Monday, February 27, 2017

மாந்திரீகர்களும் புரட்டுகளும் - மிருக பலி காரிய சித்திகள் தரும் ?-புரட்டு







ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&

இந்த ஒளிநாடாவில் தாந்திரீகர்கள் மூட தனமாக ( ரிஷிகள் இயற்றிய மூல நூல்களுக்கு புறம்பாக ) , காமிய கிரியைகள் ( நம் இச்சைகளை பூர்த்தி செய்ய ) செய்ய படும் மிருக பலியை பற்றி பேசிஉள்ளேன் . பிற கலாச்சார வழிபாடுமுறைகளை பற்றி இங்கு நான் குறைகூறவில்லை என்பதை இங்கு தெரிவித்து கொள்கின்றேன் -( சில மூடர் கூட்டம் இதையும் தீரித்து பேசும் )

தாந்திரீக சக்திகளால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கி கொண்டு இருக்கின்றது , இது உலகம் முழுவதும் நிரம்பி இருக்கின்றது இது பாரபட்சம் அற்றது , அனைவருக்கும் ஒரே மாதிரியான அருளை ( தேசம் , கலாச்சாரம் சார்ந்து அல்லாமல் ) தான் இது வாரி வழங்கி கொண்டு இருக்கின்றது . இந்த சக்திகளை தன் வளர்ச்சிக்காக மற்றும் சமுதாய வளர்ச்சிக்காக பிரயோகம் செய்பவரைதான் நாம் தாந்திரீகர் என்று கூறுகின்றோம் . அணைத்து தேசத்திலும் சிறந்த தாந்திரீகர்கள் இந்த பணியை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்

ஆனால் இந்த சக்தியை நாம் எளிதாக பிரயோகம் செய்ய இயலாது . இதற்க்கு சில பிரபஞ்ச கோட்பாடுகள் ( விஞ்ஞான மற்றும் மெய்ஞ்ஞான தத்துவங்கள் ) பற்றின தெளிவு முக்கியமாக அனுபவம் சார்ந்த அனுபூதி அடைய வேண்டும் , அதை தவிர்த்து நாம் மிருகத்தை போல் வாழந்து இந்த சக்தியை பெற்று விடலாம் அல்லது நாம் இந்த சக்திகளை பிரயோகம் செய்து நம் தரத்தை உயர்த்தி கொள்ளலாம் என்பது அறியாமையின் உச்சகட்டம் .

தாந்திரீக கோட்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாமல் சில மூடர்கள் அர்த்தமற்ற கிரியைகளை செய்து இந்த சக்திகளை தன் வசம் ஆக்கிக்கொள்ளலாம் என்று நம்புகின்றார்கள் . இதில் பிரதானமான ஒன்று தான் மிருகபலி .

தன் உழைப்பை நம்பாமல் , சோம்பல் என்ற ஒரு கொடிய நாகத்தால் தீண்ட பட்டு , மிருக வாழ்க்கை வாழும் சில போலி தாந்திரீகர்கள் எளிமையாக நாம் சித்திகள் அடைந்து விடலாம் என்ற ஒரு மூட நம்பிக்கையில் இந்த கிரியையை தானும் சையது , மற்றவர்க்கும் செய்ய போதனை செய்கின்றார்கள் , அதாவது குரங்கு தானும் கேட்டு , வனத்தையும் கெடுக்குமாம் அதை போல .

இன்றைய பாடத்தில் :

1. மிருக பலி சில புராணங்களில் சொல்ல பட்டு உள்ளேதே ஏன் ?
2. ஈசான பீஷ்மர் அவர் உடலில் இருந்து இரத்தத்தை எடுக்கின்றார் , இது ஏன் ?
3. பலி கொடுக்க பட்ட மிருகத்தின் இரத்தம் , சதை போன்றவை இறைவனுக்கு ஏற்றதா ?
4.நான் செய்யும் இரத்த கிரியையின் அடிப்படை இரகசியம்
5. இராமாயணத்தில் ஒரு இரகசியம்
6. மிருகங்களை பலி கொடுக்காமல் அவர்களின் சக்தியை பிரயோகம் செய்ய வழி உண்டா ?

ஓம் நம சிவாய
&&&&&&&&&&&&&