Tuesday, February 28, 2017

Witchcraft tantra lesson 50- pg 19 importance of psychological work





விட்ச்கிராப்ட் தந்த்ரா - மாட்யூல் -1- ஸெல்ப் இனிஷியேஷன் - கோர் ஸ்கில்ஸ் -பாடம் -50 -மனோஇயக்கத்தின் முக்கியத்துவம் (விழிப்புணர்வு பதிவு )

பிரபஞ்ச ஆற்றல்கள் அண்டத்தில் எந்த அளவிற்க்கு  இருக்கின்றதோ , அதே அளவிற்க்கு தனி மனிதனிடத்திலும் ஏராளமாக தேங்கி கிடக்கின்றது . இந்த சக்திகளை நாம் சரியான தாந்த்ரீக யுக்திகளை கொண்டு வெளிக்கொண்டு வந்தால்  நம் வாழ்வில் நிகழும் அனைத்து விதமான கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் ; மற்றும் நம் ஆசைகள்  அனைத்தையும் நிறைவேற்றி கொள்ளலாம் .

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது போல பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் அனைத்தும் மனிதனிடத்திலும் இருக்கின்றன .

மகா சித்தர் ஸ்ரீ திருமூலர் அவர் திருமந்திரத்தில் உபதேசித்த இந்த பாடலை உணர்ந்தாள் , மற்றவர்களை குறை கூறுவதை விட்டு விட்டு , நம் வாழ்க்கையை நம் கையிலே எடுத்து , அதில் வரும் அனைத்து  வித கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து  சந்தோசமாக வாழலாம் :

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. திரு - 2188

இதன் பொருள் :

தானே தனக்கு பகைவனும் விரும்புபவனுமாய் இருக்கிறோம். தானே தனக்கு மறுமையையும் இம்மையும் உண்டாக்குகிறோம். தானே தன்னால் உண்டாக்கிய வினைப் பயனை அனுபவிப்பவனாகவும் இருக்கிறோம். இதை உணர்ந்து செயல்பட்டால் தானே தனக்கு தலைவனாகலாம். பின்குறிப்பு – தானே தனக்கு நண்பனும் பகைவனுமாய் இருப்பதை உணர்ந்து ஆளப் பழக வேண்டும்.

சொர்க்கமும் நரகமும் நம்மிடமே இருக்கிறது .ஏழ்மையும் செல்வமும் நம்மிடமே இருக்கின்றது .இவற்றின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ளாததால்தான் பிரச்சனைகள் ஏற்படுகின்றன .மேலே சொல்ல பட்ட விஷயம் தான் ஒரு தாந்திரீகரின் அடிப்படை அனுபூதி படிப்பினை ஆகும்.நம்முள்ளே புதைத்து கிடக்கும் அதிசய ஆற்றல்களை கொண்டு நமக்கு வேண்டியதை பெற்று சுக வாழ்வு வாழலாம் .

இந்த சக்தியை பயன்படுத்த மகா சித்தர்கள் மற்றும் ரிஷிகள் பல யுத்திகளை தந்து அருளி  உள்ளார்கள் , இது சற்று கடினமாகத்தான் இருக்கும் , மருந்து என்றுமே கசக்க தான் செய்யும் . ஆனால் இதை உணராமல் சில மூடர்கள் தன் இச்சைக்கு ஏற்றால் போல சில கட்டுக்கதை பிரயோக முறைகள் ( மூல நூல் , முன்னோர்கள் போதனைகள் போன்றவற்றுக்கு புறம்பாக ) கற்று தந்து பலரை வழி தவற செய்கின்றார்கள் .

தவறான போதனையில் மிகவும் முக்கியமான ஒன்று புறப்பூஜைக்கு முக்கியதுவம் தந்து , அகம் (மனம் ) சார்ந்த சீரமைப்புகள் மற்றும் பிரயோக முறைகளுக்கு முக்கியத்துவம் தராதது . மனம் மாபெரும் சக்திகளின் பெட்டகமாய் திகழ்கின்றது , இதை சீர் செய்யாமல் புற க்ரியைகளுக்கு முக்கியத்துவம் தந்தால் நமக்கு எந்த வித நனமையும் நம்மக்கு கிட்டாது .

மனோ சக்திதான் நாம் செய்யும் க்ரியைக்கு எஜமானாக இருக்கின்றது . அதனால் நாம் செய்யும் கிரியைகளுக்கு மனோவியல் கட்டுமான அமைப்புகளை தெரிந்து அதை கொண்டு மனோ எழுச்சியை உருவாக்க வேண்டும் . இந்த மனோ இயக்கம்தான் நாம் செய்யும் க்ரியைகளுக்கு அடித்தளமாக , அமைகின்றது , அதை மேலும் மெருகுக்கேற்றும் செயல்தான் புற  கிரியைகள் என்பதை நாம் உணரவேண்டும் .

இன்றைய பாடத்தில் :

1.  விட்ச்கராப்ட் தந்த்ரா நூலின் மதிப்பு
2.  இந்த பாட திட்டத்தின் ஒளிநாடாவின்  மதிப்பு
3.  வேதங்களின் பெருமை
4.   செயல்களின் முக்கியத்துவம் .
5.   தாந்திரீகத்தின் எல்லை , உழைப்பின் பெருமை
6.    தாந்திரீக பரிகாரங்கள் அஷ்டகர்ம வித்தைகளின்  எல்லை
7.    அக பூஜையை ( உபாஸனையை ) பெருமை படுத்தும் வேதத்தின் கட்டுமான அமைப்பு
8.    அக  பூஜையின் முக்கியத்துவம்