த விஷயம் நடந்து முடிந்தால் எப்படி இருக்குமோ அப்படி கற்பனை செய்யுங்கள்

7.உங்கள் ஆசையை / இச்சையை உங்கள் நினைவில் வைத்து கொண்டே , குவளையில் நீரை நிறப்புங்கள்

8.குவளை முழுவதும் நிரம்பிய உடன் , அந்த குவளையின் மேல் ஒரு முக்கோண வடிவில் உங்கள் இரு கைகளையும் படத்தில் காட்டியதை போல் வைக்கவும் .

9. இப்பொழுது நீங்கள் முக்கோண வடிவின் நடுவில் உள்ள நீரை முழு சிந்தனையுடன் பார்க்கவும் , இந்த நீர் உங்கள் ஆசையால் / இச்சையால் சக்தி ஊட்ட படுவதாக உணரவும் , உங்கள் ஆசை நீரின் அணுக்களிடம் வரை சென்று , அதனுடன் இணைத்து விட்டதாக கற்பனைசெய்யவும்

10.இப்பொழுது இந்த நீரை நீங்கள் மெதுவாய் அருந்துங்கள் , இந்த நீர் உங்கள் உடலையும் , உள்ளதையும் உங்கள் ஆசையினால் நிரப்புவதாக உணருங்கள் ; இந்த நீர் உங்கள் ( தேவைக்காக ) உடலில் எப்படி பல பரிணாமங்களில் மாற்றபடுகின்றதோ அதே போல் உங்கள் ஆசையும் பிரபஞ்சத்தினால் பல பரிணாமங்களுக்கு உட்படுத்தபடுகின்றதாக எண்ணுங்கள் .

11.பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவியுங்கள்

நீங்கள் காண்பது தாந்திரீக நீர் பிரயோக முறையில் சில முத்திரைகள்
இது வெறும் அடிப்படைதான் சக்திவாய்ந்த முத்திரைகள் , நிறம் , மந்திர ஜபம் , சந்திரனின் இயக்கம் , நீரின் குணம் , மூலிகைகள், குவளையில் தன்மை , நிறம் இவை அனைத்தையும் நாம் நம் இச்சைக்கு ஏற்றாற் போல் பிரயோகம் செய்தால் நாம் எண்ணிய காரியம் கண்டிப்பாக நம் காலடியில் வந்து விழும்
இதில் இன்னும் மேலே கூறபடாத அற்புத இரகசிய தாந்திரீக பிரயோக முறைகள் உள்ளன , இதை பற்றி தெரிந்து கொள்ள : 9840300178
ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&